Published:Updated:

`என் ஃபார்முலாவை மாற்றிவிட்டேன்!'- வெற்றி ரகசியம் சொல்லும் கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவதுடி-20 கிரிக்கெட் போட்டியில் அரைசதம் விளாசிய கே.எல்.ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் ஜடேஜா 2 விக்கெட்டுகளும் ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி மற்றும் துபே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.ளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ரோஹித் ஷர்மா,கோலி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்திய அணி
இந்திய அணி

இளம்வீரர்களான கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர் இருவரும் பொறுப்பை உணர்ந்து நிதானமாக விளையாடினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இளம்ஜோடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. ஸ்ரேயஸ் ஐயர் 44 ரன்களில் அவுட்டானார். இறுதியில் சிவம் துபே சிக்ஸர் அடித்து போட்டியை தித்திப்பாக முடித்து வைத்தார். அரைசதம் கடந்த கே.எல்.ராகுல் 57 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணி 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார்.

`டிராவிட்டுக்கு ராகுல் ஓ.கேதான்.. ஆனால், அந்தத் தவற்றை செய்யாதீங்க!’- ஆகாஷ் சோப்ரா லாஜிக்

ஆட்டநாயகன் விருது வென்ற கே.எல்.ராகுல் பேசுகையில், “ இன்றைய போட்டியில் சூழலும்,இலக்கும் வித்தியாசமாக இருந்தது. ஆடுகளமும் இரண்டு நாள்களுக்கு முன்பு இருந்தது போல் இல்லை. பிட்ச் சிறிது கடினமாக இருந்தது. எனக்கு என்ன செய்யவேண்டும் எனத் தெரியும். வழக்கமான பாணியில் விளையாட முடியாது. எனக்கு பொறுப்பு இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மை மாறிவிட்டதால் நான் என் பேட்டிங் ஸ்டைலை மாற்றிவிட்டேன். நாங்கள் ரோஹித் மற்றும் கோலியின் விக்கெட்டுகளை விரைவாகவே இழந்துவிட்டோம். நான் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.

கே.எல்.ராகுல்
கே.எல்.ராகுல்

ஆட்டத்தின் போக்கையும், சூழலையும் புரிந்துக்கொண்டு விளையாடுவது எனக்கு சிறப்பாக இருந்தது. அணிக்கு என்ன தேவையோ அதனை முன்னெடுக்கவே எப்போதும் விரும்புவேன். நான் சரியான ஷாட்டுகளை தேர்வு செய்து விளையாடினால் எனக்கு சரியான பதில்கள் கிடைக்கும். இதுவே டி-20 கிரிக்கெட்டில் கடந்த சில போட்டிகளில் இதுவே என்னுடைய மந்திரமாக இருந்தது” எனப் பதிலளித்துள்ளார்.

`இந்திய அணி பாகிஸ்தான் வர வேண்டும்; இல்லையென்றால்...!' மிரட்டும் பாக். கிரிக்கெட் வாரியம்
அடுத்த கட்டுரைக்கு