Published:Updated:

எதற்கும் துணிந்த சிப்பாய்கள் துணைகொண்டு காபா எனும் இரும்புக் கோட்டையை உடைத்த இந்தியா! #OnThisDay

One Year of Gabba victory!

சிப்பாயை குறைத்து மதிப்பிட்டு அதை முன்னேற விடுபவர்கள், தங்களை அறியாமலேயே தோல்வியை நோக்கி நகர்வார்கள். அவர்களிடம் குதிரையும் யானையும் இருக்கும் மிதப்பில் அந்த சிப்பாயை கண்டுகொள்ளாமல் விடுவார்கள். எதிர்முனையை அடையும் அச்சிப்பாய் பலம் கொண்ட ஒன்றாக மாறி மொத்தமாக ஆட்டத்தை மாற்றிவிடும்

எதற்கும் துணிந்த சிப்பாய்கள் துணைகொண்டு காபா எனும் இரும்புக் கோட்டையை உடைத்த இந்தியா! #OnThisDay

சிப்பாயை குறைத்து மதிப்பிட்டு அதை முன்னேற விடுபவர்கள், தங்களை அறியாமலேயே தோல்வியை நோக்கி நகர்வார்கள். அவர்களிடம் குதிரையும் யானையும் இருக்கும் மிதப்பில் அந்த சிப்பாயை கண்டுகொள்ளாமல் விடுவார்கள். எதிர்முனையை அடையும் அச்சிப்பாய் பலம் கொண்ட ஒன்றாக மாறி மொத்தமாக ஆட்டத்தை மாற்றிவிடும்

Published:Updated:
One Year of Gabba victory!

சரியாக ஒரு ஆண்டுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் மகத்தான சாதனை ஒன்றைச் செய்தது இந்தியா. ஆஸ்திரேலியர்களின் காபா கோட்டையை இடித்து அந்த மகத்தான ராஜ்ஜியத்தைக் கைப்பற்றியது கோலி வழிநடத்திய… இல்லை ரஹானே வழிநடத்திய அணி. அந்த டெஸ்ட் போட்டியில்… போரில்… இந்தியாவைத் தூக்கி நிறுத்த ராஜா இல்லை. பல தளபதிகள் இல்லை. ஆனால், எதற்கும் துணிந்த சிப்பாய்கள், அனைத்தையும் கொடுத்து இந்தியாவை அரியணையில் ஏற்றினார்கள். ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து இரண்டாவது முறையாக தொடரை வென்று கோப்பையை முத்தமிட்டது இந்தியா. இதே நாளில்!

சதுரங்கத்தில் சிப்பாய்கள் எப்போதும் குறைத்தே மதிப்பிடப்படுகின்றன. அவற்றால் ஒரு கட்டம்தான் முன்னால் செல்லமுடியும். முன்னால் மட்டும்தான் செல்ல முடியும். அவற்றின் ரீச் மிகவும் குறைவு. ஒரு ராணியையோ, குதிரையையோ காப்பாற்ற முற்படும் அளவுக்கு, சிப்பாய்களைக் காப்பாற்ற யாரும் மெனக்கிடுவதில்லை. எதிராளியிடம் ஒரு சிப்பாய் அதிகமாக இருந்தால் நாம் அதிகம் கவலை கொள்வதில்லை. ஆனால், ஒரு மந்திரியோ, யானையோ அதிகமாக இருந்தால் அவ்வளவுதான். அது வெட்டப்படும் நொடியே தோல்வியடைந்ததுபோல் உணர்வோம். ஏன் இப்படி?! நம்மைப் பொறுத்தவரை ராணிகளும், குதிரைகளும், மந்திரிகளும்தானே வெற்றியை நிர்ணயிக்கின்றன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், அவை மட்டும்தான் வெற்றியை நிர்ணயிக்கின்றனவா! அத்தனை குதிரைகளும், யானைகளும், மந்திரிகளும், நாம் விட்டுவிடவே கூடாது என்று நினைக்கும் ராணியும் வெட்டப்பட்ட பிறகு ஆட்டத்தை நிர்ணயிப்பது அந்தச் சிப்பாய்கள்தான். சில நேரங்களில் அந்தக் குதிரைகளை விட, யானைகளைவிட சிப்பாய்கள் ஆபத்தானவையாக மாறும். ஆறே கட்டங்கள்தான்… ஒரு சிப்பாய் ஆறு கட்டங்கள் தாண்டி ஏழாவது கட்டத்தில் கால் வைத்தால், அது என்னவாக மாறும் என்று யாருக்கும் தெரியாது. அது என்னவாகவேண்டுமானால் மாறும். ஒரு குதிரையாக, யானையாக, மந்திரியாக… ஏன் ராணியாகவேகூட விஸ்வரூபம் எடுக்கும். அப்படி மாறும்போது, நொடிப் பொழுதில் ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றிவிடும்.

