Published:Updated:

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஹஸ்னைனுக்குத் தடை... என்ன காரணம்?

முஹம்மது ஹஸ்னைன்

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான முஹம்மது ஹஸ்னைன் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கக் கூடாது என்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஹஸ்னைனுக்குத் தடை... என்ன காரணம்?

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான முஹம்மது ஹஸ்னைன் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கக் கூடாது என்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
முஹம்மது ஹஸ்னைன்

21 வயதான பாகிஸ்தான் வேகப் பந்து வீச்சாளர் ஹஸ்னைன், கடந்த மாதம் ஜனவரி 2-ம் தேதி சிட்னி ஷோகிரவுண்ட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் இடையிலான 'கேஎஃப்சி பிக் பாஷ் லீக்' போட்டியில் பந்து வீசியிருந்தார். அப்போது அவரது பந்துவீச்சில் சந்தேகம் உள்ளதாக நடுவர் ஜெரார்ட் அபூத் அறிவித்திருந்தார்.

அதன் பின் சந்தேகத்திற்குரிய பந்துவீச்சு நடவடிக்கை நடைமுறைகளின்படி, ஹஸ்னைன் பிரிஸ்பேனில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஐசிசி-யால் சோதிக்கப்பட இருந்தார். இருப்பினும், அவரும் மற்ற வீரர்களும் ஐசிசி சோதிக்கும் முன்னதாகவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் (PCB ) திரும்ப அழைக்கப்பட்டு பாகிஸ்தான் வந்தடைந்தனர்.

முஹம்மது ஹஸ்னைன்
முஹம்மது ஹஸ்னைன்

பின்னர், லாகூரில் உள்ள PCB-யினால் அங்கீகரிக்கப்பட்ட வசதியின் கீழ் ஹஸ்னைன் சோதனை செய்யப்பட்டார். சுயாதீன மறுஆய்வு மற்றும் சரிபார்ப்புக்காக சோதனையின் முடிவுகள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டன.

சோதனையின் முடிவுகளை சரிபார்த்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா குழு (CA), "இந்தச் சோதனைச் செயல்முறை முடிந்துவிட்டது. PCBயின் சோதனை ஆய்வகத்தால் செய்யப்பட்ட ஆய்வின் படி, ஹஸ்னைனின் பந்துவீச்சு விதிகளுக்குப் புறம்பானது என்று எந்த அமைப்பையும் சாரா நிபுணரால் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

இதன்படி, அவரது குட் லென்த் பந்து வீச்சு, ஃபுல் லென்த் பந்து வீச்சு, ஸ்லோ பவுன்சர் மற்றும் பவுன்சர் ஆகியவற்றிற்கான அவரது முழங்கை ஆக்ஷன் 15 டிகிரி வரம்புகளை விஞ்சிவிட்டது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளின் கீழ், ஒரு இல்லீகலான பந்துவீச்சு என்பதால் வேகப்பந்து வீச்சாளர் ஹஸ்னைன் சூப்பர் லீக் (PSL) மற்றும் சர்வதேச கிரிக்கெட்டின் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கக் கூடாது என்று இடைநீக்கம் செய்யப்பட்டார்.

CAவின் தலைவரான பீட்டர் ரோச்
CAவின் தலைவரான பீட்டர் ரோச்

இதைத்தொடர்ந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (CA ) தலைவரான பீட்டர் ரோச் கூறுகையில், "முஹம்மது ஹஸ்னைனின் இந்த பௌலிங் ஆக்ஷனை சரிசெய்ய PCB ஆதரவளிக்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) முழு நம்பிக்கைக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் அவரை ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வரவேற்கும் நாளை எதிர்நோக்குகிறோம்" என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (CA) தலைவரான பீட்டர் ரோச் கூறியிருக்கிறார்.