Published:Updated:

Paul stirling: ஐசிசி விருதுப் பரிந்துரையில் இடம்பெற்றிருக்கும் அயர்லாந்து வீரரைப் பற்றித் தெரியுமா?

Paul Stirling

சிறு வயதில் இருந்தே அவருக்கு உலகின் டாப் 10 பேட்ஸ்மன்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்பது அவருடைய கனவு, 2013ல் நனவாகியது.

Paul stirling: ஐசிசி விருதுப் பரிந்துரையில் இடம்பெற்றிருக்கும் அயர்லாந்து வீரரைப் பற்றித் தெரியுமா?

சிறு வயதில் இருந்தே அவருக்கு உலகின் டாப் 10 பேட்ஸ்மன்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்பது அவருடைய கனவு, 2013ல் நனவாகியது.

Published:Updated:
Paul Stirling

கிரிக்கேட் என்றாலே 10 நாடுகளின் விளையாட்டு என்றுதான் கருதப்பட்ட காலம் உண்டு. ஏன் 2019 உலகக் கோப்பையிலும் 10 நாடுகள் மட்டும்தானே விளையாடின. இப்படிபட்ட நிலையில், அஷோசியேட் அணி வீரர் ஒருவர் இந்தாண்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்! யார் அவர்?

அயர்லாந்தில் உள்ள ஒரு விளையாட்டு குடும்பம். தந்தை சர்வதேச ரக்பி நடுவராகவும் அண்ணன் கிரிக்கேட் வீரராகவும் வலம் வந்த வீட்டில் கடைக்குட்டியாக பிறந்தவர் அவர். அந்த சின்ன குடும்பத்தில் பிறந்தவர் தான் இன்று மிகப்பெரிய கிரிக்கேட் குடும்பத்தில் தன் பெயரை பதியவைத்திருக்கிறார். அவர் பால் ராபர்ட் ஸ்டர்லிங்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

1990-ல் பிறந்த பால் ஸ்டர்லிங், 2008-ம் ஆண்டு தனது 17 வயதில் நியூசிலாந்துக்கு எதிராக தன் முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். அடுத்த ஆண்டு இங்கிலாந்து கவுன்டி அணியான மிடில்செக்ஸ் உடன் மூன்றாண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இவ்வாறு சிறப்பாக தொடங்கிய அவரது கிரிக்கெட் கரியர் 2010-ம் ஆண்டே ஐ.சி.சி-யின் கண்களில் பட்டது. 2010-ம் ஆண்டுகான ஐ.சி.சி விருதுகளில் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கும், சிறந்த அஷோசியேட் அணி வீரருக்கான விருதுக்கும் இவர் பெயர் பரிந்துரைக்கபட்டது. அதிலும் வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்கள் பெயர்களில் இடம்பெற்ற ஒரே அஷோசியேட் அணி ஸ்டர்லிங் தான்.

Paul Stirling
Paul Stirling

விருதுகளுக்கு பெயர் பரிந்துரைக்கபட்ட அதே ஆண்டில் கனடாவுக்கு எதிரே தனது முதல் சர்வதேச சதத்தை பதிவுசெய்தார். அது வெறும் சதம் மட்டுமல்ல, அன்று அவர் அடித்த 177 ரன்கள் தான் இன்று வரை அயர்லாந்து கிரிக்கெட் வரலாற்றில் தனி நபர் அடித்த சிறந்த ஒருநாள் கிரிக்கெட் ஸ்கோர்.

2011ல் நடந்த உலககோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி அயர்லாந்து அதிர்ச்சியளித்ததை ரசிகர்கள் அறிவோம். அந்த வெற்றிக்கு பால் ஸ்டர்லிங் பெரிய காரணமாக இல்லை என்றாலும், அந்த உலககோப்பையின் மற்றொரு ஆட்டத்தில் அவர் செய்த சாதனை பலருக்கும் தெரியாது. நெதர்லாந்துக்கு எதிரே வெறும் 70 பந்துகளில் சதம் விளாசி வெற்றிக்கு அழைத்து சென்றார் அதிரடி ஆட்டகாரர் பால் ஸ்டர்லிங். உலககோப்பை வரலாற்றில் அது ஆறாவது அதிவேக சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு வயதில் இருந்தே அவருக்கு உலகின் டாப் 10 பேட்ஸ்மன்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்பது அவருடைய கனவு, 2013ல் நனவாகியது. 22 வயதில் ஒருநாள் போட்டி தரவரிசையில் 8வது இடத்தை பிடித்தார் ஒரு இணைநாடு வீரர். அது எப்படி சாத்தியமானது என்ற ஆச்சரியம் உள்ளது. இப்போதும் பெரிய சரிவு இல்லாமல் தரவரிசையில் 23வது இடத்திலேயே உள்ளார்.

இதுமட்டுமன்றி மேலும் பல சாதனைகளுக்கு பெயர் போனவர் பால் ஸ்டர்லிங்க். அயர்லாந்திற்காக அதிக சதம் அடித்த வீரர், அதிக அரைசதம் அடித்த வீரர், அதிக சிக்ஸ் அடித்த வீரர், அதிக ஃபோர் அடித்த வீரர் என்று இவரது பெயருக்கு கீழே மைல்கற்கள் குவிந்து கிடக்கிறன.

Paul Stirling
Paul Stirling

2021ல் 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 705 ரன்கள் விளாசியுள்ளார். இதில் அவருடைய சராசரி சுமார் 80. மேலும் இதில் மூன்று சதங்களும் இரண்டு அரைசதங்களும் அடித்துள்ளார். கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவரும் இவர்தான். இதுவே அவரது பெயர் இந்தாண்டு தனியாக தெரிய காரணமாகும்.

முதல் ஆட்டத்தில் வெறும் நான்கு ரன்களுக்கு ஆட்டமிழந்த பால் ஸ்டர்லிங் இன்று சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கு பரிந்துரைக்கபட்டுள்ள நான்கு வீரர்களுள் ஒருவர். மற்றவர்களுக்கு விருது கிடைத்தால் தான் அது சாதனை, ஆனால் இணை நாட்ட சேர்ந்த இவருக்கோ இது இப்போதே வாழ்நாள் சாதனை என்பதில் யாருக்கும் மாற்றுகருத்து இருக்காது.