Published:Updated:

RCB Vs LSG: `சுயநலத்தை விடுத்து அணிக்காக ஆடுங்கள்!' - கோலியை காட்டமாக விமர்சித்த நபர்

கோலி

முதல் 25 பந்துகளில் 42 ரன்களை அடித்திருந்த கோலி அங்கிருந்து அரைசதத்தை எட்ட மேலும் 10 பந்துகளை எடுத்துக் கொண்டார்.

Published:Updated:

RCB Vs LSG: `சுயநலத்தை விடுத்து அணிக்காக ஆடுங்கள்!' - கோலியை காட்டமாக விமர்சித்த நபர்

முதல் 25 பந்துகளில் 42 ரன்களை அடித்திருந்த கோலி அங்கிருந்து அரைசதத்தை எட்ட மேலும் 10 பந்துகளை எடுத்துக் கொண்டார்.

கோலி

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. கடைசி பந்து வரை த்ரில்லிங்காக சென்ற இந்தப் போட்டியை லக்னோ அணி வென்றிருந்தது.

கோலி
கோலி
பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்த சமயத்தில் கோலி 44 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார். கோலியின் இந்த இன்னிங்ஸை வர்ணனையாளர் சைமன் டூலி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

தொடக்கத்தில் அதிரடியாக ஆடி வேகமாக ரன்களை குவித்த விராட் கோலி கடைசிக்கட்டத்தில் கொஞ்சம் மெதுவாக ஆடியிருந்தார். முதல் 25 பந்துகளில் 42 ரன்களை எடுத்துவிட்ட கோலி அடுத்த 19 பந்துகளில் வெறும் 19 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இன்னிங்ஸின் பிற்பாதியில் கோலி ஆடிய இந்த மந்தமான ஆட்டத்தைத்தான் சைமன் டூலி விமர்சித்திருக்கிறார். அவர் கூறுகையில் ``கோலி முதல் 25 பந்துகளில் 42 ரன்களை எடுத்துவிட்டார். விரைவான இரயில் போல வேகமாக ஆடியிருந்தார். நிறைய நல்ல ஷாட்களை ஆடியிருந்தார். ஆனால், அங்கிருந்து அரைசதத்தை எட்ட இன்னும் 10 பந்துகளை எடுத்துக்கொண்டார். பெங்களூர் அணிக்கு கையில் நிறைய விக்கெட்டுகள் இருந்தன. அதிரடியாக ஆடக்கூடிய பேட்டர்கள் இருந்தார்கள்.

சைமன் டூலி
சைமன் டூலி
அந்த சமயத்தில் அணியின் நலனை முன் நிறுத்தி கோலி பவுண்டரிகளுக்கு முயற்சி செய்திருக்க வேண்டும். தனிப்பட்ட சாதனைகளை மனதில் வைத்து ஆட இந்த ஆட்டத்தில் இடமே இல்லை. அணியின் நலன் மட்டும்தான் அங்கே முன்னிலைப் படுத்தபட்டிருக்க வேண்டும்' என சைமன் டூலி கமெண்ட்ரியிலேயே கோலியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

கோலி பற்றிய சைமன் டூலியின் விமர்சனம் குறித்து உங்கள் கருத்து என்ன என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!