Published:Updated:

NZVIND: ஆபரேஷன் 2024; நியூசிலாந்துக்கு எதிராக புதிய பயணத்தைத் தொடங்கும் இந்தியா!

Williamson - Hardik Pandya ( BCCI )

நியூசிலாந்து அணியைவிட இந்திய அணிக்கு இந்த தொடர் மிக முக்கியம், ஏனெனில் அது தன்னுள் பல மாற்றங்களை அடைய தொடக்கமாக இருக்கப்போவது இந்த டி20ஐ தொடர்.

NZVIND: ஆபரேஷன் 2024; நியூசிலாந்துக்கு எதிராக புதிய பயணத்தைத் தொடங்கும் இந்தியா!

நியூசிலாந்து அணியைவிட இந்திய அணிக்கு இந்த தொடர் மிக முக்கியம், ஏனெனில் அது தன்னுள் பல மாற்றங்களை அடைய தொடக்கமாக இருக்கப்போவது இந்த டி20ஐ தொடர்.

Published:Updated:
Williamson - Hardik Pandya ( BCCI )
உலகக்கோப்பை முடிந்து கண் மூடி முழிப்பதற்குள் இந்தியாவும் நியூசிலாந்தும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடவிருக்கிறது. ``திரும்பவும் முதல்ல இருந்து ஆரம்பிக்குறேன்! நாளைக்கு டே 1!" என்பது போல இரு அணிகளும் இந்த தொடரை அணுகப்போகின்றன.
Pandya - Williamson
Pandya - Williamson
BCCI

ஐசிசி நடத்தும் தொடர்களில் சிறப்பாக செயல்பட அதற்கு முன்னர் நடக்கும் இருநாட்டு தொடர்கள் மிக முக்கியமானவை. சமீபத்தில் நடந்த ஐசிசி தொடர்களில் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டி வரை கட்டாயம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சென்று விடுகிறது. ஆனால், கோப்பையை மட்டும் அவர்களால் வெல்ல முடியவில்லை. ஆஸ்திரேலிய கடற்கரைகளின் ஈரக்காற்றோடு தன் சோகத்தை மறந்து இரு அணிகளும் நாளை வெல்லிங்டனில் டி20ஐ தொடரை ஆரம்பிக்கின்றன.

நியூசிலாந்து:

இந்த முறை கட்டாயம் டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்று என ஆரூடம் சொல்லப்பட்ட அணியாக இருந்து அரையிறுதியில் பாகிஸ்தானிடம் தோற்று வெளியேறியது. மார்ட்டின் கப்தில் இந்த தொடரில் இடம்பெறவில்லை. உலகக்கோப்பையில் இடம்பெற்றிருந்தாலும் ஃபின் ஆலன் தான் ஓப்பனராக களமிறங்கினார். ஆனால், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஓப்பனிங் எவ்வளவு சோபிக்கத் தவறியதோ அதைவிட மோசமாக இருந்தது நியூசிலாந்து அணியின் ஓப்பனிங். ஓப்பனர்களான கான்வே - ஆலன் இருவரும் முறையே 145 மற்றும் 95 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஆஸ்திரேலியா உடனான போட்டியை தவிர வேறு எந்த போட்டியிலும் அவர்கள் சிறப்பாக ஆடவில்லை. இந்த தொடரில் அவர்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அடுத்து  கேப்டன் வில்லியம்சன் உலகக்கோப்பையின் போது அவரின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி நிறைய விவாதிக்கப்பட்டது.

