Published:Updated:

1992 - 2019 தேஜா-வுவை விரட்டும் பாகிஸ்தான்... அரை இறுதியை நெருங்குமா?!#AFGvPAK

#AFGvPAK

பாகிஸ்தானுக்கு இந்தப் போட்டி 'வாழ்வா, சாவா' என்பதால், கட்டாயம் பலமான பர்ஃபாமன்ஸை கொடுக்க காத்திருக்கும். பாகிஸ்தானை சமாளிப்பது ஆப்கானிஸ்தானுக்கு பெரும் சவாலாகவே இருக்கும். #AFGvPAK

Published:Updated:

1992 - 2019 தேஜா-வுவை விரட்டும் பாகிஸ்தான்... அரை இறுதியை நெருங்குமா?!#AFGvPAK

பாகிஸ்தானுக்கு இந்தப் போட்டி 'வாழ்வா, சாவா' என்பதால், கட்டாயம் பலமான பர்ஃபாமன்ஸை கொடுக்க காத்திருக்கும். பாகிஸ்தானை சமாளிப்பது ஆப்கானிஸ்தானுக்கு பெரும் சவாலாகவே இருக்கும். #AFGvPAK

#AFGvPAK

1992 உலகக்கோப்பையில் நடந்ததை ரிப்பீட் செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்ய இன்னும் இரண்டு வெற்றிகள் தேவைப்படுவதால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியை கட்டாயம் வென்றுவிட பாகிஸ்தான் மெனக்கிடும். மறுபுறம், தொடர்ந்து 7 போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்திருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இன்னும் அந்த இரண்டு புள்ளிகள் மட்டும் கைகூடவில்லை. #AFGvPAK

#AFGvPAK
#AFGvPAK

சரியாக ஒரு மாதத்திற்கு முன்..

2019 உலகக்கோப்பையின் முதல் பயிற்சி ஆட்டத்தில் 'கத்துக்குட்டி' ஆப்கானிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது பாகிஸ்தான். முதலில் பேட்டிங் செய்து 262 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ஓரளவு கடினமான இலக்கை சேஸ் செய்த ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்த தவறியது பாகிஸ்தான். ஆப்கான் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் களத்தில் நின்று ஸ்கோர் செய்ய, 3 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த பயிற்சி ஆட்டத்துக்கும் இரு அணிகளின் தற்போதைய ஃபார்முக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 2019 உலகக்கோப்பை போட்டிகளில் முதலில் பேட்டிங்கோ, சேஸிங்கோ ஆப்கானிஸ்தான் கடைசியாக 250+ ஸ்கோர் செய்தது இந்த பயிற்சி ஆட்டத்தில்தான். முழுமையாக 50 ஓவர்களை எதிர்கொள்ளவே ஆப்கானிஸ்தானுக்கு நான்கு போட்டிகள் தேவைப்பட்டது. ஒரு வழியாக இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு எதிரான போட்டியில் முழுமையாக 50 ஓவர்களை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான், வெற்றி இலக்கை எட்டத் தவறியது. ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங் ஆர்டர் மாற்றம், சுமாரான ஃபீல்டிங், சுழற்பந்துவீச்சை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் பெளலிங் யூனிட் என இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் சொதப்பியது அதிகம்.

Team Afghanistan
Team Afghanistan

உலகக்கோப்பை பயணத்தை மாற்றி எழுதிவரும் பாகிஸ்தானுக்கு, இந்த போட்டி மிகவும் முக்கியமானது. தட்டுத்தடுமாறி அரை இறுதி வாய்ப்பை தக்கவைத்திருக்கும் பாகிஸ்தான், கடைசி இரண்டு போட்டிகளிலும் அசத்தலான பர்ஃபாமன்ஸை கொடுத்தது. ஹரிஸ் செஹைலின் கம் பேக், பாபர் ஆசம் சதம், அமீரின் மிரட்டல் வேகம், ஃபீல்டிங்கிலும் முன்னேற்றம் என சரியான நேரத்தில் எழுச்சி கண்டுள்ளது.

