Published:Updated:

"கோலியும் நானும் ஆக்ரோஷமானவர்கள். வெற்றிக்காகவே விளையாடினோம்" - ரவி சாஸ்திரி

Ravi Shastri & Virat Kohli
News
Ravi Shastri & Virat Kohli ( AP )

"நாங்கள் இருவரும் மிகவும் ஆக்ரோஷமானவர்கள். நாங்கள் வெற்றிக்காக விளையாட விரும்புனோம். ஆக்ரோஷமான, அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடுவது என்று நாங்கள் முடிவு செய்தோம்"

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இரு வேறு கேப்டன்களை நியமித்திருப்பது சரியான முடிவு என்று கூறியிருக்கிறார். மேலும், தனக்கும் கோலிக்குமான உறவு, ரோஹித்தை ஓப்பனராக்கியது உள்ளிட்ட விஷயங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார் அவர்.

விராட் கோலி இந்திய அணியின் 20 ஓவர் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த பின்னர், அவரை ஒருநாள் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கிவிட்டு, ரோகித் சர்மாவை ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. இது குறித்து பல்வேறு சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
Ravi Shastri
Ravi Shastri
AP

விராட் கோலியை ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதற்கான காரணத்தை பிசிசிஐ தலைவர் கங்குலி டிசம்பர் 9, 2021 அன்று நடந்த பேட்டியில் கூறினார். அந்தப் பேட்டியில்," டி20 மற்றும் ஒரு நாள் வடிவ போட்டிகளுக்கு இருவேறு கேப்டன்கள் இருப்பது பிசிசிஐக்கு சரியாகப்படவில்லை. எனவே, ரோஹித்தை டி20 மற்றும் ஒருநாள் வடிவ போட்டிகளுக்கு கேப்டனாக நியமித்தோம்" என்று கூறினார்.

இந்திய பெண்கள் அணிக்கு இன்றளவும் ஒருநாள் அணிக்கு ஒரு கேப்டனும் டி20 அணிக்கு ஒரு கேப்டனும் தான் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் அணிக்கு மிதாலி ராஜும் டி20 அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுரும் கேப்டனாக உள்ளனர். இந்த முரணை எப்படி பி.சி.சி.ஐ கவனிக்கத் தவறியதோ தெரியவில்லை.

இந்நிலையில், இருவேறு கேப்டன்கள் இருப்பது பற்றி குறித்து முன்னாள் இந்திய பயிற்சியாளரான ரவி சாஸ்திரி சமீபத்தில் தன் கருத்ததைத் தெரிவித்திருக்கிறார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், "இது சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். ஒரு கேப்டன் அனைத்து வடிவ போட்டிகளையும் சமாளிக்க முடியும், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல" என்று கூறினார். நியூஸிலாந்து அணியில் அனைத்து வடிவ போட்டிகளுக்கும் கேன் வில்லியம்சன் கேப்டனாக உள்ளார். ஆனால், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என பெரும்பாலான அணிகளுக்கு ரெட் & ஒயிட் பால் பார்மெட்டுகளுக்கு இருவேறு வீரர்கள் கேப்டனாக செயல்படுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய கிரிக்கெட்டுக்கு பல்வேறு பதவிகளில் பணியாற்றிய சாஸ்திரி, "ரோஹித்தை தொடக்க ஆட்டக்காரராக நிலைநிறுத்த வேண்டும் என்பது என் மனதில் தெளிவாக இருந்தது. ஒரு பேட்ஸ்மேனாக ரோஹித்திடமிருந்து சிறந்த பேட்டிங்கை பெற முடியவில்லையெனில் ஒரு பயிற்சியாளராக நான் அங்கு தோல்வியடைந்துவிட்டேன். ஏனெனில் அவரிடம் அதிக திறமை இருக்கிறது. அதை வெளிக்கொண்டுவருவதே என் வேலை" என்று கூறினார்.

Ravi Shastri & Virat Kohli
Ravi Shastri & Virat Kohli
AP

இதற்கிடையில், தனக்கும் கோலிக்கும் இடையேயான உறவைப் பற்றியும் சாஸ்திரி பேசினார். "நாங்கள் இருவரும் மிகவும் ஆக்ரோஷமானவர்கள். நாங்கள் வெற்றிக்காக விளையாட விரும்புனோம். ஆக்ரோஷமான, அச்சமற்ற கிரிக்கெட்டை ஆடுவது என்று நாங்கள் முடிவு செய்தோம்" என்றார்.