Election bannerElection banner
Published:Updated:

சென்னை சூப்பர் கிங்ஸா... இங்கிலாந்தில் கவுன்ட்டி கிரிக்கெட்டா?! குழப்பத்தில் புஜாரா!

புஜாரா
புஜாரா

"தற்போது என் கவனம் முழுவதும், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை தக்கவைப்பதில்தான் இருக்கிறது. ஐபிஎல் பற்றி இப்போது எந்த சிந்தனையும் இல்லை."

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் விளையாட செத்தேஷ்வர் புஜாராவை ஏலத்தில் எடுத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். 50 லட்சம் ரூபாய்க்கு புஜாரா ஏலம் எடுக்கப்பட்டதும், ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தொடங்கி எல்லா அணியின் உரிமையாளர்களும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் எப்படி டி20 ஆடப்போகிறார் என இந்திய ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இந்த ஆண்டு புஜாரா ஐபிஎல் தொடர் முழுவதும் பங்கேற்பதே சந்தேகம்தான் என்கிற தகவல்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.

செத்தேஷ்வர் புஜாரா, ராகுல் டிராவிட்டுக்குப்பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மினி சுவர் என அழைக்கப்படுகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது விளையாட்டைப் பார்த்தவர்களுக்கு இவர் குறைந்த ஓவர் போட்டிகளில் ஆடப் போகிறார் என்றால் வியப்பாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு நிதானமாக ஆடுவார். ஆனால், இப்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்பா, ஐபிஎல் தொடரா... எது முக்கியம் என்கிற கேள்வி புஜாராவின் முன்வந்து நிற்கிறது.

புஜாரா
புஜாரா
Tertius Pickard
''செய்திகளுக்குப் பணம் கொடுக்க முடியாது!'' - ஆஸ்திரேலிய அரசை மிரட்டுகிறதா ஃபேஸ்புக்?!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடயிருக்கிறது. இரண்டு டெஸ்ட்களுமே அஹமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு டெஸ்ட்களிலும் இந்தியா வென்றுவிட்டால் ஜூன் 18-ம் தேதி லண்டனில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்தை எதிர்த்து விளையாடும். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் அங்கே நடைபெற இருக்கிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் இந்தமுறை ஏப்ரல் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை நடைபெற இருப்பதால் ஒருவேளை இந்தியா இறுதிப்போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுவிட்டால் அதற்கு பயிற்சிகள் எடுக்க, புஜாரா மே மாதமே கவுன்ட்டி கிரிக்கெட் விளையாடச் செல்வார் எனத் தெரிகிறது.

புஜாரா
புஜாரா

"குறைந்த ஓவர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் விருப்பம். ஐபிஎல்-ன் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் நன்றி. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு முன்பு எனக்கு கால அவகாசம் இருக்கிறது. அதனால் அந்தக் காலத்தில் கவுன்ட்டி கிரிக்கெட்டும் ஆட நினைக்கிறேன். ஆனால், தற்போது என் கவனம் முழுவதும், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை தக்க வைப்பதில்தான் இருக்கிறது. அதன்பிறகுதான் ஐபிஎல் பற்றிச் சிந்திப்பேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக இருப்பவர் புஜாரா. அதனால், இந்தியா இறுதிப்போட்டியில் ஆடத்தகுதிபெற்றுவிட்டால் பிசிசிஐ, புஜாராவை விடுவிக்க சென்னை சூப்பர்கிங்ஸிடம் கோரிக்கைவைக்கும் என்றே தெரிகிறது.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு