Published:Updated:

அவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்! #VikatanDiwaliMalar2019

காற்றுக்கு வலிக்காத வேகத்தில் வரும் பந்தை பிரதாப் சிங், ஒப்புக்குத் தட்டிவிடுவார். அடுத்து ஃபீல்டர்களின் வேலை ஆரம்பமாகும்.

கிரிக்கெட்
கிரிக்கெட்

ஜம்மு - காஷ்மீர் சமஸ்தான மகாராஜாவாக நாற்பது ஆண்டுகள் (1885 - 1925) ஆட்சி செய்தவர் பிரதாப் சிங். எதிலும் தனக்குத்தான் வெற்றிகிட்ட வேண்டும். எங்கும் தனக்கே முதல் மரியாதை கிடைக்க வேண்டும் என்பதில் பிரதாப் சிங் படு உஷார். அதற்காக அவர் செய்த கோமாளித்தனங்கள் எக்கச்சக்கம்.

பிரதாப் சிங், ஆள் படுகுள்ளம். பெரும்பாலும் தொளதொள பைஜாமா ஜிப்பாதான் அணிவார். தலைக்குமேல் ஓரடி உயரத்தில் அடர்த்தியான தலைப்பாகை. காதுகளில் எப்போதும் வைரத்தோடுகள். கிரிக்கெட் ஆடவும் இதே கெட்-அப்தான். கைகால்களில் பேடு, வேறு பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம் அணிந்துகொள்ளவே மாட்டார்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

பென்ஷன் வாங்கிக்கொண்டு பெட் ரெஸ்ட்டில் இருக்கவேண்டிய காலத்திலும் 'பேட் பிடிக்கப்போகிறேன், வா, வந்து பந்துவீசு' எனப் படுத்தியெடுத்தார். ஆனால், மட்டையைச் சரியாகப் பிடிக்கக்கூடத் தெரியாது. நினைப்பு மட்டும், 'அடிச்சா சிக்ஸர், நின்னா செஞ்சுரி!' அந்த நினைப்புக்குப் பங்கம் வராமல் பௌலர்கள் பந்துவீசக் கடமைப்பட்டவர்கள்.

காற்றுக்கு வலிக்காத வேகத்தில் வரும் பந்தை பிரதாப் சிங், ஒப்புக்குத் தட்டிவிடுவார். அடுத்து ஃபீல்டர்களின் வேலை ஆரம்பமாகும். அவர்கள் மறந்தும் தங்கள் கைகளால் பந்தைத் தொட்டுவிடக் கூடாது. ஜீவனின்றி உருண்டுவரும் கிரிக்கெட் பந்தை ஃபுட்பாலாக பாவித்துக் கொண்டு காலால் உதைக்க வேண்டும், பவுண்டரி லைனை நோக்கி. அந்தப் பந்து எல்லைக்கோட்டைத் தாண்டும்வரை துரத்திச் சென்று உதைத்துவிட்டு வர வேண்டும். ஒவ்வொரு பந்து போட்ட பிறகும் அம்பயர் தயாராக இருப்பார், 'ஃபோர்' என்று சைகை காட்ட.

 பிரதாப் சிங்
பிரதாப் சிங்

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

ஒரு பந்தை மகாராஜா பேட்டால் தட்டத் தவறிவிட்டால், அது சரியான பந்து என்றாலும் அம்பயரின் கைகள் வைடாக நீண்டுகொண்டிருக்கும். பௌலர்கள் ஒவ்வொரு பந்தையும் ஸ்டம்பை விட்டுத் தள்ளியே வீச வேண்டும். ஏதாவது ஒரு பந்து தப்பித்தவறி, ஸ்டம்பைக் கவிழ்த்திவிட்டால், அம்பயர் கடமை தவறாமல் கத்துவார் 'நோ பால்!' அந்தப் பந்தை வீசிய புண்ணியவானுக்கு ஆட்டம் முடிந்த பிறகு 'தக்க சன்மானம்' கிடைக்கும்.

எல்லா ஆட்டங்களிலும் பிரதாப் சிங்தான் முதலில் பேட் பிடிப்பார். அவர் மனம் விரும்பும் ரன் எடுக்கும்வரை களத்தில் இருப்பார். விக்கெட்டுகளுக்கு இடையே ஓடி ரன் சேர்க்கவெல்லாம் மாட்டார். அடித்தால் ஃபோர். எப்போதாவது சற்றே முயற்சி எடுத்துத் தூக்கி அடிப்பார். எல்லைக்கோடுகள் மாற்றியமைக்கப்படும். அது 'சிக்ஸர்' என்று பிரகடனப்படுத்தப்படும். பிரதாப் சிங்குக்குப் பின் களமிறங்கும் யாரும் அவரது ஸ்கோரைத் தொட முயற்சிசெய்யக் கூடாது. அவுட் ஆகிவிட வேண்டும். அல்லது, அம்பயர் பார்த்துக்கொள்வார்.

அவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்! #VikatanDiwaliMalar2019

இப்படியாக கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த காமெடியனாக விளங்கிய பிரதாப் சிங், ஒவ்வொரு மேட்சிலும் தன்னையே 'மேன் ஆஃப் தி மேட்ச்!' ஆக அறிவித்துக்கொள்ளவும் தவறவில்லை. அதற்கான விருதைத் தனக்குத் தானே வழங்கிக்கொண்டு பெருமையும்பட்டுக் கொண்டார்.

- இது ஜஸ்ட் ஒரு கிரிக்கெட் கோமாளி குறித்த தகவல் மட்டும்தான். விகடன் தீபாவளி மலரில் வெளியாகியுள்ள 'கறுப்பு வெள்ளைக் கதைகள்' எனும் சிறப்புக் கட்டுரையைப் படியுங்கள். கிழக்கிந்திய கம்பெனியர் இந்தியாவுக்குள் கிரிக்கெட்டை நுழைத்தது தொடங்கி,

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத மாபெரும் ஆளுமை வரையில் பல சுவாரசியங்களுடன் நீளும் அந்தக் கட்டுரை நிச்சயம் கிரிக்கெட் பிரியர்களுக்கு தீபாவளி சிறப்பு விருந்து.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

அவுட்டாக்கினால் 'தக்க சன்மானம்' - கிரிக்கெட் வரலாற்றில் ஓர் இம்சை அரசன்! #VikatanDiwaliMalar2019

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1