Published:Updated:

`டெக்னிக், ஸ்டைல் இல்லை; ஆனாலும் மிரட்டுகிறார்! - ஸ்மித்தைப் புகழும் அக்தர்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டத்தை அக்தர் புகழ்ந்து பேசியுள்ளார்.

ஸ்மித்
ஸ்மித்

பால் டெம்பரிங் சர்ச்சையில் சிக்கிய ஸ்டீவ் ஸ்மித் ஒரு வருடத்துக்குப் பின் சர்வதேச அரங்குக்குத் திரும்பினார். இந்தியாவில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் பால் டெம்பரிங் சர்ச்சையில் சிக்கிய மற்றொரு வீரரான வார்னர் மிரட்டினாலும் ஸ்மித் அடக்கியே வாசித்தார். பெரிய ஸ்கோர் எதுவும் எடுக்க வில்லை. ஆனால், அதன்பின் நடந்த உலகக்கோப்பை தொடரில் மிரட்டினார். இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில் பிரமிக்க வைத்தார். பழைய ஸ்மித்தாக இன்னும் கூடுதல் வெறியுடன் களத்துக்குத் திரும்பியுள்ளார்.

அக்தர்
அக்தர்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் 80 ரன்கள் விளாசி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு உதவினார். ஸ்மித் குறித்துப் பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்தர், ``ஸ்மித் விளையாடுவதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவரிடம் டெக்னிக் இல்லை, ஸ்டைல் இல்லை. ஆனால், சிறப்பாக திகழ்கிறார். நான் கிரிக்கெட் விளையாடும்போது அவர் இருந்திருந்தால் கண்டிப்பாக காயப்படுத்த முயற்சி செய்திருப்பேன். ஆனால், அவர் ஆடும் விதத்தைப் பார்த்தால் காயப்படுத்த முடியாது எனத் தெரிகிறது.

`டீ கொடுத்தனர்; அவர்களுக்கு எங்களை யாரென்றே தெரியவில்லை..!’ - கோலி பிறந்தநாளில் நெகிழ்ந்த அனுஷ்கா

அவர் சிறப்பாக விளையாடுகிறார். அவரது ஆட்டம் வேற ரகம். ஸ்மித் கம்பேக் கொடுத்த பிறகு நிறைய ரன்களைக் குவித்துள்ளார். சிலர், அவர் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கு செட் ஆக மாட்டார் என்றார்கள். அவரது கணிப்பு பொய் என நிரூபித்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.