Published:Updated:

MI v LSG: "எங்களிடமிருந்து யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!"- வெற்றி குறித்துப் பேசிய ரோஹித்

ரோஹித் சர்மா

"ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாதபோது ஆகாஷிடம் அந்தத் திறமை இருக்கிறது என்று எண்ணி அவரை அணியில் எடுத்தோம்!"- ரோஹித் சர்மா

Published:Updated:

MI v LSG: "எங்களிடமிருந்து யாரும் இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!"- வெற்றி குறித்துப் பேசிய ரோஹித்

"ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாதபோது ஆகாஷிடம் அந்தத் திறமை இருக்கிறது என்று எண்ணி அவரை அணியில் எடுத்தோம்!"- ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ரோஹித் சர்மா  தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, க்ருணால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது குவாலிபயர் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் சர்மா, “நாங்கள் இந்தப் போட்டியில் செய்ததை யாரும் எங்களிடம் இருந்து எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எங்களிடம் இருக்கும் வீரர்களை வைத்து இதனைச் செய்து காட்டியுள்ளோம்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் இல்லாதபோது ஆகாஷிடம் அந்த திறமை இருக்கிறது என்று எண்ணி அவரை அணியில் எடுத்தோம். ஆகாஷ் மத்வால் கடந்த சீசனில் எங்கள் அணிக்கு ஒரு சிறந்த சப்போர்ட் பௌலராக இருந்தார். அதனால் இந்த சீசனில் நன்றாக விளையாடுவார் என்று எண்ணி அவரை விளையாட வைத்தோம். பல வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியைப் பார்க்கும்போது நிறைய இளம் வீரர்கள் உள்ளே வந்து இந்திய அணிக்கு விளையாடும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்கள். இளம் வீரர்களுக்கு அவர்களது ரோல் என்னவென்று தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர்களும் அதைச் சிறப்பாகக் கடைப்பிடித்துச் செயல்பட்டு வருகின்றனர். வான்கடே மைதானத்தில் ஒருத்தர், இரண்டு பேர் அதிரடியாகச் செயல்பட்டாலே வென்றுவிடலாம். ஆனால், சென்னையில் அப்படிக் கிடையாது. அனைத்து வீரர்களும் பங்களிப்பு செய்தால் மட்டும்தான் வெற்றிபெற முடியும்" என்று கூறியிருக்கிறார்.