Published:Updated:

Retired out - Retired hurt: புதிய ஆட்ட வியூகம்; இரண்டும் எவ்வாறு மாறுபடுகிறது?

ரிட்டையர்டு ஹர்ட்-ரிட்டைர்ட் அவுட்

MCC கிரிக்கெட் விதி 25.4.1-யின் படி பந்து டெட்டாக இருக்கும் எந்நேரத்திலும் பேட்டர் களத்தில் இருந்து வெளியேறலாம்.

Retired out - Retired hurt: புதிய ஆட்ட வியூகம்; இரண்டும் எவ்வாறு மாறுபடுகிறது?

MCC கிரிக்கெட் விதி 25.4.1-யின் படி பந்து டெட்டாக இருக்கும் எந்நேரத்திலும் பேட்டர் களத்தில் இருந்து வெளியேறலாம்.

Published:Updated:
ரிட்டையர்டு ஹர்ட்-ரிட்டைர்ட் அவுட்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கெதிரான நேற்றைய முன்தினப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் ரவி அஷ்வின் ரிட்டையர்டு அவுட் முறையில் பெவிலியன் திரும்பினார். 15 வருட ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு வீரர் ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேறுவது இதுவே முதல் முறை. இதேபோல நேற்றைய ஆட்டத்தில் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார் சன்ரைசர்ஸ் அணியின் ராகுல் த்ரிபாதி. இந்த வழக்கத்தை நாம் கிரிக்கெட்டில் பலமுறை கண்டிருப்போம். ஆனால் அஷ்வின் தொடங்கி வைத்துள்ள இந்த புதிய முறையினால் இரண்டு வழக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் பார்த்திவிடுவோம்.

Ravi Ashwin
Ravi Ashwin

ரிட்டையர்டு ஹர்ட்:

களத்தில் உள்ள பேட்டரால் காயத்தினாலோ உடல்நிலை சரியின்மை காரணமாகவோ ஆட்டத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டால் அவ்வீரர் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பலாம். களத்திற்கு வெளியே மருத்துவ உதவி தேவைப்படுமாயின் இம்முறை அனுமதிக்கப்படும். ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறும் வீரர் அடுத்த வரும் பேட்டர் ஆட்டமிழந்த பிறகு மீண்டும் களமிறங்கலாம்.

Rahul Tripathi
Rahul Tripathi

ஒருவேளை, பேட்டிங் அணியின் கடைசி வீரர் ஆட்டமிழந்த பிறகும் ரிட்டையர்டு ஹர்ட் ஆன வீரரால் களத்திற்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டால் அந்த அணியின் இன்னிங்ஸ் முடித்துக்கொள்வதாக எடுத்துக்கொள்ளப்படும். அப்படி களமிறங்காத பேட்டர் ரிட்டையர்டு நாட்-அவுட்டாக கருதப்படுவார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரிட்டையர்டு அவுட்:

MCC கிரிக்கெட் விதி 25.4.1-யின் படி பந்து டெட்டாக இருக்கும் எந்நேரத்திலும் பேட்டர் களத்தில் இருந்து வெளியேறலாம். காரணம் இல்லாமல் வெளியேறுவதால் பேட்டர் மீண்டும் களத்திற்கு திரும்பி பேட் செய்வதற்கு எதிரணி கேப்டனின் அனுமதி அவசியம். அப்படி நடக்காதபட்சத்தில் அந்த பேட்டர் ரிட்டையர்டு-அவுட் என கருதப்படுவார். மேலும் சராசரி கணக்கிடுவதற்கு அந்த பேட்டர் ஆட்டமிழந்ததாகவே எடுத்துக்கொள்ளப்படும். ரிட்டையர்டு-ஹர்ட் போலவே இம்முறையில் இருக்கும் பேட்டர் ஆட்டமிழந்தால் தான் வெளியேறிய பேட்டர் மீண்டும் உள்ளே வர முடியும்.

Ravi Ashwin
Ravi Ashwin

ஆட்டத்தை சூழலை கருத்தில் கொண்டு களத்தில் இருக்கும் பேட்டருக்கு பதில் புதிய பேட்டரை அனுப்பும் ரிட்டையர்டு அவுட் முழுக்க முழுக்க ஒரு ஆட்ட வியூகமே. உதாரணத்திற்கு ராஜஸ்தான் அணியின் செயல்பாட்டையே எடுத்துக்கொள்வோம். 10-வது ஓவரில் அணியின் நான்காவது விக்கெட் விழ மேலும் சரிவு ஏற்படாமல் இருப்பதற்கு ரியான் பராகிற்கு பதில் ஆறாவது இடத்தில் களமிறங்குகிறார் ரவி அஷ்வின். லக்னோ அணியின் பந்துவீச்சை திறம்பட சமாளித்து போதிய ரன்களுக்கு அடிக்கிறார் ( 28 ரன்கள், 23 பந்துகள்). 19-வது ஓவர் வரை தன் விக்கெட்டை இழக்காத அஷ்வின் அச்சூழல் ரன்களை ஏற்றுவதர்க்கு ஹிட்டரான ரியன் பராக்கை அழைத்து இவர் பெவிலியன் திரும்புகிறார். அதற்கேற்றவாறு ரியான் பராக் நான்கு பந்துகளில் 8 ரன்கள் அடித்தார்.

இது பற்றி அஷ்வினும் ஒரு நேர்காணலில், "இது போன்ற வியூகங்களை நல்ல பலன் அளிக்கக்கூடும் என்று நினைத்து செயல்படுத்துகிறோம் ஆனால் அது நம் கையில் இல்லை என்று பேசியிருந்தார். நமக்கு தெரிந்து இம்முறையை முதல்முறையாக அஷ்வின் செயல்படுத்தினாலும் ஏற்கெனவே சில டி20 தொடர்களில் ரிட்டையர்டு அவுட் முறை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 2010-ம் ஆண்டு நார்தன்ட்ஸ் அணிக்கெதிரான பாகிஸ்தானிஸ் அணியின் ஷாஹிக் அஃப்ரிடி, 2019-ம் ஆண்டு பங்களாதேஷ் பிரீமியர் லீகில் சாட்டோகிராம் சாலென்ஜெர்ஸ் அணிக்கெதிரான குமில்லா வாரியர்ஸ் அணியின் சுன்ஸமால் இஸ்லாம் ஆகியோர் ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேறியுள்ளனர். சர்வதேச டி20 அரங்கிலும் மாலத்தீவு அணிக்கெதிராக பூடானின் சோனம் டோப்கே ரிட்டையர்டு அவுட் ஆகியுள்ளார்.

Steve Smith returning back to pavilion as  retire hurt after being hit in his head by Jofra Archer
Steve Smith returning back to pavilion as retire hurt after being hit in his head by Jofra Archer

இதுபோல 2001-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் இலங்கை அணியின் மர்வான் அட்டபட்டு, மஹேலா ஜெயவர்தனே இருவரும் ஒரே இன்னிங்ஸில் ரிட்டையர்டு அவுட் ஆகினர். இம்முறையின் விதியில் ஒரு தடவை மட்டும் விளக்கு அளிக்கப்பட்டது. 1982-83-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது கவலைக்கிடமான நிலையில் இருந்த தன் மகளை காண்பதற்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் கார்டன் கிரீனிட்ஜ் களத்தை விட்டு வெளியேறினார். மரியாதை நிமித்தமாக அவர் அன்று அடித்த 154 ரன்கள் ரிட்டையர்டு நாட்-அவுட்டாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

டி20 இந்த யுகத்திற்காக ஆட்டம். இது அடுத்து தலைமுறைக்கான விளையாட்டு. அஷ்வினும் அந்த நேர்காணலில் இதையே தான் தெளிவுபடுத்தியிருந்தார். எனவே ஆட்ட சூழலுக்கு ஏற்றவாரு ரிட்டையர்டு அவுட் முறையை அணிகள் இனி அதிக அளவில் செயல்படுத்த முனையும்.