அரை இறுதிக்கு முன்னேற வேண்டுமானால், பாகிஸ்தான் இந்தப் போட்டியில் வென்றாக வேண்டும். அவர்களுக்கு இது வாழ்வா, சாவா போட்டி. அதேநேரத்தில் `அன்பிரிடிக்டபிள்’ பாகிஸ்தானை சமாளிப்பது ஆப்கானிஸ்தானுக்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

Team Pakistan
Team Pakistan

போட்டி நடைபெறும் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், ஆப்கானின் ஸ்பின் படையை சமாளிக்க பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தயாராக வேண்டும். இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக களமிறங்கிய அதே வெற்றி படையுடன் பாகிஸ்தான் களமிறங்கலாம். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பாபர் ஆசம், ஹரிஸ் ஹொஹைலின் பேட்டிங் அதிரடி கைகொடுத்தாலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் இமாம், ஃபகர் ஜமானின் ரன் குவிப்பு தேவைப்படுகிறது. வஹப் ரியாஸ், அமீர், ஷகின் அப்ரிதியின் பெளலிங் அட்டாக் இதே ஃபார்மில் தொடர்ந்தால் நல்லது.

பேட்டிங் ஆர்டரை மாற்றி விளையாடிக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் என்ன திட்டமிட்டிருப்பார் என்பது அவருக்கே வெளிச்சம். எந்த பேட்ஸ்மேனுக்கு என்ன பொறுப்பு என்பதை தெளிவுப்படுத்தாத பேட்டிங் யூனிட்டுடன் களமிறங்குவது ஆப்கானிஸ்தானின் தோல்விகளுக்கு முக்கியக் காரணமாகிறது. முஜீப், நபி, ரஷிதின் சுழற்பந்துவீச்சால் மட்டுமே பாகிஸ்தானை அட்டாக் செய்ய ஆப்கான் திட்டமிட்டிருக்கும்.

ஆப்கானிஸ்தான் வெற்றிப்பெற்றால் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய இரு அணிகளின் அரை இறுதி கனவு கலைய வாய்ப்புள்ளது.

நேருக்கு நேர்:

#AFGvPAK
#AFGvPAK

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய மூன்று போட்டிகளிலும் பாகிஸ்தானே வென்றுள்ளது.

உலகக்கோப்பையை பொறுத்தவரை, இதுதான் இரு அணிகளும் மோதும் முதல் போட்டி. லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் மழை வருவதற்கான வாய்ப்பு இல்லை.

ப்ளேயிங் லெவன்

ஆப்கானிஸ்தான் (உத்தேசம்)

குல்பதின் (கேப்டன்), ரஹமத் ஷா, ஹஷ்மத்துல்லா, அஸ்கர் ஆஃப்கான், முகமது நபி, நஜிபுல்லா, ஷமியுல்லா ஷின்வாரி, ரஷித் கான், இக்ராம் அலிம், முஜீப் உர் ரகுமான், தவ்லத் / சையது ஷின்வார்

பாகிஸ்தான் (உத்தேசம்)

சர்ஃபராஸ் அகமது (கேப்டன்), இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் ஆசம், ஹரிஸ் சோஹைல், முகமது ஹஃபீஸ், இமாம் வாசிம், ஷதாப் கான், வஹப் ரியாஸ், முகமது ஆமீர், ஷகின் ஷா அப்ரிடி.

இதுவரை

ஆப்கானிஸ்தான்

vs ஆஸ்திரேலியா - 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

vs இலங்கை - 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs நியூசிலாந்து - 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

vs தென்னாப்ரிக்கா - 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

vs இங்கிலாந்து - 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs இந்தியா - 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs வங்கதேசம் - 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

பாகிஸ்தான்

vs வெஸ்ட் இண்டீஸ் - 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி

vs இங்கிலாந்து - 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இலங்கை - மழையால் போட்டி ரத்து

vs ஆஸ்திரேலியா - 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs இந்தியா - 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs தென்னாப்ரிக்கா - 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs நியூசிலாந்து - 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி