Published:Updated:

`இது சரிப்பட்டு வராது பாஸ்...!'- ரிஷப்பை எச்சரிக்கும் சுரேஷ் ரெய்னா

``தோனியைப் பொறுத்தவரை இன்னமும் நல்ல ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். சிறப்பாக கீப்பிங் செய்கிறார்.''

suresh raina
suresh raina

உலகக்கோப்பை போட்டிகள் முடிந்துவிட்டன. இந்தியா கோப்பையை நழுவவிட்டுவிட்டது. அடுத்த எதிர்பார்ப்பாக இருப்பது டி20 உலகக்கோப்பைதான். இருந்தும் அணியில் நான்காம் இடத்துக்கான வீரர் யார் என்ற தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ரிஷப் முதல் ஸ்ரேயாஸ் வரை அனைவரையும் பரீட்சார்த்த முயற்சியில் களமிறக்கப்பட்டுவிட்டனர். ஆனால் நம்பர் 4-க்கான விடியல் கிடைக்கவில்லை. இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னா இந்த விஷயம் தொடர்பாகப் பேசியுள்ளார்.

suresh raina
suresh raina

தி இந்து நாளிதழுக்கு இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ``நம்பர் 4 இடத்துக்கு நான் சரியானவன் என நினைக்கிறேன். ஏற்கெனவே அந்த வரிசையில் விளையாடி இருக்கிறேன். அதனால் தொடர்ந்து அந்த இடத்தில் என்னால் விளையாட முடியும். விரைவில் டி20 உலகக்கோப்பை வருவதால் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை நோக்கிக் காத்திருக்கிறேன்'' என்றவர் தோனி குறித்தும் பேசினார்.

Vikatan

அதில், `` உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் தோனி நான்காவது இடத்தில் இறங்கியிருந்தால் இந்தியா உலகக்கோப்பை வென்றிருக்கும். அதேபோல் ரிஷப் பன்டை சிறப்பாக வழிநடத்தவும் செய்திருப்பார். மேலும் பாண்ட்யா மற்றும் ஜடேஜாவும் பின்வரிசையில் இருப்பதால் வெற்றி உறுதியாகியிருக்கும். அப்போதும் கூட தோனி இந்தியாவை கடைசி வரை போராட்டத்தில் வைத்திருந்தார். ஆனால் குப்திலின் அந்த ட்ரைக்ட் ஹிட் ரன் அவுட் வெற்றியைப் பறித்துவிட்டது. எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதையே தோனியே முடிவு செய்வார். தோனியைப் பொறுத்தவரை இன்னமும் நல்ல ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். சிறப்பாக கீப்பிங் செய்கிறார்.

dhoni and pant
dhoni and pant

கிரேட்டஸ்ட் ஃபினிஷரும்கூட. எனவே, வரவுள்ள டி20 உலகக்கோப்பையில் தோனி இந்திய அணியின் சொத்தாக இருப்பார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை" என்றார். மேலும், ``ரிஷப் பன்ட் இப்போது குழப்பத்தில் இருக்கிறார். அவர் தனது இயல்பான விளையாட்டை விளையாடவில்லை. தடுப்பாட்டம், சிங்கிள் என ஃபார்ம் இல்லாதவர்போல் விளையாடுகிறார். தோனி இப்படியான மனநிலையில் இருந்தால் அவர் வீரர்களிடம் பேசுவார். அதுபோல் பன்ட்டும் செய்ய வேண்டும். கிரிக்கெட் என்பது மனநிலை சார்ந்த விளையாட்டு என்பதால் பன்ட்டை அவரது இயல்பான விளையாட்டான ஆக்ரோஷ ஆட்டத்தை விளையாட ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் தற்போது இதற்கு நேர்மாறாக தனக்கு அறிவுறுத்தப்படும் விதத்தில் ஆடி வருகிறார். இது நீண்ட நாள்களுக்கு சரிப்பட்டு வராது" எனப் பேசியுள்ளார் ரெய்னா.

news credit - the hindu

Vikatan