Published:Updated:

`அன்ஃபாலோ...அனுஷ்கா ஸ்டேட்டஸ்!' - உச்சகட்டத்தில் கோலி - ரோஹித் பனிப்போர்?

பிரேம் குமார் எஸ்.கே.

ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு ரோஹித்தை கேப்டனாக்கும் முடிவில் பிசிசிஐ இருப்பதாகத் தகவல்கள் பறந்தன. இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

ரோஹித் - கோலி
ரோஹித் - கோலி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வி இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல இந்திய அணிக்குள்ளும் சில சலசலப்பை ஏற்படுத்தியது.

அரையிறுதி ஆட்டம்
அரையிறுதி ஆட்டம்

இந்திய கிரிக்கெட் அணியில் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் ரோஹித்துக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்தத் தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித்தின் சில ஆலோசனைகளை கோலி நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு ரோஹித்தை கேப்டனாக்கும் முடிவில் பிசிசிஐ இருப்பதாகவும் தகவல்கள் பறந்தன. இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. மூன்று வித போட்டிகளுக்கும் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

மனைவியுடன் ரோஹித்
மனைவியுடன் ரோஹித்

எனினும் ரோஹித் - கோலி பனிப்போர் மட்டும் குறையவே இல்லை என்னும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த நிலையில்தான், ரோஹித் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் விராட் கோலியை அன்ஃபாலோ செய்தார். இது இவர்களுக்கிடேயே இருக்கும் பிரச்னையின் வெளிப்பாடு என்று கூறப்பட்டது.

நிலைமை இப்படி இருக்க நேற்று கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவை அன்ஃபாலோ செய்தார் ரோஹித். அனுஷ்கா ஷர்மா ரோஹித்தையோ அல்லது அவரின் மனைவி ரித்திகாவையோ ஃபாலோ செய்யவில்லை. நிலைமை இப்படி இருக்க, கோலி இன்னும் ரோஹித் ஷர்மாவைப் பின்தொடர்கிறார்.

மனைவி அனுஷ்காவுடன் கோலி
மனைவி அனுஷ்காவுடன் கோலி

வெளிப்படையாக தங்களுக்குள் பிரச்னை என்று சொல்லாவிட்டாலும் இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு பிரச்னைகள் இருப்பது போன்ற யூகங்களைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், ரோஹித் தன்னை அன்ஃபாலோ செய்த பிறகு அனுஷ்கா ஷர்மாவின் ஸ்டேட்டஸில், ``பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன்தான் செயல்படும்” ( “A wise man once said nothing. Only truth can shake hands with silence in a mess of false appearances”) என்று குறிப்பிட்டுள்ளார்.

`ஒருதலைபட்சமான முடிவுகள்; இந்திய அணிக்குள் பிளவு?' - வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

இது ரோஹித்துக்கான மெசேஜ் என்று சொல்லாவிட்டாலும், அவருக்கான மெசேஜ்தான் என மோதத் தொடங்கிவிட்டனர் கேப்டன் மற்றும் துணைக் கேப்டன்களின் ரசிகர்கள். `இதுபோன்ற யூகங்கள் கிரிக்கெட் அணிக்கு நல்லதல்ல. எனவே, இதிலிருக்கும் மெளனங்கள் கலைய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்துள்ளது.