Published:Updated:

ரோஹித் 4-வது சதம்... ரெக்கார்டுகளை அடுக்கும் ஹிட்மேன்!

ரோஹித் ஷர்மா

தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சதம் அடித்திருந்த ரோஹித், 2019 உலகக் கோப்பையில் தனது நான்காவது சதத்தை இன்று நிறைவு செய்தார்.

Published:Updated:

ரோஹித் 4-வது சதம்... ரெக்கார்டுகளை அடுக்கும் ஹிட்மேன்!

தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சதம் அடித்திருந்த ரோஹித், 2019 உலகக் கோப்பையில் தனது நான்காவது சதத்தை இன்று நிறைவு செய்தார்.

ரோஹித் ஷர்மா

பர்மிங்கமில் நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஷர்மா அதிரடி சதமடித்தார். 5 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் உட்பட 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அசத்தினார். ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக சதம் அடித்திருந்த அவர், 2019 உலகக் கோப்பையில் தனது நான்காவது சதத்தை இன்று நிறைவு செய்தார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோஹித்துக்கு இது 26-வது சதம்!

2019 உலகக் கோப்பையில் ரோஹித்தின் சதங்கள்

vs தென்னாப்பிரிக்கா - 122* (144 பந்துகளில்)
vs பாகிஸ்தான் - 140 (113 பந்துகளில்)
vs இங்கிலாந்து - 102 (109 பந்துகளில்)
vs வங்கதேசம் - 104 (92 பந்துகளில்)

ஆஸ்திரேலியாவின் வார்னர் (516), ஃபின்ச் (504) ஆகியோரை பின்னுக்குத்தள்ளிய ரோஹித், நடப்பு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதுவரை 53 பவுண்டரிகள், 12 சிக்சர்கள் உட்பட 544 ரன்கள் அடித்துள்ளார். 2019 உலகக் கோப்பையில் அதிக ரன்கள், அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் 'டாப்' இடத்துக்கு முன்னேறியிருக்கும் ரோஹித், இந்திய அணி வீரர்களின் சில ரெக்கார்டுகளையும் முறியடித்துள்ளார்

உலகக்கோப்பை தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள்

2003 உலகக் கோப்பை - சச்சின் டெண்டுல்கர் - 673
2019 உலகக் கோப்பை - ரோஹித் ஷர்மா - 527*
1996 உலகக் கோப்பை - சச்சின் டெண்டுல்கர் - 523
2011 உலகக் கோப்பை - சச்சின் டெண்டுல்கர் - 482

உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்களில் முதல் மூன்று இடமும் சச்சினுக்கே சொந்தமாக இருந்தது. இலங்கைக்கு எதிரான ஒரு லீக் போட்டி இன்னும் மீதமிருக்கையில், 2003 உலகக் கோப்பையில் சச்சின் எடுத்த ரெக்கார்டையும் ரோஹித் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஹித் 4-வது சதம்... ரெக்கார்டுகளை அடுக்கும் ஹிட்மேன்!

மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலிலும் ரோஹித்துக்கு முதல் இடம். 348* ஒரு நாள் போட்டிகள் 228 சிக்சர்கள் அடித்திருந்த தோனியின் ரெக்கார்டை பின்னுக்குத்தள்ளிய ரோஹித், 213* போட்டிகளில் 230 சிக்சர்கள் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளார். ரெக்கார்டுகளை அடுக்கி வரும் ரோஹித், ஃபுல் ஃபார்மில் கலக்கி வருகிறார்!