ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி பெங்களூர்வின் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸில் பெங்களூர் அணி வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. டாஸில் சென்னை அணியின் கேப்டன் முக்கியமான சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அவை இனி,

``சின்னச்சாமி மைதானத்தில் ஸ்கோரை சேஸ் செய்யும் அணியைக் கட்டுப்படுத்துவது ரொம்பவே கடினம். பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். 180-200 ரன்கள் எடுப்பது சரியாக இருக்கும். ஆனாலும், ஒவ்வொரு 3-4 ஓவர்களுக்கும் இடையே நம் மனதில் இருக்கும் டார்க்கெட்டை மாற்றி மாற்றி அதற்கேற்ப ஆட வேண்டும். மகாலாவிற்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு பதிலாக பதிரானா ப்ளேயிங் லெவனுக்குள் வருகிறார்.

வீரர்கள் பலரும் காயமுற்றிருக்கிறார்கள். ஆனால், காயமுற்ற வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரராக அணிக்குள் வருபவர்களும் நன்றாக செயல்படுகிறார்கள் என்பது நல்ல விஷயம்.
கிரிக்கெட்டில் ஒரு சீசனின் கடைசிப் பகுதியில் ஐ.பி.எல் நடைபெறுவதால் வீரர்கள் காயமடைவதை தவிர்க்க முடியாது' இவ்வாறு தோனி பேசியிருந்தார். பரபரப்பாக நடந்து வரும் இந்தப் போட்டியில் வெல்லப்போவது யார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சென்னை அணி எத்தனை ரன்கள் எடுத்தால் போட்டியை வெல்வது எளிதாக இருக்கும் என கமென்ட் செய்யுங்கள்