The Indian Stars!
The Indian Stars!

சிப்பாயைக் குறைத்து மதிப்பிட்டு, அதை முன்னேற விடுபவர்கள் தங்களை அறியாமலேயே தோல்வியை நோக்கி முன்னேறத் தொடங்குவார்கள். அவர்கள்வசம் குதிரையும் யானையும் இருக்கும் மிதப்பில், அந்த ஒற்றை சிப்பாயைக் கண்டுகொள்ளாமல் விடுவார்கள். எதிர்முனையை அடையும் அந்தச் சிப்பாய், அந்தக் குதிரையைவிட, யானையைவிட பலம் கொண்ட ஒன்றாக மாறி மொத்தமாக ஆட்டத்தை மாற்றிவிடும். அந்த ஆட்டம், கடைசியில் சிப்பாய்களால் நிர்ணயிக்கப்படும். ராஜாவால், ராணியால், குதிரைகளா, யானைகளால் அல்ல… சிப்பாய்களால் நிர்ணயிக்கப்படும். 2020-21 பார்டர் கவாஸ்கர் டிராஃபி எதற்கும் தயாராக இருந்த சிப்பாய்களால் நிர்ணயிக்கப்பட்டது!

Risabh Pant - the Gabba hero
Risabh Pant - the Gabba hero

முதல் போட்டியில் தோல்வி. அந்தப் போட்டியோடு மிகமுக்கிய காயை இழக்கிறது இந்தியா. கிங் – சதுரங்க analogy-ல் ராணி என வைத்துக்கொள்வோம். ஏனெனில், உலகைப் போல் இல்லாமல், சதுரங்கத்தில் ராஜாவை விட ராணிக்குத் தானே பலம் அதிகம். மதிப்பும் அதிகம். பொதுவாக எதிரணியின் ராணியை வீழ்த்தாமல் நம் ராணி வெட்டப்பட்டால், போட்டி அங்கேயே முடிந்தது என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். ஒட்டுமொத்த உலகமும் அந்த மனநிலையில்தான் இருந்தது. எதிரணி ராணியை இழந்து பின்தங்கியிருப்பதால் ஆஸ்திரேலியர்கள் உற்சாகத்தில் மிதக்கத் தொடங்கினார்கள். எளிதில் ஆட்டம் முடிந்துவிடும் என்று கருதினார்கள். ஒருகட்டத்தில் இந்தியர்களின் மனநிலையுமே அப்படித்தான் இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராணி இல்லாமலிருந்தாலும், மாயம் செய்யும் இரண்டு குதிரைகள் ஒரே நேரத்தில் பாய்ந்தால், எதிராளிகள் ஆட்டம் காணத் தொடங்குவர். மெல்போர்ன் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் பும்ரா ஒரு பக்கம், ரஹானே ஒரு பக்கம் மிரட்ட, அடிபணிந்தது ஆஸ்திரேலியா. ராணி இல்லாமலும் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று நிரூபித்தது இந்தியா. ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் குதிரை, யானை, மந்திரி, சில சிப்பாய்கள் என இழப்புகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. ஆட்டத்தில் நம் பிடிப்பை இழந்துகொண்டே இருந்தோம். உளவியல் ரீதியாகவும் பலவீனமடைந்துகொண்டே இருந்தோம். என்ன செய்திருக்க முடியும்!

எதற்கும் துணிந்த சிப்பாய்கள் துணைகொண்டு காபா எனும் இரும்புக் கோட்டையை உடைத்த இந்தியா! #OnThisDay

எப்போதும் தங்களை தியாகம் செய்துகொண்டே இருக்கும் சிப்பாய்கள், அப்போதும் தியாகம் செய்யத் தயாராக இருந்தார்கள். மிகப்பெரிய அரங்கில் மாபெரும் ரிஸ்க் எடுத்து எதிர் முனையை அடைய ஆர்வமாக இருந்தார்கள். அவர்களுக்குத் தேவைப்பட்டதெல்லாம் வாய்ப்பும் ஆதரவும் மட்டுமே. இரண்டும் கொடுக்கப்பட்டது. சிப்பாய்கள் முன்னேறத் தொடங்கினார்கள். ஆணவம் கொண்டவர்கள் சிப்பாய்களைக் குறைத்து மதிப்பிடுவது இயல்புதானே!

ஒரு சிப்பாய் மட்டும் தனியாக முன்னேறும்போது எதிராளியின் ஏதோவொரு மந்திரியோ குதிரையோ அதைத் தடுத்துவிடும். ஆனால், அடுத்தடுத்து இருக்கும் இரண்டு மூன்று சிப்பாய்கள் ஒவ்வொன்றாய் நகரும்போது, அதைத் தடுப்பது சாதாரண காரியமில்லை. பெரிதாக சில தியாகங்கள் செய்யவேண்டியிருக்கும். ஒரு சிப்பாயை வீழ்த்த யானையையோ, மந்திரியையோ, குதிரையையோ பலிகொடுக்கவேண்டியிருக்கும். அப்படி ஒன்றாக நகர்ந்த சிப்பாய்களினால் ஆஸ்திரேலியா நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது. சிட்னி, பிரிஸ்பேன் என அவர்களின் கோட்டைகளை சிப்பாய்கள் இடிக்கத் தொடங்கினார்கள். ரிசப் பன்ட், முகமது சிராஜ், ஹனுமா விஹாரி, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நடராஜன், சுப்மன் கில் என ஒவ்வொருவரும் ஆஸ்திரேலியாவின் மாபெரும் கோட்டை மதில்களை இடித்து முன்னேறினார்கள்.

முன்பு சொன்னதுபோல், சிப்பாய்கள் தனியாக முன்னேறும்போது எதிராளி ஏதோவொரு காயைத் தியாகம் செய்து அவற்றைத் தடுத்துவிடலாம். ஆனால், நம் குதிரையோ மந்திரையோ அந்தச் சிப்பாய்களுக்குத் துணை நிற்கும்போது அவை இன்னும் வீரியமாகப் பாயும். விரைவில் போர்முனை அடைந்து விஸ்வரூபம் எடுக்கும். இந்திய அணியில் நடந்தது அதுவே!

புஜாரா, அஷ்வின், ரஹானே, ரோஹித் போன்றவர்கள் அவர்களோடு துணை நின்றார்கள். ஒட்டுமொத்த அணியும் நிர்வாகமும் அவர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்பையும், ஆதரவையும் அள்ளிக் கொடுத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட சிப்பாய்கள் எதைப் பற்றியும் யோசிக்காமல் முன்னேறி எதிர்முனை அடைந்தன. விஸ்வரூபம் எடுத்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு உருவம் கொண்டன! அதற்கு முன் இந்தியா இழந்த குதிரையாக, யானையாக, மந்திரியாக… ராணியாகவே உருமாறின. சிப்பாய்கள் ஒவ்வொன்றும் தளபதிகளாக மாறின. ஆஸ்திரேலியாவின் மகத்தான மதில் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்டது. தரைமட்டமாக்கியது இந்தியா – எதற்கும் துணிந்த சிப்பாய்களின் துணைகொண்டு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism