Published:Updated:

'மும்பை பாலிட்டிக்ஸெல்லாம் இல்ல; 88 மாதிரி இன்னொரு சம்பவம் நடந்தே ஆகணும்' - அஸ்வின் உறுதி!

Ashwin ( TNCA )

மும்பையிலிருந்து அதிக வீரர்கள் வருகிறார்கள் என்பதை அரசியல் கண்ணோட்டத்திலேயே பார்த்துப் பழகிவிட்டோம். ஆனால்....

Published:Updated:

'மும்பை பாலிட்டிக்ஸெல்லாம் இல்ல; 88 மாதிரி இன்னொரு சம்பவம் நடந்தே ஆகணும்' - அஸ்வின் உறுதி!

மும்பையிலிருந்து அதிக வீரர்கள் வருகிறார்கள் என்பதை அரசியல் கண்ணோட்டத்திலேயே பார்த்துப் பழகிவிட்டோம். ஆனால்....

Ashwin ( TNCA )

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து ஊக்குவிப்பதற்கான தேர்வு முகாம்கள் தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிமுக விழா தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

Ashwin
Ashwin
TNCA

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசியவை. 'தமிழ்நாடு கிரிக்கெட் தக்க சமயத்தில் இப்படி ஒரு முன்னெடுப்பை செய்யவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழகத்திலிருந்து பல வீரர்கள் TNPL மூலமும் IPL மூலமும் முன்னேறி வருகின்றனர். ஆனால், நாம் இதை தாண்டியும் யோசிக்க வேண்டும். ரெட் பால் கிரிக்கெட்டிலும் நாம் சாதிக்க வேண்டும். ஐ.பி.எல் ரெக்கார்டோடு சேர்த்து ரஞ்சி டிராபியிலும் நன்றாக ஆடியிருக்கும் வீரர்கள் மட்டுமே இந்திய அணிக்கு அதிகமாக தேர்வு செய்யப்படுகின்றனர். அதனால்தான் ரஞ்சி டிராபியில் சிறப்பாக செயல்படும் அணிகளின் மாநிலத்திலிருந்து அதிக வீரர்கள் ஆட வருகிறார்கள். மும்பையிலிருந்து அதிக வீரர்கள் வருகிறார்கள் என்பதை அரசியல் கண்ணோட்டத்திலேயே பார்த்து பழகிவிட்டோம். மும்பை ரஞ்சியில் சிறப்பாக ஆடுவதால்தான் அத்தனை வீரர்கள் அங்கிருந்து வருகிறார்கள். ரெட் பால் கிரிக்கெட்டில் தமிழ்நாடு அத்தனை சிறப்பாக இல்லை. குறிப்பாக, பௌலர்கள் விஷயத்தில் பாலாஜிக்கு பிறகு பெரிய வேகப்பந்து வீச்சாளர்கள் வரவில்லை. தமிழகத்தில் அதிக திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால், பெரியளவில் விழிப்புணர்வு இல்லை. இந்த முகாம்கள் மூலம் அதுவும் களையப்பட வேண்டும். கடலூர், நாகப்பட்டினம் என தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலிருந்தும் பௌலர்கள் வர வேண்டும். நீண்ட கால அடிப்படையில் இந்தத் திட்டம் பயனளிக்கக்கூடியதாக இருக்கும் என நம்புகிறேன். 1988 இல் தமிழகம் ரஞ்சி கோப்பையை வென்றது. அதேமாதிரியான சம்பவத்தை மீண்டும் நிகழ்த்துவதுதான் இந்தத் திட்டத்தின் இறுதி நோக்கமாகவும் இருக்கிறது. பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்களை உதவி செய்து முன்னேற்ற தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் இயன்ற அளவுக்கு உதவும். இந்த தேர்வு முகாமிற்கு என்னால் இயன்ற உதவிகளை எப்போது வேண்டுமானாலும் செய்ய நானும் காத்திருக்கிறேன்.' என அஷ்வின் பேசியிருந்தார்.