Published:Updated:

BCCI: தோல்வி மேல் தோல்வி; அணிக்கட்டமைப்பில் குழப்பம்; தேர்வுக்குழு கலைக்கப்பட்டதின் பின்னணி என்ன?

BCCI, Chetan Sharma

தேர்வுக்குழு தெரிவு செய்து அனுப்பிய அணிகள் ஒரு பெரிய தொடரை கூட வெல்லவில்லை என்பது இந்தக் குழுவின் மீதான அதிருப்திக்கு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கக்கூடும்.

BCCI: தோல்வி மேல் தோல்வி; அணிக்கட்டமைப்பில் குழப்பம்; தேர்வுக்குழு கலைக்கப்பட்டதின் பின்னணி என்ன?

தேர்வுக்குழு தெரிவு செய்து அனுப்பிய அணிகள் ஒரு பெரிய தொடரை கூட வெல்லவில்லை என்பது இந்தக் குழுவின் மீதான அதிருப்திக்கு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கக்கூடும்.

Published:Updated:
BCCI, Chetan Sharma
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவை பிசிசிஐ மொத்தமாகக் கலைத்திருக்கிறது. தேர்வுக்குழுவின் தலைவரான சேத்தன் சர்மா உட்பட தேர்வுக்குழு உறுப்பினர்கள் அத்தனை பேரின் பதவிகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன. டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் மோசமான தோல்விக்குப் பிறகு பிசிசிஐ எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

சேத்தன் சர்மா கடந்த 2020-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக அறிவிக்கப்பட்டார். சுனில் ஜோஷி, ஹர்வீந்தர் சிங், தெபஷிஸ் மொஹந்தி, அபேய் குருவில்லா என சேத்தன் சர்மாவின் குழுவில் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒரு பிரதிநிதி என மொத்தம் ஐந்து பேர் கொண்ட தேர்வுக்குழு செயல்பட தொடங்கியது. இந்தத் தேர்வுக்குழுவைத்தான் பிசிசிஐ இப்போது கலைத்திருக்கிறது.

தேர்வுக்குழு பற்றிய சர்ச்சைகளும் பரபரப்புகளும் இந்திய கிரிக்கெட்டுக்கு புதிதல்ல. இந்திய அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளரான ஜான் ரைட்டே தனது புத்தகத்தில் இந்திய தேர்வுக்குழுவையும் அதன் தேர்வு முறையையும் கடுமையாகச் சாடியிருப்பார்.

Chetan Sharma
Chetan Sharma
Chetan Sharma
"பந்துவீச்சுக்குக் கூடுதலாக உதவியாளர்களைக் கேட்டால் பேட்டிங் ஆலோசகரை அனுப்பி வைப்பார்கள். அணியின் முக்கியமான இடங்களுக்கு தங்கள் பிராந்தியத்தில் தாங்கள் விரும்பும் வீரர் தேர்வு செய்யப்பட வேண்டும் என மல்லுக்கட்டுவார்கள். அதற்கு மறுப்பு வரும்பட்சத்தில் அதன்பிறகு, அணித்தேர்வு மீட்டிங்களில் ஆர்வத்துடன் பங்கேற்கவேமாட்டார்கள்."

என ஜான் ரைட் இந்திய தேர்வுக்குழுக்களை பற்றி அப்போதே சாட்டையைச் சுழற்றியிருக்கிறார்.

சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு கலைக்கப்பட்டிருக்கும் இச்சமயத்தில் யாரும் ஜான் ரைட்டை போல வந்து இன்னும் பேசவில்லை. ஆயினும், தேர்வுக்குழு சார்ந்து சில பிரச்னைகளும் அதிருப்திகளும் இருப்பதாகவே தெரிகிறது. 2020 டிசம்பரில் சேத்தன் சர்மா தலைவரானார். இந்தத் தேர்வுக்குழு தெரிவு செய்து அனுப்பிய அணிகள் ஒரு பெரிய தொடரை கூட வெல்லவில்லை என்பது இந்தக் குழுவின் மீதான அதிருப்திக்கு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கக்கூடும்.

2021-ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலகக்கோப்பை, 2022-ல் ஆசியக்கோப்பை, டி20 உலகக்கோப்பை என அத்தனையிலும் இந்திய அணி மோசமாகத் தோற்றிருக்கிறது.

இது போதாதென அணிக்குள்ளும் ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தன. விராட் கோலிக்குத் தங்களின் எண்ணங்களையும் தகவல்களையும் சரியாகக் கடத்தாமல் கேப்டன்சி மாற்றத்தில் சச்சரவுகளை உண்டாக்கி பிரச்னையை வீதி வரை கொண்டு வந்தார்கள். 2021 உலகக்கோப்பைக்கு பிறகே அணியை வேறொரு பரிணமாத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக எக்கச்சக்க மாற்றங்களைச் செய்ய வேண்டும். அணியை ஒரு Transition Period-க்குள் பயணிக்க வைத்து புத்துணர்ச்சியுடன் புதிய அணியாகக் கொண்டு வர வேண்டும் என்பது பிசிசிஐயின் திட்டமாக இருந்தது. தேர்வுக்குழுவின் முடிவுகளோ பிசிசிஐயின் எண்ணத்திற்கு அப்படியே எதிராக இருந்தது. கேப்டன்சி மாற்றத்தை சரியாகக் கையாளாமல் சொதப்பினார்கள். அடுத்தக்கட்ட வீரர்களைத் தேர்வு செய்து அடுத்தக்கட்ட அணியைக் கட்டமைப்பதிலும் கோட்டைவிட்டார்கள். விளைவு, இந்திய அணி மீண்டும் உலகக்கோப்பையில் மோசமாகத் தோற்றது.

Team India
Team India

அடுத்த ஆண்டு ஓடிஐ உலகக்கோப்பை இந்தியாவில் வைத்து நடக்கிறது. அதில் இந்திய அணி சிறப்பாக ஆடியே ஆக வேண்டும். அதிலும் முக்கியமான கட்டத்தில் இந்திய அணி சொதப்பும்பட்சத்தில் பிசிசிஐ கடுமையான விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். அதைத் தவிர்க்கும் விதமாகத்தான் பிசிசிஐ இப்படி ஓர் அதிரடியில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.

புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் பணியிலும் பிசிசிஐ இறங்கிவிட்டது. என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.