Published:Updated:

`பச்சை கலர் பார்த்தாபோதும்.. ஷமி பிரியாணியை வெளுத்துடுவாரு!’ -கலாய்த்த ரோஹித்

ஷமி

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை ரோஹித் ஷர்மா பகிர்ந்துள்ளார்.

Published:Updated:

`பச்சை கலர் பார்த்தாபோதும்.. ஷமி பிரியாணியை வெளுத்துடுவாரு!’ -கலாய்த்த ரோஹித்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை ரோஹித் ஷர்மா பகிர்ந்துள்ளார்.

ஷமி

லாக்டெளன் காலங்களில் பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன.. எல்லோரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். வீட்டிலே ஃபிட்ன்ஸ் வொர்க்கவுட், வீடியோ காலில் அரட்டை என பொழுதைக் கழித்து வருகிறார்கள். ஆஸ்திரேலிய வீரர் வார்னர் டிக் டாக்கில் புட்டபொம்மா பாட்டுக்கு ஆட்டம் போட்டு லைக்ஸ்களை அள்ளிக்கொண்டு இருக்கிறார். யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மா இன்ஸ்டாகிராமில் அரட்டை அடித்து வருகிறார்கள்.

வார்னர்
வார்னர்

இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் ஸ்மிரிதி மந்தனா, ஜெமீமா ரோட்ரிஜஸுடனான உரையாடலின்போது ஷமி குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா. சர்வதேச டெஸ்ட் அரங்கில் ரோஹித் ஷர்மாவும், ஷமியும் 2013-ம் ஆண்டு அறிமுகமானார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில்தான் இருவரும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்தனர். இருவருக்கும் இப்போது இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை தக்க வைத்துள்ளனர்.

``வலைப்பயிற்சியின்போது எங்களுக்கு பச்சைப் பசேலென இருக்கும் பிட்ச் மட்டுமே கிடைக்கும். எப்போதெல்லாம் இதுபோன்ற பிட்ச்களை ஷமி பார்க்கிறாரோ உடனே குஷியாகிவிடுவார். உடனே எக்ஸ்ட்ராவாக பிரியாணி சாப்பிட்டு விடுவார்.

ரோஹித் ஷர்மா
ரோஹித் ஷர்மா

பும்ராவும் கடினமான பந்துவீச்சாளர்தான். ஆனால், அவர் அணியில் 3-4 ஆண்டுகளாகத்தான் இருக்கிறார். 2013-ம் ஆண்டில் இருந்து நானும் ஷமியும் விளையாடி வருகிறோம். ஆனால், இப்போது பும்ராவுக்கும், ஷமிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பேட்ஸ்மேனின் ஹெல்மெட்டை யார் அதிகமுறை பதம் பார்ப்பது என்ற போட்டிதான் அது” என ரோஹித் வேடிக்கையாக கூறியுள்ளார்.