Published:Updated:

ஷேவாக், தோனி, கோலி, ரோஹித் கலந்த பாகிஸ்தானி ஹைதர் அலி யார்?! #HaiderAli

#HaiderAli

இளம் வீரர் தான் அறிமுகமாகும் முதல் சர்வதேச போட்டியிலேயே உள்ளே வந்தவுடன் அட்டாக்கிங் ஆடுவதைக் கண்டு மிரண்டுபோனது இங்கிலாந்து. சர்வதேச போட்டிகளுக்குதான் இது புதுசு. உள்ளூர் போட்டிகளில் வழக்கமாகவே இப்படி அட்டாக்கிங் ஆட்டம்தான் ஆடுவாராம் ஹைதர்.

ஷேவாக், தோனி, கோலி, ரோஹித் கலந்த பாகிஸ்தானி ஹைதர் அலி யார்?! #HaiderAli

இளம் வீரர் தான் அறிமுகமாகும் முதல் சர்வதேச போட்டியிலேயே உள்ளே வந்தவுடன் அட்டாக்கிங் ஆடுவதைக் கண்டு மிரண்டுபோனது இங்கிலாந்து. சர்வதேச போட்டிகளுக்குதான் இது புதுசு. உள்ளூர் போட்டிகளில் வழக்கமாகவே இப்படி அட்டாக்கிங் ஆட்டம்தான் ஆடுவாராம் ஹைதர்.

Published:Updated:
#HaiderAli
ஷேவாக் - தோனி - கோலி - ரோஹித்... இந்த நான்கு பேரும் சேர்ந்த கலவையாக ஒரு வீரர் கிரிக்கெட் ஆட வந்தால் எப்படியிருக்கும்... கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? கற்பனையெல்லாம் செய்து நேரத்தை வீணாக்க வேண்டாம். நிஜமாகவே அப்படி ஒரு வீரர் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகிவிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக களமிறங்கிய 19 வயதேயான ஹைதர் அலிதான் அந்த புதிய சென்சேஷன்.

ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற அந்த கடைசி டி20 போட்டியில் எப்படியும் வெற்றி பெற்றுவிடவேண்டும் என்கிற வெறியோடு இருந்த பாகிஸ்தான் ஹைதர் அலிக்கு அணிக்குள் முதல் வாய்ப்பை வழங்கியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணியின் ஓப்பனரான ஃபகர் ஸமான் மொயின் அலி வீசிய இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆக அப்போதுதான் உள்ளே வந்தார் ஹைதர் அலி. டெஸ்ட் தொடர் தோல்வி, டி20 போட்டியிலும் 1-0 எனத் தொடர் தோல்விகளின் பயத்தில் இருந்தபோதுதான் ஹைதர் அலிக்கு ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே அணியைக் காப்பாற்றுவதற்கான அழைப்பு வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மொயின் அலியின் கூக்ளிக்கள், ஆதில் ரஷித்தின் டாப் ஸ்பின், ஜோர்டனின் ரிவர்ஸ் ஸ்விங் இதைப்பற்றியெல்லாம் யோசித்திருப்பாரா என்று தெரியவில்லை. தான் சந்தித்த மொயின் அலியின் முதல் பந்தை சிங்கிளுக்குத் தட்டிவிட்டவர், இரண்டாவது பந்தை முட்டி போட்டு டீப் மிட் விக்கெட் மேல் ஒரு பெரிய சிக்ஸராக விளாசினார். இளம் வீரர் தான் அறிமுகமாகும் முதல் சர்வதேச போட்டியிலேயே உள்ளே வந்தவுடன் அட்டாக்கிங் ஆடுவதைக் கண்டு மிரண்டுபோனது இங்கிலாந்து. சர்வதேச போட்டிகளுக்குதான் இது புதுசு. உள்ளூர் போட்டிகளில் வழக்கமாகவே இப்படி அட்டாக்கிங் ஆட்டம்தான் ஆடுவாராம் ஹைதர். பாகிஸ்தான் சூப்பர் லீகிலும் இப்படி ஆடித்தான் பல சிக்ஸர்களைப் பறக்கவிட்டிருக்கிறார். இது அப்படியே ஷேவாக்கின் அப்ரோச். தான் செட்டில் ஆகவும் நேரம் எடுத்துக்கொள்வதில்லை. பெளலர் செட்டிலாகவும் நேரம் கொடுப்பதில்லை.

