Published:Updated:

இந்தியாவுக்கு காட்டிய அதே மரண பயம்... குல்பதின் தவறால் தப்பிப்பிழைத்த பாகிஸ்தான்! #PAKvAFG

#PAKvAFG

ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சுக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறுவது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், ரன்களை வழங்க களமிறங்கினார் குல்பதின் நைப்.

Published:Updated:

இந்தியாவுக்கு காட்டிய அதே மரண பயம்... குல்பதின் தவறால் தப்பிப்பிழைத்த பாகிஸ்தான்! #PAKvAFG

ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சுக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறுவது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், ரன்களை வழங்க களமிறங்கினார் குல்பதின் நைப்.

#PAKvAFG

இந்தியா - பாகிஸ்தான், இங்கிலாந்து - ஆஸ்திரேலியா வரிசையில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ரைவல்ரி புதிதாக முளைத்துள்ளது. 2019 உலகக்கோப்பை தொடரின் முக்கியமான கட்டத்தில் கட்டாய வெற்றிக்காக பாகிஸ்தானும், முதல் வெற்றிக்காக ஆப்கானிஸ்தானும் மோதிய ஹெடிங்லி மைதானத்தில் இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையேயான மோதல் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. #PAKvAFG

லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் அதிசயமாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா, வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் 200+ ஸ்கோரை சேஸ் செய்யவே திணறினர் ஆப்கான் பேட்ஸ்மேன்கள்.

#PAKvAFG
#PAKvAFG

ஆப்கானின் பலம் சுழற்பந்துவீச்சுதான் என்பது ஊரறிந்ததே. முதலில் பேட் செய்து 200+, 250+ இலக்கை நிர்ணயித்து இரண்டாவது இன்னிங்ஸில் அதை கட்டுப்படுத்துவதே ஆப்கானுக்கு சிறந்தது என்பதை உணர்ந்து, இம்முறை சரியான முடிவை எடுத்தார் கேப்டன் குல்பதின்

ஷகின் அப்ரிடி அட்டாக்!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் களமிறங்கியதை தொடர்ந்து இந்த போட்டியிலும் ரஹமத் ஷா, குல்பதின் இணை ஆட்டத்தை தொடங்கினர். நிதானமாக ரன் சேர்க்கத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஷகின் அப்ரிடியின் முதல் ஸ்பெல்லிலேயே இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஷகின் அப்ரிடி
ஷகின் அப்ரிடி

குல்பதின் எதிர்கொண்ட பந்து பேட்டைத் தொட்டு சர்பராஸ் அகமது கைகளை எட்ட, அடுத்து வந்த ஹஷ்மத்துல்லா முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். ஐந்தாவது ஓவர் முடிவிலேயே 31/2 என சொதப்பத் தொடங்கியது ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இக்ராம் பந்துகளை வீணடித்தார். அதனால், களத்தில் இருந்த மற்றொரு பேட்ஸ்மேன் ரஹமத் ஷாவுக்கு அழுத்தம் அதிகமானது. முடிந்த வரை டாட் பால்களைத் தவிர்த்து ரன் சேர்த்த ரஹமத் ஷா, இமாத் வாசிம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இக்கட்டான நிலையில் களமிறங்கிய முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான் நிதானமாக ஆடினார். 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என அணியின் ஸ்கோரை உயர்த்திய ஆப்கான், 42 ரன்கள் எடுத்திருந்தபோது ஷதாப் கான் பந்தில் போல்டானார். அஸ்கர் ஆப்கானைத் தொடர்ந்து இக்ராம், முகமது நபியும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 36 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது ஆப்கானிஸ்தான்.

அஸ்கர் ஆப்கான்
அஸ்கர் ஆப்கான்

200 ரன்களுக்குள் ஆப்கானைக் கட்டுப்படுத்த முயன்ற பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்து ஆடினார் நஜிபுல்லா. ஏழாவதாக களமிறங்கிய நஜிபுல்லா 42 ரன்கள் சேர்க்க, ஆப்கானிஸ்தான் ஸ்கோர் 200+ தாண்டியது. மீண்டும் களத்துக்கு வந்தார் ஷகின் அப்ரிடி. அதிரடியாக அடித்துக் கொண்டிருந்த நஜிபுல்லா, ரஷித் கானின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஷகின் ஷா, மீண்டும் ஆப்கானிஸ்தானின் ரன் குவிப்புக்கு முட்டுக்கட்டை போட்டார். 50 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான்

ஷகின் அப்ரிடி
ஷகின் அப்ரிடி
(10-47-4) உலகக்கோப்பை போட்டியில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் டீனேஜரானார் ஷகின் ஷா அப்ரிடி

சுழலை சமாளித்த பாபர் ஆசம், இமாத் வாசிம்

கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முதல் ஓவரிலேயே செக் வைத்தார் சுழற்பந்துவீச்சாளார் முஜிப் உர் ரகுமான். பாகிஸ்தான் ஓப்பனர் ஃபகர் ஜமான் டக்-அவுட்டாக 0/1 என சேஸிங்கைத் தொடங்கியது பாகிஸ்தான்

முஜீப் உர் ரகுமான்
முஜீப் உர் ரகுமான்

பந்துகள் குறைந்து கொண்டே வந்தாலும், இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது இமாம் உல் ஹக் - பாபர் ஆசம் இணை. 15 ஓவர் வரை தாக்குப்பிடித்த இந்த ஜோடி, முகமது நபியின் சுழலுக்கு சரிந்தது. 36 ரன்களுக்கு இமாமும், 45 ரன்களுக்கு பாபர் ஆசமும் அவுட்டாகினர்.

கடைசி இரண்டு போட்டிகளிலும் அதிரடி காட்டிய ஹாரிஸ் சொஹைலால், நேற்றைய போட்டியில் மொத்தம் இரண்டே பவுண்டரிகளைத்தான் அடிக்க முடிந்தது. 40-வது ஓவர் வரை போட்டியை வெல்வதற்கான வாய்ப்புகள் இரு அணிகளுக்கும் சமமாக இருந்த நிலையில், குல்பதின் செய்த தவறால் தப்பிப் பிழைத்தது பாகிஸ்தான்.

குல்பதின்
குல்பதின்

ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சுக்கு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் திணறுவது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், ‘இதுவே என் கட்டளை. என் கட்டளையே என் சாசனம்’ என பாகுபலி ராஜமாதாவைப் போல 10 ஓவர்களையும் நான் வீசுவேன், ரன் அடித்து கொள்ளுங்கள் என சரண்டரானார் குல்பதின். விளைவு, 30 பந்துகளில் 46 ரன்கள் தேவை என்றபோது ஒரே ஓவரில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்தார் இந்த ஆப்கான் கேப்டன்!

46-வது ஓவரை வீசிய குல்பதினின் பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டிய இமாத் வாசிம், அவரே இப்படி ஒரு ஓவரை எதிர்பார்த்திருக்க மாட்டார். இக்கட்டான நிலையில் வலிய வந்து ரன்களை வாரிவழங்கிவிட்டு தலையில் கை வைத்து உட்காருவதில் என்ன நியாயம் என்பது குல்பதினுக்கே வெளிச்சம்

இமாத் வாசிம்
இமாத் வாசிம்

ரஷித் கான் வீசிய 47-வது ஓவரில் ஷதாப் கான் அவுட்டானபோது எந்த பயனும் இல்லை. ஏற்கனவே, பாகிஸ்தான் ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். ஆப்கான் ரசிகர்கள் மட்டுமல்லாது இங்கிலாந்து ரசிகர்களும் குல்பதினை கடுக்கடுக்கத் தொடங்கிவிட்டனர். 49* ரன்கள் அடித்த இமாத் வாசிம் வின்னிங் பவுண்டரியுடன் பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்தார். அரை இறுதி வாய்ப்பை பாகிஸ்தான் நீட்டித்துக் கொண்டது.

1992 – 2019 தேஜா-வுவை விரட்டும் பாகிஸ்தான் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்ய, வங்கதேசத்துக்கு எதிரான கடைசி போட்டியையும் வெல்ல வேண்டும். ஆனால், ‘டாப் நான்கில்’ நுழைய அதுமட்டும் போதுமானதாக இருக்காது. பர்மிங்ஹாமில் நடக்கும் இந்தியா - இங்கிலாந்து மோதும் போட்டியில் ‘மென் இன் ஆரஞ்சு’ (புது ஜெர்ஸியில் களமிறங்கும் இந்திய அணி!) வெற்றி பெற வேண்டும், இங்கிலாந்து வெளியேற வேண்டும்

#PAKvAFG
#PAKvAFG

இந்தியா ஜெயிக்க வேண்டுமென பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய, முதலில் இங்கிலாந்த்தை அனுப்பிவிட்டு கடைசி போட்டியில் சண்டையிட காத்திருக்கின்றன இந்த இரு அணிகளும்! மொத்தத்தில் இன்றைய போட்டியைக் காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் வெயிட்டிங்!