Published:Updated:

T20 WC 2022: "பும்ராவை ரீப்ளேஸ் செய்யப்போகும் அந்த வீரர் ஷமியா?"- ராகுல் டிராவிட் விளக்கம்

பும்ரா, முகமது ஷமி

பும்ராக்குப் பதில் ஷமி ரீப்ளேஸ் செய்யப்படுவார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வரும் நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

Published:Updated:

T20 WC 2022: "பும்ராவை ரீப்ளேஸ் செய்யப்போகும் அந்த வீரர் ஷமியா?"- ராகுல் டிராவிட் விளக்கம்

பும்ராக்குப் பதில் ஷமி ரீப்ளேஸ் செய்யப்படுவார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்து வரும் நிலையில், இது குறித்து விளக்கமளித்துள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

பும்ரா, முகமது ஷமி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இதில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதுகில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக இந்தத் தொடரில் ஆடமாட்டார் என பி.சி.சி.ஐ சமீபத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் பும்ராவை ரீப்ளேஸ் செய்யப்போகும் அந்த வீரர் யார் என்ற கேள்வி எழுந்துவருகிறது. உலகக்கோப்பைக்கான முதன்மை ஸ்குவாட் அறிவிக்கப்பட்ட போதே ரிசர்வ் வீரர்களும் சேர்த்தே அறிவிக்கப்பட்டனர். அதன்படி ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சஹார், முகமது ஷமி மூவரும்தான் இந்திய அணியின் ரிசர்வ் வீரர்கள். பும்ராக்குப் பதில் அப்படியே ஒரு வேகப்பந்து வீச்சாளரைக் கொண்டு ரீப்ளேஸ் செய்ய இந்திய அணிக்கு ஷமி, தீபக் சஹார் என இரண்டு ஆப்சன்கள் இருக்கின்றன. இதில் பும்ராக்குப் பதில் ஷமி ரீப்ளேஸ் செய்யப்படுவார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "பும்ரா இல்லாதது பெரும் இழப்புதான். அவர் ஒரு சிறந்த வீரர், ஆனால் தற்போது அவருக்குப் பதிலாக வேறொருவரை ரீப்ளேஸ் செய்தாக வேண்டிய சூழ்நிலை. இது அவரது இடத்தை நிரப்ப மற்ற வீரர்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பும் கூட. இருப்பினும் அவரது ஆட்டத்தை மைதானத்தில் பார்க்க முடியாமல் போனது எல்லோருக்கும் வருத்தமே.

பும்ராக்குப் பதிலாக வேறு வீரரை ரீப்ளேஸ் செய்ய அக்டோபர் 15 வரை கால அவகாசம் இருக்கிறது. ஷமி காத்திருப்புப் பட்டியலில் இருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக கோவிட்-19 தொற்றால் அவரால் இந்தத் தொடரில் விளையாட முடியவில்லை. அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார். அவர் எப்படிக் குணமடைந்து வருகிறார் என்பது அவர்கள் கொடுக்கும் அறிக்கை மூலம்தான் தெரியவரும். கொரோனா பாதிப்பு வந்து 15 நாள்களுக்குப் பிறகுதான் அறிக்கை கிடைக்கும். அவருடைய அறிக்கை கிடைத்தவுடன் எதை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றி ஆலோசிப்போம்" என்று கூறியுள்ளார்.