Haider Ali
Haider Ali

அதேமாதிரி ரிஸ்ட் வொர்க்கிலும் கோலியை அப்படியே பிரதிபலிக்கிறார். பந்துகள் தன்னை நோக்கிவரும்வரை நின்று கவனித்து, க்ரீஸுக்குள் காலை ஊன்றி மிட்விக்கெட்டில் எப்படி கோலி பவுண்டரியாக்குவாரோ அதே போன்று ஹைதர் அலியும் ஒரு ஷாட் ஆடினார். டிரைவ், ஃப்ளிக் என டெக்னிக்கல் ஷாட் எல்லாம் கோலி ஸ்டைலில் அவ்வளவு பர்ஃபெக்ட்டாக ரிஸ்ட்டை சிறப்பாக பயன்படுத்தி ஆடுகிறார். டைமிங் + ஹார்ட் ஹிட்டிங் இரண்டிலும் அப்படியே தோனி மற்றும் ரோஹித்தின் அப்ரோச். ரோஹித்தான் ஹைதர் அலியின் இன்ஸ்பிரேஷனும் கூட. இங்கிலாந்துக்கு எதிராக 33 பந்துகளில் 54 ரன் அடித்தார் ஹைதர் அலி. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமான டி20 போட்டியிலேயே அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2016 காலக்கட்டத்தில்தான் கிரிக்கெட் விளையாடவே ஆரம்பித்தவர், அடுத்த நான்கே ஆண்டுகளில் பாகிஸ்தானின் மோஸ்ட் வாண்டட் பேட்ஸ்மேனாக மாறி இருப்பதெல்லாம் வேற லெவல். மேலே குறிப்பிட்ட அவரின் கேம் அப்ரோச்தான் அவரை மற்ற வீரர்களிடமிருந்து தனித்து காட்டுகிறது. அதேபோல் அட்டாக்கிங் கிரிக்கெட் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளுக்கும் தன்னை தகவமைத்துக்கொள்ள முடியும் என்பதை ஒரு பெரிய சதம் அடித்து முதல்தர சீசனில் நிரூபித்தும் விட்டார். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பே பாகிஸ்தான் போய் இறங்கிய ஹைதர் அலிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இரண்டு மாத காத்திருப்புக்குப் பின் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே தான் யார் என்பதை உலக கிரிக்கெட்டுக்கு நிரூபித்துவிட்டார் ஹைதர். லெஜண்டுகளின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.

Haider Ali
Haider Ali
மைக்கெல் வாஹன், வாசிம் அக்ரம்,ஷோயிப் அக்தர் என முன்னாள் வீரர்கள் அனைவரும் 'ஹைதர் அலி தான் கிரிக்கெட்டின் வருங்கால சூப்பர் ஸ்டார்' எனச் சொல்கிறார்கள்.

2017 சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில் இந்தியா, பாகிஸ்தானிடம் தோற்றிருக்கும். அதேமாதிரியான ஒரு பெரிய தருணத்தில் பாகிஸ்தான் அணியில் தானும் இருக்க வேண்டும் என்பதே ஹைதர் அலியின் கனவு. கனவுப்பயணத்திற்கான முதல் அடியை கவனம் ஈர்க்கும் வகையில் வெற்றிகரமாக எடுத்து வைத்துவிட்டார். இனிமேல் அந்த இலக்கை நோக்கி ஓட வேண்டியதுதான். பாகிஸ்தான் ஐசிசி கோப்பையை வெல்வது உறுதியோ இல்லையோ... கிரிக்கெட் உலகம் தவிர்க்கமுடியாத ஒரு வீரராக ஹைதர் அலி வருவார் என்பது மட்டும் உறுதி.

வாழ்த்துகள் ஹைதர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism