Published:Updated:

`பணம்பெற மறுத்தார்; விருந்து வைத்தனர்!'- இந்திய டாக்ஸி டிரைவரை நெகிழவைத்த பாகிஸ்தான் வீரர்கள்

டாக்ஸி டிரைவர் வந்ததும் தங்களை ஓர் இந்திய உணவகத்துக்கு அழைத்துச் செல்ல முடியுமா என அவர்கள் கேட்டுள்ளனர்.

இந்திய டாக்ஸி டிரைவருடன் பாகிஸ்தான் வீரர்கள்
இந்திய டாக்ஸி டிரைவருடன் பாகிஸ்தான் வீரர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் தொடங்கிய போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தாலும் அந்த அணி வீரர்கள் செய்த காரியம் மற்றவர்களின் மனங்களை வென்றுள்ளது. போட்டியின் நடுவே ஆங்கில வர்ணனையாளர் அலிசன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சனிடம் தெரிவிக்கும்போது இந்தச் சம்பவம் வெளியில் தெரியவந்தது.

பாகிஸ்தான் வீரர்கள்
பாகிஸ்தான் வீரர்கள்

சில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தான் அணி வீரர்கள் யாசிர் ஷா, ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா உள்ளிட்ட ஐந்து வீரர்கள் பிரிஸ்பேனில் உள்ள இந்திய கால் டாக்ஸி டிரைவர் ஒருவரை தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்துள்ளனர். டாக்ஸி டிரைவர் வந்ததும் தங்களை ஓர் இந்திய உணவகத்துக்கு அழைத்துச் செல்ல முடியுமா என அவர்கள் கேட்டுள்ளனர்.

`தங்கத்திற்குப் பதில் தக்காளி’- பாகிஸ்தான் மணப்பெண்ணின் இந்த முடிவு அர்த்தம் நிறைந்தது!

வீரர்களின் விருப்பப்படி அவர்களை இந்திய உணவகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். உணவகத்தில் வீரர்களை இறக்கிவிட்ட டாக்ஸி டிரைவர் அவர்களிடம் கட்டணம் பெற மறுத்துள்ளார். பாகிஸ்தான் வீரர்கள் எவ்வளவு போராடியும், அவர் பணம் பெற மறுத்துள்ளார். அவரின் அன்பைப் பார்த்த பாகிஸ்தான் வீரர்கள் டாக்ஸி டிரைவரையும் தங்களுடன் விருந்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்திய டாக்ஸி டிரைவருடன் பாகிஸ்தான் வீரர்கள்
இந்திய டாக்ஸி டிரைவருடன் பாகிஸ்தான் வீரர்கள்

அவருடன் உணவருந்திய வீரர்கள் பின்னர் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளனர். அந்த டாக்ஸி டிரைவர் குறித்த விவரங்கள் தெரியாத நிலையில் வர்ணனையாளர் அலிசன் இந்தச் சம்பவத்தை சொல்லவும் வீடியோ காட்சிகளும், வீரர்கள் டிரைவருடன் ரெஸ்ட்டாரன்டில் எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் பாகிஸ்தான் வீரர்களின் செயல்களைப் பாராட்டி வருகின்றனர்.