Published:Updated:

Ranji Trophy : உயிர் பெறுமா இந்திய கிரிக்கெட்டின் ஆன்மா?

BCCI- Ranji trophy

எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் ஏதேனும் ஒருநாள் தேசிய அணியில் ஆடிவிட மாட்டோமா என்ற ஆசை நிச்சயம் இருக்கும் அதே போல தான் ராஞ்சியில் ஆடும் வீரர்களுக்கும் ஆனால் அதையும் தாண்டி அவர்களின் முழுமையான வாழ்வாதாரத்தை இத்தனை ஆண்டுகள் அளித்து வருகிறது இத்தொடர்.

Ranji Trophy : உயிர் பெறுமா இந்திய கிரிக்கெட்டின் ஆன்மா?

எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் ஏதேனும் ஒருநாள் தேசிய அணியில் ஆடிவிட மாட்டோமா என்ற ஆசை நிச்சயம் இருக்கும் அதே போல தான் ராஞ்சியில் ஆடும் வீரர்களுக்கும் ஆனால் அதையும் தாண்டி அவர்களின் முழுமையான வாழ்வாதாரத்தை இத்தனை ஆண்டுகள் அளித்து வருகிறது இத்தொடர்.

Published:Updated:
BCCI- Ranji trophy

இந்த டி20 உலககோப்பைக்கு பின்னால் தான் இந்திய கிரிக்கெட்டில் எத்தனை மாற்றங்கள். முதலில் டி20 கேப்டன்சியில் இருந்து தானாக முன்வந்து பதவி விலகினார் கோலி. பின்னர் அணியின் நலனை கருதி அவரின் 50 ஓவர் கேப்டன் பதவியையும் சேர்த்து நீக்கியது பிசிசிஐ. இதற்கிடையில் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி இருந்து இடத்தில் ராகுல் டிராவிட் வந்து அமர்ந்துள்ளார். அதன்பின் யாரும் எதிர்பாராதவகையில் தன் டெஸ்ட் கேப்டன்சியையும் துறந்தார் கோலி. தற்போது ஐ.பி.எல் 2021 முடிந்து ஐந்தே மாதங்களில் அடுத்த தொடரை நடத்த முழுமூச்சுடன் ஆயத்தமாகி வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.

Ranji Trophy
Ranji Trophy

ஒன்று மட்டும் இன்னும் மாறவில்லை. ஆம், கடந்த 85 வருடங்களாக இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக தொடர்ந்து விளங்கி வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் புறக்கணிப்பு மட்டும் இன்னும் தொடர்ந்து வருகிறது. இன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கின் ஓர் அசைக்க முடியாத அணியாக இந்தியாவை நிச்சயம் கூறலாம். அந்த எழுச்சிக்கான பாதையில் பின்னோக்கி பயணித்தோமானால் அது 1983 உலகக்கோப்பைக்கே சென்று சேரும். அக்கோப்பையை இந்தியா வெல்வதற்கு முழுமுதற்காரணமாய் இருந்ததும் கபில் தேவ் தான் என்பதிலும் துளி மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், ஹரியானாவில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த கபில் தேவ் லார்ட்ஸ் மைதான பால்கனியில் உலகக்கோப்பையை ஏந்தியதற்கு பின்னால் இருந்தது ரஞ்சி தொடர்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அப்படி அன்றிலிருந்து இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் இந்திய தேசிய அணியில் பல்வேறு ஜாம்பவான்கள் தொடர்ந்து உருவாவதற்கு முக்கிய காரணம் ரஞ்சி தொடர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால் இப்படி பட்ட ஒரு தொடரின் ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்குவதற்கே இத்தனை தயக்கம் காட்டி வருகிறது பிசிசிஐ. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஞ்சி கோப்பை நடத்தப்படவில்லை. இதே காலகட்டங்களில் இரண்டு ஐ.பி.எல் தொடர்கள், மற்ற உள்ளூர் டி20 தொடர்களை பல்வேறு முயற்சிகளுக்கிடையில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது பிசிசிஐ.

இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு கட்ட உள்ளூர் தொடர்கள் நடப்பதுண்டு. தற்போது ஓவ்வொரு மாநிலங்களுக்கென்றும் தனியே டி20 தொடர்கள் வந்துவிட்டன. ஆனால் இவை எவற்றையும் போல வெறும் உள்ளூர் திறைமைகளை தேசிய அணிக்கு கைகாட்டும் வேலையை மட்டும் செய்துவிடவில்லை ரஞ்சி, அதை எந்த ஒரு உள்ளூர் தொடரும் செய்துவிடும். ஆனால் இந்த ஒட்டுமொத்த தேசத்திலும் கிரிக்கெட் என்ற விளையாட்டின் உயிர்நாடியை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் மிக முக்கிய பங்குவகிக்கிறது ரஞ்சி. எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் ஏதேனும் ஒருநாள் தேசிய அணியில் ஆடிவிட மாட்டோமா என்ற ஆசை நிச்சயம் இருக்கும் அதே போல தான் ராஞ்சியில் ஆடும் வீரர்களுக்கும் ஆனால் அதையும் தாண்டி அவர்களின் முழுமையான வாழ்வாதாரத்தை இத்தனை ஆண்டுகள் அளித்து வருகிறது இத்தொடர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ ரஞ்சி கோப்பை குறித்தான எந்த அறிவிப்பும் இல்லாதது எங்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அனைத்து கிரிக்கெட் வீரர்களும் ஐ.பி.எல் போட்டிகளை ஆடுவதில்லை. மீதமுள்ள எங்களை போன்ற வீரர்களுக்கு இது போன்ற தொடர்கள் மட்டுமே வாழ்வாதாரம் அளிக்கிறது. மிக கடினமாக உழைத்து படித்த பிறகு தேர்வுகளே இல்லை என்று கூறியது போல் உள்ளது எங்களது நிலை. இனி எத்தனை காலம் படித்துக்கொண்டு மட்டுமே இருப்பது” தன் கிரிக்கெட் கரியரின் தொடக்க நிலையில் உள்ள வீரரின் கூற்று அல்ல இது, இரண்டு முறை ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணியின் கேப்டன் ஃபைசல் இவ்வாறு கூறியுள்ளார்.

