Published:Updated:

``நான் நாட்டுக்காக விளையாடுகிறேன்!' - வைரலாகும் ரோஹித் சர்மாவின் சங்கேத ட்வீட்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவின் சங்கேத ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் தோல்வி என்றால் உடனே கேப்டன் கழுத்திற்குதான் கத்தி வரும். கோலி மட்டும் என்ன விதிவிலக்கா என்ற ரீதியில்தான் இந்திய அணி தொடர்பாக வெளியாகும் செய்திகள் உணர்த்தின. கோலியை ஒரு கும்பல் கார்னர் செய்யத் துடிக்கிறது. இதன் ஒரு பகுதியாக கோலிக்கும் - ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே பனிப்போர் எனத் தகவல் வெளியானது.

கோலி, அனுஷ்கா
கோலி, அனுஷ்கா

ரோஹித் ஷர்மா இன்ஸ்டாகிராமில் அனுஷ்காவை அன்ஃபாலோ செய்தது. ‘பொய்யான தோற்றங்களுக்கு மத்தியில் உண்மை அமைதியுடன்தான் செயல்படும்’ என்ற அனுஷ்காவின் ஸ்டேட்மென்ட் ஹைலைட்டானது.

சம்பந்தப்பட்டவர்கள் வாய் திறக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக நடந்த ப்ரஸ் மீட்டில் கோலி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். யாரோ வதந்திகளை கிளப்பிவிட்டு ஆதாயம் தேட முயற்சி செய்கிறார்கள். நான் எப்போதும் ரோஹித்தைப் புகழ்ந்துதான் பேசியுள்ளேன். ஏனென்றால் அவர் நல்லவர் என நான் நம்புகிறேன். எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை என முடித்துக்கொண்டார். இரட்டை தலைமை குறித்து கங்குலி, முந்தைய காலங்களில் கும்ப்ளே - தோனி, கோலி - தோனி என இரட்டை தலைமை இருந்ததை சுட்டிக்காட்டினார். ஆனால் முடிவு பிசிசிஐ தான் எடுக்க வேண்டும் என அமைதியானார்.

கோலி
கோலி

இந்நிலையில் தற்போது ரோகித் ஷர்மாவின் தற்போதைய ட்வீட் வைரலாகி வருகிறது. ‘நான் அணிக்காக மட்டும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுகிறேன்’ என்ற கேப்ஷனுடன் இந்திய அணியின் சீருடையில் உள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த சங்கேத ட்வீட் யாருக்காக போட்டிருக்கிறார் என்பது தெரியவில்லை. எது எப்படியோ, இந்திய அணிக்குள் நடந்து வரும் இந்தக் குழப்பங்கள் விரைவில் தீரவேண்டும். அப்போதுதான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி சாதிக்க முடியும்.