Published:Updated:

வெளியே ஜா(த)வ்... உள்ளே ரெய்னா... சென்னை சூப்பர் கிங்ஸின் ரிட்டென்ஷன் லிஸ்ட் ரெடி?! #CSK #IPL2021

#CSK

பல வீரர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதால், சென்னை அணி பல புதிய வீரர்களை நல்ல விலைக்கு வாங்கக்கூடிய அளவுக்கு பர்ஸில் பணம் சேர்த்திருக்கிறது.

2021 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற இருக்கிறது. ஏலத்துக்கு முன்பாக எல்லா அணிகளும் எந்த வீரர்களைத் தக்கவைக்கிறார்கள், யாரை விடுவிக்கிறார்கள் என்பதை பிசிசிஐ-க்கு இன்று மாலைக்குள் தெரிவிக்கவேண்டும். இதன்படி கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே தங்கள் வீரர்களின் ரிட்டென்ஷன் லிஸ்ட்டை பிசிசிஐ-க்கு அனுப்பிவிட்டன.

சென்னை சூப்பர் கிங்ஸ் லிஸ்ட்டில் இருந்து கேதர் ஜாதவ், முரளி விஜய், பியுஷ் சாவ்லா ஆகியோரின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது, தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஒழுக்க விதிமுறை மீறலில் ஈடுபட்ட சுரேஷ் ரெய்னா, ஐபிஎல்-ல் இருந்தே வெளியேறினார். ஆனாலும், அவரை அணியில் இருந்து நீக்காமல் வைத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், இப்போது அவரை 2021 சீசனுக்கு தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

வெளியே ஜா(த)வ்... உள்ளே ரெய்னா... சென்னை சூப்பர் கிங்ஸின் ரிட்டென்ஷன் லிஸ்ட் ரெடி?! #CSK #IPL2021

2020 சீசனில் பங்கேற்காத ஹர்பஜன் சிங்கின் கான்ட்ராக்ட்டை கடந்த ஆண்டே முறித்துக்கொண்டது சிஎஸ்கே. ஷேன் வாட்சன் கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டோடு ஓய்வை அறிவித்துவிட்டதால் அவரும் இந்த ஆண்டு சிஎஸ்கே லிஸ்ட்டில் இல்லை.

41 வயதான தென்னாப்பிரிக்க ஸ்பின்னர் இம்ரான் தாஹிரும் இந்த ஆண்டுக்கான சிஎஸ்கே அணியில் இருக்கமாட்டார் என்றே எதிர்பார்க்கலாம். இதனால் சென்னை அணி பல புதிய வீரர்களை நல்ல விலைக்கு வாங்கக்கூடிய அளவுக்கு பர்ஸில் பணம் சேர்த்திருக்கிறது.

கேதர் ஜாதவ் வெளியே போனதால் 7.8 கோடி ரூபாயும், பியூஷ் சாவ்லா வெளியேற்றப்பட்டதால் 6.75 கோடி ரூபாயும் சென்னைக்கு மிச்சமாகியிருக்கிறது. இம்ரான் தாஹிர் 1 கோடி, ஹர்பஜன் சிங் 2 கோடி, முரளி விஜய் 2 கோடி என இந்த வீரர்கள் மூலமாக மட்டுமே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் சென்னைக்கு திரும்பக் கிடைத்திருக்கிறது. இவர்கள் தவிர கான் ஷர்மா, ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோரும் சென்னை அணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. டிவெய்ன் பிராவோவின் இடமும் கேள்விக்குறியதே!

வெளியே ஜா(த)வ்... உள்ளே ரெய்னா... சென்னை சூப்பர் கிங்ஸின் ரிட்டென்ஷன் லிஸ்ட் ரெடி?! #CSK #IPL2021

சென்னை அணியில் யார் யார் இருப்பார்கள்?

கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், சாம் கரண், லுங்கி எங்கிடி, ரித்துராஜ் கெய்க்வாட், ஜெகதீசன், தீபக் சஹார் ஆகியோர் சென்னை அணியில் தொடர்ந்து இருப்பார்கள்.

இந்தமுறை ஏலத்தில் தமிழக வீரர்களை சிலரை அணிக்குள் எடுக்க திட்டமிட்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்!