Published:Updated:

மீண்டும் கண்ணீர்விட்ட தென்னாப்பிரிக்கா... அய்யோ பாவம் இங்கிலாந்து! #WT20

Nadine de Klerk
News
Nadine de Klerk ( AP )

இன்னிங்ஸ் இடைவெளியில் பெய்த மழை முதலிலேயே பெய்திருந்தால் லீக் சுற்று முடிவுகளின் படி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கும். இதே லாஜிக்கை வைத்து முதல் அரையிறுதியை யோசித்துப் பார்த்தால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவை விட அய்யோ பாவம்தான்.

அதிரடி சரவெடியாக நடந்திருக்க வேண்டிய பெண்கள் உலகக்கோப்பையின் அரையிறுதிப் போட்டிகள் அடைமழையில் அல்லோலகல்லோலப்பட்டு ஆரவாரமின்றி நமத்துப் போன ஊசிப்பட்டாசாக நடந்து முடிந்துள்ளது. மழையால் இந்தியா, இங்கிலாந்து இடையேயான முதல் அரையிறுதிப் போட்டி கைவிடப்பட்டு லீக் சுற்று முடிவுகளின் அடிப்படையில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. `அவன் அவன் எடுக்குற முடிவும் நமக்குச் சாதகமாத்தான்யா இருக்கு' என இந்திய அணியும் ரசிகர்களும் ஸ்மைலிகளைப் பறக்கவிட்டனர்.

ஆஸிக்கு எதிராக உலகக்கோப்பையில் இதுவரை விளையாடியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் தென் ஆப்பிரிக்கா தோல்வியையே தழுவியுள்ளது. முதல் போட்டியைப் போன்றே இரண்டாவது போட்டியும் கைவிடப்பட்டால் தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிடும் என்ற நிலை இருந்தது. மழை கொஞ்ச நேரத்தில் கப்சிப் ஆகிவிட்டதால் அரைமணி நேரம் தாமதமாக ஆஸிக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டி தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் நீகெர்க் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

T20 World Cup
T20 World Cup
AP

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனர்களாக அலீஸா ஹீலியும் பெத் மூனியும் களமிறங்கினர். வேகப்பந்துவீச்சாளர் இஷ்மாயில் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் ஹீலி. இஷ்மாயில் வீசிய மூன்றாவது ஓவரில் மூனியும் ஹீலியும் ஆளுக்கொரு பவுண்டரி அடிக்க, அடுத்து மலபா வீசிய 4 வது ஓவரில் ஹீலி இரண்டு பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார். சீராக ரன் சேர்துக்கொண்டிருந்த இந்தக் கூட்டணியை 5 வது ஓவரை வீசிய காகா பிரித்தார். இவரது பந்தில் கேப்டன் நீகெர்க்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஹீலி. ஹீலி அவுட் ஆனவுடன் கேப்டன் மெக் லேனிங் களமிறங்கினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அடுத்த நான்கு ஓவர்கள் தாக்குப்பிடித்த மூனி-லேனிங் ஜோடி நதீன் டி கிளர்க் பந்துவீச்சில் பிரிந்தது. அவர் வீசிய ஆட்டத்தின் 9-வது ஓவரில் மூனி லெக் ஸ்டம்பைப் பறிகொடுத்து வெளியேறினார். அடுத்தடுத்த ஓவர்களில் ஜெஸ் ஜோனேசனும், ஆஷ்லி கார்ட்னரும் வந்த வேகத்தில் வெளியேறிவிட ஆஸ்திரேலிய அணி தடுமாறத் தொடங்கியது. இருப்பினும் ஒரு புறம் கேப்டன் லேனிங் நிலைத்து நின்று ஒன்றும் இரண்டுமாக ஓடிக்கொண்டிருந்தார். இடையில் ஹேன்ஸ் கேப்டன் லேனிங்குடன் ஒரு சிறிய பார்டனர்ஷிப் அமைக்க கடைசி 5 ஓவர்களில் 40 ரன் எடுத்து 134-5 என்ற சுமாரான ஸ்கோரை எட்டியது ஆஸ்திரேலியா.

