Published:Updated:

`ப்பா... என்ன ஒரு டெடிகேஷன்!’ - பன்ட்டின் இன்ஸ்டா வீடியோவும் சஹாலின் பாராட்டும்!

பிரேம் குமார் எஸ்.கே.

பேட்டிங்கில் பாராட்டையும் கீப்பிங்கில் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார் பன்ட்!

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி 20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டி மழையால் தடைபட இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

பன்ட்
பன்ட்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு, தோனி இரு மாத ஓய்வு கேட்டார். அதன் காரணமாக, இந்திய அணியின் ரிஷப் பன்ட் பிரதான விக்கெட் கீப்பராக அணியுடன் பயணமானார். தனது அதிரடியான பேட்டிங்கால் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கிறார் பன்ட். ஆனால், விக்கெட் கீப்பிங்கில் அவரது சொதப்பல்கள் தொடர்கதையாகி வருகிறது.

பேட்டிங்கில் பாராட்டையும் கீப்பிங்கில் விமர்சனத்தையும் சந்தித்து வருகிறார் இந்த இளம் வீரர். தோனி இருந்த இடம் என்பதாலோ என்னவோ, ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் பன்ட் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்தார். அதில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டல் நடைபாதையில் குல்தீப் யாதவுடன் கீப்பிங் பயிற்சி செய்கிறார்.

கீப்பீங்கிலும் தான் கில்லிதான் என்பதை நிரூபிக்கும் பொருட்டு கடும் பயிற்சி பெற்று வருகிறார். வீடியோவில் குல்தீப் யாதவ், பந்தை கடுமையாகச் சுழற்ற அதை மிஸ் செய்யாமல் பிடிக்கிறார் பன்ட்.

கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வாய்ப்பில் பயிற்சி மேற்கொண்ட பன்ட் மற்றும் குல்தீப்புக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஹால், என்ன டெடிகேஷன் எனப் பாராட்டியுள்ளார்.