Published:Updated:

WTC21 : சவுத்தாம்ப்டனில் மழையில்லை... ஆனால், ப்ளேயிங் லெவனில் இருந்து ஜடேஜாவை தூக்கப்போகிறாரா கோலி?

கோலி - கேன் வில்லியம்சன்
கோலி - கேன் வில்லியம்சன்

கடந்த 12 மணி நேரமாக சவுத்தாம்ப்டனில் மழையில்லை. அதனால், இன்றைய ஆட்டம் திட்டமிட்டடி மதியம் 3 மணிக்குத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்றும் இடையிடையே மழையின் குறுக்கீடுகள் இருக்கலாம்.

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி நேற்று இங்கிலாந்தில் தொடங்க இருந்தது. ஆனால், விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்ய, நேற்றைய நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. முதல் நாள் ஆட்டம் நின்றுபோனாலும் ஐசிசி இந்த இறுதிப்போட்டிக்கு ரிசர்வ் நாள் வைத்திருப்பதால் இன்று முதல் ஐந்து நாள் ஆட்டமாக இந்த டெஸ்ட் தொடங்கயிருக்கிறது.

கடந்த 12 மணி நேரமாக சவுத்தாம்ப்டனில் மழையில்லை. அதனால், இன்றைய ஆட்டம் திட்டமிட்டடி மதியம் 3 மணிக்குத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்றும் இடையிடையே மழையின் குறுக்கீடுகள் இருக்கலாம்.

சவுத்தாம்ப்டன் பிட்ச்
சவுத்தாம்ப்டன் பிட்ச்

நேற்று போட்டி தொடங்குவதாக இருந்த நிலையில் இந்திய அணி தனது ப்ளேயிங் லெவனை கடந்த வியாழக்கிழமையே அறிவித்தது. ரோஹித் ஷர்மா, ஷுப்மான் கில், புஜாரா, கோலி, அஜிங்கியா ரஹானே என ஐந்து பேட்ஸ்மேன்கள், விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் என இடது மற்றும் வலது கை ஸ்பின் ஆல்ரவுண்டர்கள், இஷாந்த், ஷமி, பும்ரா என மூன்று வேகப்பந்து வீச்சாளர்களோடு ப்ளேயிங் லெவனை அறிவித்தது இந்தியா.

இந்தியா ப்ளேயிங் லெவனை அறிவித்ததுபோல நியூசிலாந்து தனது ப்ளேயிங் லெவனை அறிவிக்கவில்லை. அமைதியாகவே இருந்தது. இப்போது மழை பெய்து முதல் நாள் ஆட்டம் தொடங்காமலே ரத்து செய்யப்பட்டுவிட்டது. இன்னும் முழுமையாக 5 நாட்கள் இருந்தாலும், இடையேயிடையே மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக நியூசிலாந்து பெளலர்களின் கை ஓங்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இன்று டாஸுக்கு முன்னதாக கேப்டன் கோலி தனது ப்ளேயிங் லெவனை மாற்றிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்து பெளலர்களை சமாளிக்க கூடுதல் பேட்ஸ்மேன் தேவை என்பதால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ஹனுமா விஹாரி ப்ளேயிங் லெவனுக்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹனுமா விஹாரி உள்ளே வந்தால் ரவீந்திர ஜடேஜா வெளியே உட்காரவைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு