Published:Updated:

`11 போட்டிகள்; 5 லெஜண்ட் அணிகள்.. குவியும் நட்சத்திர வீரர்கள்!’ - ரோடு சேஃப்டி வேர்ல்டு சீரியஸ்

சச்சின், யுவராஜ், கைஃப்

சச்சின் டெண்டுல்கருடன் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சேவாக்.

`11 போட்டிகள்; 5 லெஜண்ட் அணிகள்.. குவியும் நட்சத்திர வீரர்கள்!’ - ரோடு சேஃப்டி வேர்ல்டு சீரியஸ்

சச்சின் டெண்டுல்கருடன் விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சேவாக்.

Published:Updated:
சச்சின், யுவராஜ், கைஃப்

வாரநாள்களில் காலியாக இருக்கும் பல மைதானங்கள் சண்டேக்களில் பிஸியாகிவிடும். சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை கிரிக்கெட் மட்டையுடன் மைதானத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். புட் பால் போஸ்ட், பேஸ்கட் கால் போஸ்ட்கள் எல்லாம் ஸ்டெம்புகளாக மாறியிருக்கும். கிரிக்கெட் மீது இந்தியர்களுக்கு இருக்கும் தீராத காதலின் வெளிப்பாடுதான் இது. இன்று தோனி, கோலி, ஸ்மித், வில்லியம்ஸன் என தங்களது ஆஸ்தான வீரருக்காக மல்லுக்கட்டும் ரசிகர்களுக்கு கண்டிப்பாக கிரிக்கெட் மீது ஈர்ப்பு வருவதற்குக் காரணமாக ஒருவர் இருந்திருப்பார்.

பிரட் லீ
பிரட் லீ

ஆரம்பம் முதலே அதிரடி காட்டும் ஷேவாக், க்ளாஸாக பேட்டிங் செய்யும் சச்சின், ஸ்டெம்புகளைத் தெறிக்கவிடும் பிரட் லீ, விரல்களில் வித்தைகாட்டும் முத்தையா முரளிதரன், ஆக்ரோஷமான கங்குலி, அமைதியின் சிகரமான டிராவிட், மாயஜாலம் செய்யும் ஷேன் வார்னே என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். உள்ளூர் கிரிக்கெட்டரின் ஆட்டம் கூட உங்களை கிரிக்கெட்டுக்கு அழைத்து வந்திருக்கலாம். நமக்குப் பிடித்த வீரர்கள் ஓய்வு பெற்றாலும் அவர் குறித்த தேடுதல் இருக்கும். மீண்டும் அந்த வீரர் களத்துக்கு வந்து விளையாடமாட்டாரா என்ற ஒரு ஏக்கம் இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சச்சின் டெண்டுல்கருக்கு உலக அரங்கில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். அவரைக் கொண்டாடி தீர்க்கின்றனர் ரசிகர்கள். இதற்கு சமீபத்திய உதாரணம் ஆஸ்திரேலியாவின் நடந்த கண்காட்சிப் போட்டி. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதிரட்டும் நோக்கத்தில் 10 ஓவர்கள் கொண்ட கண்காட்சிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்குப் பயிற்சியாளராக சென்ற சச்சின் டெண்டுல்கருக்கு ட்விட்டரில் ஒரு வேண்டுகோள் வந்தது.

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

வேண்டுகோளை வைத்தது ஆஸ்திரேலிய மகளிர் அணியின் பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரி. கண்காட்சிப் போட்டியின் இடைவேளையின்போது சச்சின் ஒரு ஓவர் பேட்டிங் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதன்மூலம் காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதிதிரட்ட முடியும் என்றார். சச்சினும் கீரின் சிக்னல் கொடுக்க எல்லிஸ் பெர்ரி மற்றும் அனேபல் ஆகியோர் சச்சினுக்குப் பந்துவீசினர். சச்சின் பேட்டிங் செய்த கிரிக்கெட் வீடியோவை ஆஸ்திரேலியா வெளியிட ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

இந்த நிலையில்தான் மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கவுள்ளார் சச்சின். இது ஒரு ஓவர் போட்டியில்லை டி-20 தொடர். சச்சின் மட்டுமல்ல கிரிக்கெட் உலகின் முன்னாள் கதாநாயகர்கள் மீண்டும் பேட் மற்றும் பந்தை கையிலெடுக்கவுள்ளனர். சச்சின், சேவாக், யுவராஜ், ஜாகீர் கான், லாரா, ஜாண்டி ரோட்ஸ், கிப்ஸ், ஆல்பி மோர்க்கல், தில்சன், முத்தையா முரளிதரன், பிரட் லீ என நட்சத்திரப் பட்டாளம் மீண்டும் களமிறங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மகாராஷ்டிரா அரசின் சாலைப்பாதுகாப்பு பிரிவு தனியார் நிறுவனத்துடன் இணைந்து `ரோடு சேஃப்டி வேர்ல்டு சீரியஸ்’ என்ற தொடரை நடத்துகிறது. இதில் முன்னாள் வீரர்கள் 100-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்கிறார்கள். இந்தியா லெஜண்ட்ஸ், ஆஸ்திரேலியா லெஜண்ட்ஸ், இலங்கை லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ், தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் என மொத்தம் 5 அணிகள் கலந்துகொள்கின்றன. ஃபைனலுடன் சேர்த்து மொத்தம் 11 போட்டிகள் நடக்கவுள்ளன. இந்தப்போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனேவில் நடக்கவுள்ளன. மார்ச் 7-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை நடக்கின்றன. போட்டிகள் அனைத்தும் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

போட்டி அட்டவணை
போட்டி அட்டவணை

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக் இதுகுறித்து பேசுகையில், ``சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அவசியம். சாலைப் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். இந்தப் போட்டி குறித்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஏனென்றால் மீண்டும் சச்சினுடன் விளையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். நானும் சச்சினும் பல சர்வதேசப் போட்டிகளில் ஒன்றாக விளையாடியுள்ளோம். இப்போது கொஞ்சம் இடைவெளி இருந்தது. பின்னர் ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினோம். இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. டெண்டுல்கருடன் விளையாடுவதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism