Published:Updated:

12 முன்னணி ஊடக அணிகள்; களமிறங்கும் பிரபலங்கள்; களைகட்டப்போகும் MTCT கிரிக்கெட் திருவிழா!

MTCT

நாள்தோறும் பணிச்சுமையை தோளில் தூக்கி சுமக்கும் ஊடகப் பணியாளர்களின் ரிலாக்ஸ் நாட்களாக போட்டி நடைபெறும் நாட்கள் இருக்கப் போகிறது.

Published:Updated:

12 முன்னணி ஊடக அணிகள்; களமிறங்கும் பிரபலங்கள்; களைகட்டப்போகும் MTCT கிரிக்கெட் திருவிழா!

நாள்தோறும் பணிச்சுமையை தோளில் தூக்கி சுமக்கும் ஊடகப் பணியாளர்களின் ரிலாக்ஸ் நாட்களாக போட்டி நடைபெறும் நாட்கள் இருக்கப் போகிறது.

MTCT
ஊடக நிறுவனங்களுக்கு இடையிலான MTCT Season 3 கிரிக்கெட் போட்டி பிரமாண்டமாக மே 20, 21, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

நாள்தோறும் பணிச்சுமையை தோளில் தூக்கி சுமக்கும் ஊடகப் பணியாளர்களின் ரிலாக்ஸ் நாட்களாக போட்டி நடைபெறும் நாட்கள் இருக்கப் போகிறது. வார இறுதி நாட்களில் மட்டும் நடைபெறும் இப்போட்டி 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறுகிறது.

MTCT
MTCT
சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, விகடன், மாலை முரசு செய்திகள், புதிய தலைமுறை, ப்ளாக் ஷீப் என்று 12 அணிகள் மோதிக்கொள்ளும் இப்போட்டியில் பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது.

ஒவ்வொரு அணியிலும் ஒரு நட்சத்திர வீரர் விளையாடுவார். போட்டியில் வீரர்களை உற்சாகப்படுத்தவும் தங்கள் அணியின் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தவும் பெண் தூதுவர் இருப்பார். அவர்கள் சமூக வலைதளத்திலும், களத்திலும் நின்று அணியின் வெற்றிக்காக குரல் கொடுப்பார்கள்.

MTCT
MTCT

கடந்த 2 சீசனில் வெற்றிப்பெற்ற சன் டிவி அணி உட்பட மொத்தம் 4 அணிகள் முதல் சுற்றில் விளையாடாமலேயே குலுக்கல் முறையில் இரண்டாம் சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளன.

பலம் வாய்ந்த சன் டிவி அணியின் வீரர்கள் ஒவ்வொரு அணிக்கும் சிம்மசொப்பணமாக விளங்குவார்கள். தொடர்ந்து வெற்றி பெற்று வரும் சன் டிவி அணியை 3வது சீஸனில் தோற்கடிக்கும் இலக்குடன் மற்ற அணிகள் களம் இறங்குவார்கள். அதனால் களத்தில் சன் டிவி அணிக்கு டஃப் அதிகம் இருக்கும்.

MTCT Season 3 போட்டி கடந்த இரண்டு போட்டிகளை விட மிக பிரமாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைச்சர்கள், ஊடகப் பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் போட்டியை காண வருகைத்தர இருக்கிறார்கள். இம்முறை பொதுமக்களும் பார்வையாளராக கலந்துகொள்ளும் வகையில் மே 27 அன்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள் நிகழ்த்திக்காட்டப்பட உள்ளன. பறை இசைக் கலைஞர்களின் பிரமாண்ட பறை நடனம் நிகழ்த்த இருக்கிறார்கள். அதேபோல, கரகாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பொய்கால் குதிரையாட்டம், காளையாட்டம் என்று எண்ணற்ற ஆட்டக்கலைகளை நிகழ்த்தி பார்வையார்களை மகிழ்விக்க இருக்கிறார்கள்.

12 முன்னணி ஊடக அணிகள்; களமிறங்கும் பிரபலங்கள்; களைகட்டப்போகும் MTCT கிரிக்கெட் திருவிழா!

ஊடக உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் பெற்ற குணாளன் லாவண்யன் மற்றும் ஊர்வசி குணாளன் தம்பதியினர் Unique Media & Entertainments நிறுவனம் மூலம் இப்போட்டியை நடத்தி வருகிறார்கள்.

12 முன்னணி ஊடக அணிகள்; களமிறங்கும் பிரபலங்கள்; களைகட்டப்போகும் MTCT கிரிக்கெட் திருவிழா!

"ஊடகப் பணியாளர்களின் மனச்சோர்வை, உடல் சோர்வைப் போக்கி அவர்களை உற்சாகப்படுத்துவதே எங்களின் நோக்கம்" என்கிறார்கள் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் குணாளன்.