Meg Lanning
Meg Lanning
AP

எடுத்துவிடக்கூடிய ஸ்கோர் என்பதால் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கொஞ்சம் உற்சாகமாகவே பெவிலியனுக்குத் திரும்பினர். ஆனால், இதன் பிறகுதான் மெயின் ட்விஸ்ட்டே. நாக்-அவுட் போட்டிகளில் எதாவது ஒரு எசகுபிசகான காரியம் நடைபெற்று காலியாகிவிடும் என்பது சௌத் ஆப்பிரிக்காவின் துன்பியல் வரலாறு. இந்த முறையும் பஞ்ச பூதங்களில் ஒன்றான மழை சௌத் ஆப்பிரிக்காவுக்கு வில்லனாக மாறி இன்னிங்ஸ் இடைவேளையில் வெளுத்து வாங்க டக்வொர்த் முறைப்படி 13 ஓவர்களில் 98 என்ற டார்கெட் நிர்ணயிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சௌத் ஆப்பிரிக்க அணியின் ஓப்பனர்களாக லிசல் லீ, நீகெர்க் களமிறங்கினர். மெதுவாகத் தொடங்கிய இந்த ஜோடி டாப் கியருக்குச் செல்லும் முன்பாகவே சோஃபி மோலினாக்ஸ் இந்தக் கூட்டணியைப் பிரித்தார். அவர் வீசிய 3 வது ஓவரில் லாங் ஆனில் தூக்கியடித்து லீ அவுட் ஆனார். அடுத்தடுத்த ஓவர்களில் நீகெர்க்கும், டு ப்ரீஸும் அவுட்டாகி விட 6 ஓவர்களில் 31-3 என்ற நிலையில் தள்ளாடியது சௌத் ஆப்பிரிக்கா. இந்நிலையில் கூட்டணி சேர்ந்த வால்வார்ட்டும், சனே லுஸ்ஸும் 8வது ஓவரிலிருந்து வேகமெடுக்கத் தொடங்கினர். பவுண்டரிகளாக அடித்து ரன்ரேட்டை எட்டுமளவுக்குக் கொண்டு வந்தனர். கடைசி 3 ஓவரில் 32 ரன்கள் அடிக்க வேண்டியிருந்த நிலையில் கிம்மின்ஸ் வீசிய 11 வது ஓவரில் 5 ரன் மட்டுமே கொடுத்து ஆட்டத்தில் த்ரில் ஏற்றினார்.

Australia
Australia
AP

கடைசி இரண்டு ஓவர்களில் 27 ரன்கள் அடிக்க வேண்டியிருந்த நிலையில் மேகன் ஷூட் வீசிய 12 வது ஓவரில் லுஸ் லாங் ஆ ஃபில் தூக்கியடித்து கேட்ச் ஆனார். லுஸ் பெவிலியனுக்குத் திரும்பினாலும் மறுபுறம் வால்வார்ட் விடுவதாக இல்லை. 12 வது ஓவரின் கடைசிப் பந்தை சிக்சருக்கு விளாசி மேலும் பதற்றத்தைக் கூட்டினார். இறுதி ஓவரில் வெற்றிக்கு 19 ரன் எடுக்க வேண்டிய நிலையில் முதல் பந்திலேயே ட்ரையான் அவுட் ஆனார். அடுத்த மூன்று பந்துகளில் ஒரு பவுண்ட்ரியுடன் 7 ரன் அடித்தார் வால்வார்ட் கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டீ க்ளர்க்கால் 6 ரன் மட்டுமே எடுக்க முடிந்ததால் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸியிடம் தோல்வியைத் தழுவி மீண்டுமொரு நாக்-அவுட் சுற்றைக் கண்ணீரோடு முடித்தனர் தென் ஆப்பிரிக்க வீரர்கள். ஷாப்பிங்க்குச் சென்று வருவது போல செம கூலாக மீண்டும் இறுதிப்போட்டிக்குச் சென்றுவிட்டது ஆஸ்திரேலியா.

இன்னிங்ஸ் இடைவெளியில் பெய்த மழை முதலிலேயே பெய்திருந்தால் லீக் சுற்று முடிவுகளின் படி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றிருக்கும். இதே லாஜிக்கை வைத்து முதல் அரையிறுதியை யோசித்துப் பார்த்தால் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவை விட அய்யோ பாவம்தான். களத்திற்குள்ளே இறங்காமல் தொடரை விட்டு வெளியேறியிருக்கிறது இங்கிலாந்து. ஒரே நாளில் ஒரே க்ரவுண்ட்டில் இரண்டு அரையிறுதிப் போட்டிகள், அதற்கும் ரிசர்வ் டே கிடையாது, குழப்பமான டக்வொர்த் லீவிஸ் என இந்த உலகத்தொடரிலும் சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லை.

எது எப்படியோ ஆனால் இறுதிப்போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோத இருப்பதால் நிச்சயம் எதிர்பார்த்தது போல் விறுவிறுப்பாகத்தான் முடியப்போகிறது இந்த உலகக்கோப்பை யுத்தம்.