Published:Updated:

`புலி இருப்பதை மறந்துவிட்டு, டிராவிட்டையே பார்த்துக் கொண்டிருந்தனர்'- நினைவுகள் பகிரும் ராஸ் டெய்லர்

ராஸ் டெய்லர் - Ross Taylor

‘ப்ளாக் அண்ட் வைட்’ எனும் தலைப்பிலான தன் சுயசரிதை நூலில் நிறப்பாகுபாட்டால் தான் பாதிக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.

`புலி இருப்பதை மறந்துவிட்டு, டிராவிட்டையே பார்த்துக் கொண்டிருந்தனர்'- நினைவுகள் பகிரும் ராஸ் டெய்லர்

‘ப்ளாக் அண்ட் வைட்’ எனும் தலைப்பிலான தன் சுயசரிதை நூலில் நிறப்பாகுபாட்டால் தான் பாதிக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துள்ளார்.

Published:Updated:
ராஸ் டெய்லர் - Ross Taylor

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராஸ் டெய்லர் இந்த வருட தொடக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து கடந்த வாரம் தன் சுயசரிதை நூலை வெளியிட்டார் அவர். அதில் தன் கிரிக்கெட் வாழ்வு தொடங்கி சக அணி வீரர்கள் மற்றும் எதிரணி குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ‘ப்ளாக் அண்ட் வைட்’ எனும் தலைப்பிலான தன் சுயசரிதை நூலில் நிறப்பாகுபாட்டால் தான் பாதிக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும் நியூஸிலாந்தில் கிரிக்கெட் போட்டி என்பது வெள்ளை நிறத்திலிருப்பர்களுக்கென்றும், நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் கருப்பு நிறத்தவர்கள் மீது தீண்டாமையை கடைபிடிக்கும் என்றும் தமக்கு நடந்த சம்பவங்களையும் நினைவுகூர்ந்துள்ளார் டெய்லர்.

Ross Taylor
Ross Taylor
MICHAEL BRADLEY

இது தவிர ஐ.பி.எல் தொடரில் தான் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களைப் பற்றியும், ராகுல் டிராவிட் குறித்தும் பகிர்ந்துள்ளார் அவர். "ஒருமுறை நானும் டிராவிடும் ரந்தம்பூர் தேசிய பூங்காவிற்கு புலிகளைப் பார்க்க சென்றிருந்தோம். அப்போது நான் அவரிடம், 'இதற்கு முன்பு புலியை நேரில் பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'இதற்கு முன்பு 21 முறை புலியை பார்க்க சென்றிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட பார்த்ததே இல்லை' என்றார். இதை கேட்டவுடன் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 21 முறை புலியை பார்க்க முடியாமல், 22 வது தடவையாக யாராவது என்னை அழைத்திருந்தால், நான் வேண்டாம் டிஸ்கவரி சேனலிலேயே பார்த்து விடுகிறேன் என்று மறுத்திருப்பேன். அன்று மதியம் புலியை பார்க்க சென்றபோது ஏகப்பட்ட கூட்டம். எல்லாரும் புலி இருப்பதை மறந்துவிட்டு, டிராவிடையே பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் புலியையே பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு தெரிந்து உலகில் மொத்தம் ஏறத்தாழ 4000 புலிகள் இருக்கலாம். ஆனால் ஒரேயொரு ராகுல் டிராவிட் தான் இருக்கிறார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் பற்றி கூறிய அவர் "ஒருமுறை பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ட்க அவுட் ஆகிவிட்டேன். அப்போது அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்னைப் பார்த்து ' டக் அவுட் ஆவதற்காக உனக்கு பத்து லட்சம் சம்பளம் தரவில்லை' என்று குறிப்பிட்டு மூன்று நான்கு முறை கன்னத்தில் அறைந்தார். ஆனால் அவர் அதை விளையாட்டிற்காக செய்தது போல எனக்குத் தெரியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். ஐ.பி.எல் தொடரின் தொடக்கத்தில் பெங்களுர் அணிக்காக விளையாடிய டெய்லர், பின் 2011-ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.