Published:Updated:

Rinku Singh: `எதைப் பற்றியும் யோசிக்காதே!' - தோனி சொன்ன அட்வைஸ்; மனம் திறந்த ரிங்கு சிங்

தோனி, ரிங்கு சிங்

கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங், மகேந்திர சிங் தோனி கொடுத்த சில அட்வைஸ்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

Published:Updated:

Rinku Singh: `எதைப் பற்றியும் யோசிக்காதே!' - தோனி சொன்ன அட்வைஸ்; மனம் திறந்த ரிங்கு சிங்

கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங், மகேந்திர சிங் தோனி கொடுத்த சில அட்வைஸ்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

தோனி, ரிங்கு சிங்
இன்று கொல்கத்தாவில் நடைபெறும் 56 வது  லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத இருக்கின்றன.

இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறும் வாய்ப்பு  கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணிக்கு இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு ப்னிஷிங் ரோலில் சிறப்பாக ஆடி வெற்றியை பெற்று தரும் ரிங்கு சிங், மகேந்திர சிங் தோனி கொடுத்த சில அட்வைஸ்கள் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

ரிங்கு சிங்
ரிங்கு சிங்

தோனியின் அட்வைஸ் குறித்து பேசிய ரிங்கு சிங், “உலகின் சிறந்த ப்னிஷர் என்றால் அது தோனிதான். நான் பேட்டிங் செய்யும்போது எப்படி செயல்பட  வேண்டும் என்று மகிபாயிடம் கேட்டேன். “ உனது திட்டத்தை எப்போதும் எளிமையாக வைத்துக்கொள். எந்த பந்தை வீசவேண்டும் என்பதை பௌலர் பார்த்துக் கொள்வார். நீ எதைப் பற்றியும் யோசிக்காதே. பந்து எப்படி வருகிறது என்பதில் உன் முழு கவனத்தையும் செலுத்து.

உனக்கு எந்த பக்கம் ஆடினால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறதோ அதை செய்” என்றார். ஆனால் பொதுவாக பலரும் பௌலர் பந்தை எப்படி பிடித்திருக்கிறார் என்பதை நன்றாக பார். குறிப்பிட்ட பௌலர் எத்தனை பந்துக்கு ஒருமுறை ஸ்லோ பந்து வீசுகிறார், வேகமான பந்து வீசுகிறார் என்று கவனி என்று கூறுவார்கள்.  ஆனால் தோனி எனக்கு கொடுத்த இந்த அட்வைஸ் அவர்கள் கூறியதிலிருந்து முற்றிலுமே மாறுபட்டதாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.