அணியில் அவரின் ரோல் என்பது ஒரு முனையில் நிலைத்து நின்று ஆடுவது தான் என்றாலும், செட்டில் ஆன பிறகு வேகமாக ரன்கள் குவிப்பது என்ற விஷயத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும். 2020ம் ஆண்டு நடந்த தொடரில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 170+,  அதேபோல் இந்த தொடர் வில்லியம்சனின் ரிடம்ஷெனாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Kane Williamson
Kane Williamson
Cricket NZ

பிலிப்ஸ் தனது அதிரடியைத் தொடரும் பட்சத்தில் அது நியூசிலாந்து அணிக்கு பெரிய பலமாக இருக்கும். மிட்செல், சான்ட்னர், நீஷம் போன்றோர் மீண்டும் தங்கள் திறனை நிரூபிக்க காத்திருப்பர். பந்துவீச்சைப் பொறுத்த வரை நியூசிலாந்து அணியில் பவுல்ட் இடம்பெறாதது நிச்சயம் ஒரு பெரிய பின்னடைவு. சவுத்தி மற்றும் பெர்குசன் உடன் இணைய போவது மில்னேவா அல்லது டிக்னெரா என்பதும் சுவாரசியமானதாக அமையும். 

இந்தியா:
"2024  உலகக் கோப்பைக்கான பயிற்சி இப்போதிலிருந்தே தொடங்குகிறது!" என்னும் வார்த்தைகளை உதிர்த்திருக்கும் கேப்டன் பாண்டியாவின் மூலம் அரையிறுதி தோல்வியை அடுத்த உலகக்கோப்பையில் சரிசெய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.

இந்திய அணியில் ரோகித், விராட் கோலி மற்றும் ராகுல் ஆகியோருக்கு இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு கிஷன் - கில் இணை ஓப்பனிங்கில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   நம்பர் 1 டி20ஐ பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் தன் ஆதிக்கத்தை தொடர்வார் என நம்பலாம். குல்தீப் மீண்டும் டி20ஐ அணிக்கு திரும்பியுள்ளார். உலகக்கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடாத சஹல் நிச்சயம் பிளையிங் லெவனில் இடம் பிடிப்பார். சாம்சன் மற்றும் பண்ட் இருவரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். பிளேயிங் லெவனில் யார் இடம் பிடிப்பார் என்பதும் கணிக்க முடியாத ஒன்று. பவுலிங்கில்  உம்ரான் மாலிக்கின் 'வேகத்தை' பயன்படுத்திக் கொள்ள இந்திய அணி முயல்கிறது. டி20 அணியில் அவரின் எதிர்காலமும் இந்தத் தொடரிலிருந்தே தெரிய வரும் என்பதால் இது சிறப்பான தொடக்கமாக இருக்க வேண்டும். அக்ஷர் படேலின் ரோலை வாஷிங்டன் சுந்தர் செய்வார். தன்னிடம் உள்ள வீரர்களை எப்படி ஹர்திக் பாண்டியா பயன்படுத்தப் போகிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் ஆப்சனாக இருப்பதால் தன்னை நிரூபித்துக் காட்டும் சவாலும் அவருக்கு காத்திருக்கிறது.

Williamson - Pandya
Williamson - Pandya
BCCI


நியூசிலாந்து அணியைவிட இந்திய அணிக்கு இந்த தொடர் மிக முக்கியம், ஏனெனில் அது தன்னுள் பல மாற்றங்களை அடைய தொடக்கமாக இருக்கப்போவது இந்த டி20ஐ தொடர். ஹர்திக் பாண்டியா,"அடுத்த டி20ஐ உலகக்கோப்பைக்கு முன்னர் அணியில் உள்ள அனைவருக்கும் விளையாட வாய்ப்பளிக்கப்படும்!" எனக் கூறியிருப்பது அடுத்த டி20ஐ உலகக்கோப்பைக்கு புதிய காம்பினேஷன் உடன் இந்திய அணி களமிறங்க கூடும் என்பதை உணர்த்துகிறது. "மாற்றம் ஒன்றே மாறாதது" என்பது போல் இந்திய அணியும் வரும் ஒன்றரை வருடத்தில் கடினமாக இருந்தாலும் சில மாற்றங்களை செய்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளது.

அது நடக்கும் பட்சத்தில் இந்திய அணி ஐசிசி தொடர்களில் அரையிறுதியோடு நிற்காமல் பட்டங்களையும் கைப்பற்றலாம்!