ரஞ்சி கோப்பை அதன் பழைய முக்கியத்துவத்தை இழந்ததால் இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்களும் தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன. அதை பார்ப்பதற்கும் முன்பாக அந்த முக்கியத்துவம் குறைத்ததற்கான காரணங்களை பார்த்துவிடுவோம்.

இதை நாம் இரண்டு கோணங்களில் அணுக வேண்டி இருக்கிறது. முதலாவதாக ஐ.பி.எல்-யின் வருகைக்கு பின்பு ரஞ்சி தொடருக்கு பிசிசிஐ கொடுக்கும் முக்கியத்துவம். 2018-19 ஆண்டுகளில் வெறும் 14 இன்னிங்ஸ்களில் 1331 ரன்களை குவித்த சிக்கிமின் மிலிந்த் குமாரையோ அதற்கடுத்த சீசனில் 1340 ரன்கள் எடுத்த அருணாச்சல் பிரதேசத்தின் ராகுல் தலாலையோ நம்மில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதே ஐ.பி.எல் போட்டியில் ஒரு ஓவரில் 5 சிக்ஸர் அடித்த ராகுல் தேவாத்தியா அன்றிரவே உலகமுழுவதும் பிரபலமானார். முன்பெல்லாம் இந்திய தேசிய அணியில் இடம்பெறுவதற்கு ரஞ்சி தொடர் மட்டுமே பாதையாக இருந்தது. ஆனால் ஐ.பி.எல் வந்த பிறகு பெயருக்கு கூட ரஞ்சியில் இருந்து வீரர்களை தேர்வு செய்வதில்லை பிசிசிஐ.

Ranji Trophy
Ranji Trophy

இதனால் ரஞ்சி குறித்தான பார்வை வீரர்களிடமும் மாறியுள்ளது. இந்த இரண்டாவது கோணத்தை விளக்க உதாரணத்திற்கு தீபக் சஹரை எடுத்துக்கொள்வோம். மாநில அணிக்காக பல ரஞ்சி சீசன்களில் மிகவும் உழைத்த அவர் ஐ.பி.எல் ஆடத்தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் இந்திய அணியில் இடம்பெற்றுவிட்டார். இதை அவரும் கூறியுள்ளார் “ ரஞ்சி தொடரில் ஆடி இந்திய அணிக்கு செல்வதென்பது மிக நீண்ட பாதை. அதனால் தான் நான் வைட்-பால் ஃபார்மெர்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினேன்”.

ஐ.பி.எல் தொடரில் ஆடுபவர்கள் எல்லாம் இந்திய அணியில் ஆட தகுதி இல்லாதவர்கள் என்றில்லை. ஆனால் ஒரு வானுயர்த்து நிற்கப்போகும் கட்டிடத்திற்கான பலமான அடித்தளத்தை ஐ.பி.எல் அளிக்குமா என்பது நிச்சயம் சந்தேகமே. வெறுமென புதிய வீரர்களை கண்டெடுக்கும் கருவியான மட்டும் ரஞ்சி தொடரை சுருக்கி விட முடியாது. புஜாரா, ரஹானே போன்ற தேசிய அணியில் சிறப்பான பங்காற்றிய வீரர்கள் தங்களது பழைய ரிதமை மீட்டெடுப்பதற்கும் ரஞ்சி தொடர் முக்கிய பங்காற்றுகிறது.

Ranji Trophy
Ranji Trophy

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் ஸ்பின்னர் வெங்கடபதி ராஜு இவ்வாறு கூறுகிறார் “ இந்திய அணி வீரர்கள் தற்போது குறைந்தபட்ச உள்ளூர் போட்டிகளை கூட ஆடுவதில்லை. கொரோனா பரவலை தடுக்க ஏற்படுத்தும் பயோ-பபுள் இதற்கான காரணமாக கூறினாலும் தென்னாப்பிரிக்க தொடரில் ஏற்பட்டுள்ள தோல்வி ரஞ்சியின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது” என்றார்.

இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் அருண் லால் “ ரஞ்சி தொடரின் முக்கியத்துவத்தை பிசிசிஐ அதிகரிக்க வேண்டும். பரிசு தொகையை கூட்டி இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவேண்டிய நேரமிது. விராட் கோலி போன்ற வீரர்கள் ரஞ்சி கிரிக்கெட்டை மீண்டும் விளையாட நான் விரும்புகிறேன் “ என்று கூறினார்.

இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் இவ்வாறு தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் “ ரஞ்சி தொடரை நடத்த பிசிசிஐ தயக்கம் காட்டினால் இந்திய கிரிக்கெட் அதன் முதுகெலும்பையே இழந்துவிடும்”.

இத்தனை நடந்த பிறகு நேற்றைய தினம் பிசிசிஐ-யின் கவுரவ செயலாளர் ஜெய் ஷா இந்த வருடம் ரஞ்சி தொடர் நிச்சயம் நடைபெறும் என்று உறுதியளித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக இத்தொடரின் முதல் கட்டம் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும் இரண்டாம் கட்டம் ஐ.பி.எல்-க்கு பின்பும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட்டின் அடித்தளத்தை செப்பனிடும் நேரமிது!!!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism