பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் மற்றும் அவரின் கைக்குழந்தையுடன் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை மவுன்ட் மவுங்கானுவில் நடந்த 2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி கண்டது. இந்தியாவின் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப் மற்றும் அவரின் கைக்குழந்தையுடன் இந்திய கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் குழுவாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் அவர்கள் பிஸ்மா மரூப்பின் குழந்தையுடன் கொஞ்சி விளையாடினர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்திய வீராங்கனைகள் குழந்தையை நோக்கிச் செய்யும் விளையாட்டுத்தனமான சைகைகள், மனதைக் கவரும் வகையில் உள்ளதாகக் கூறி, பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் சமூக ஊடகத்தில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்குமான ஆட்டம் மக்களிடையே மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
டாஸ்ஸில் ஜெயித்த இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா, ஸ்னே ராணா மற்றும் பூஜா வஸ்த்ரகர் அரை சதங்களை விளாசினர்.
7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் எடுத்தனர். 245 என்ற இலக்கோடு களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 43 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.