Published:Updated:

கங்குலி, தோனி, கோலி... கேப்டன்களை உருவாக்கும் 183 மேஜிக்! #Nostalgia

தோனி - கோலி - கங்குலி

இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக வேண்டுமா... நீங்கள் செய்யவேண்டியது, இந்திய அணிக்காக 183 ரன்கள் அடிக்க வேண்டும்... ஆம். ஒரு இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுத்தால் போதும், நீங்கள் அடுத்த கேப்டன் ஆகிவிடலாம் என்பதுதான் இந்திய கிரிக்கெட்டின் வழக்கமாக இருக்கிறது.

கங்குலி, தோனி, கோலி... கேப்டன்களை உருவாக்கும் 183 மேஜிக்! #Nostalgia

இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக வேண்டுமா... நீங்கள் செய்யவேண்டியது, இந்திய அணிக்காக 183 ரன்கள் அடிக்க வேண்டும்... ஆம். ஒரு இன்னிங்ஸில் 183 ரன்கள் எடுத்தால் போதும், நீங்கள் அடுத்த கேப்டன் ஆகிவிடலாம் என்பதுதான் இந்திய கிரிக்கெட்டின் வழக்கமாக இருக்கிறது.

Published:Updated:
தோனி - கோலி - கங்குலி

நம்பமுடியவில்லையா... செளரவ் கங்குலி , தோனி, கோலி அனைவரும் 183 ரன்கள் அடித்த சில வருடங்களிலேயே இந்திய அணிக்கு கேப்டன் ஆனார்கள்.

இந்திய அணிக்கு மிகவும் வெற்றிகரமான கேப்டன்களான செளரவ் கங்குலியும் தோனியும் பல கோப்பைகளையும் தொடர்களையும் வென்றுகொடுத்துள்ளனர். அவர்கள் வரிசையில் கோலியும் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் 3 பேருக்கும் உள்ள ஒற்றுமை, ஒரு இன்னிங்ஸில் எடுத்த 183 ரன்கள்.

விளையாட்டில் "அன்றைய நாள் அவர்களுடைய நாளாக மாறிவிட்டால், அனைத்தும் அவர்களுக்கு சாதமாக நடக்கும்" என்று சொல்வார்கள். அப்படி அனைத்தும் சாதகமாக நடந்த இந்த 3 இன்னிங்ஸ்களைப் பற்றிதான் இப்போது பார்க்கப்போகிறோம்.
Ganguly
Ganguly
AP

செளரவ் கங்குலி:

இந்திய அணியில் அறிமுகம் ஆகி, நம்பகத்தன்மையான பேட்ஸ்மேன் என்று பெயர் எடுத்திருந்த சமயம் அது. 1999 உலகக் கோப்பையில் இந்திய அணி இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை, ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்து மாபெரும் பிழையைச் செய்தது. கங்குலியுடன் மற்றொரு தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்கிய சடகோபன் ரமேஷ் 5 ரன்னில் ஆட்டம் இழக்க, டிராவிட்டுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்தார் கங்குலி.

கங்குலியும் டிராவிட்டும் இணைந்து, இலங்கை அணியை துவம்சம் செய்துவிட்டனர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 318 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து உலக சாதனை படைத்தனர். கங்குலியை 'God of offside' என்று அழைப்பார்கள். அதை இந்தப் போட்டியில் கிரிக்கெட்டே தெரியாதவர்கள்கூடப் புரிந்துகொள்ளும் அளவுக்கு மிகச்சிறப்பாக ஆடினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொடர்ந்து, ஆஃப் சைடில் பவுண்டரிகளுக்குச் சென்றுகொண்டே இருந்தது பந்து. பல வீரர்களை நிறுத்தியும் தடுக்க முடியவில்லை. ஃபாஸ்ட் பெளலர்களைத்தான் அடிக்கிறார் என்று நினைத்தால் ஸ்பின்னர்களை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டார். குறிப்பாக, நம்பர் 1 ஸ்பின்னர் முரளிதரனை அவர் ஹேண்டில் செய்த விதம் பயங்கரம். அவருடைய பந்துகளை எல்லாம் பறக்கவிட்டார். அவரை மட்டுமல்ல ஜெயசூர்யா, அரவிந்த டி சில்வா என அனைத்து ஸ்பின்னர்களின் பந்துகளையும் பல மீட்டர் தூரங்களுக்கு சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். 158 பந்துகளை சந்தித்தவர் 17 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடித்து 183 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்திய அணி 373 ரன்கள் குவிக்க, பதிலுக்கு ஆடிய இலங்கை அணி 216 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த ரன்களை அடித்த அடுத்த வருடத்தில் இந்திய அணிக்கு கேப்டன் ஆனார் செளரவ் கங்குலி.

தோனி
தோனி

மகேந்திர சிங் தோனி:

கிரிக்கெட்டில் killer instinct என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படுவதுண்டு. ஆஸி வீரர்களைப் பெரும்பாலும் இந்த முறையில்தான் தயார்படுத்துவார்கள் . killer instinct அவ்வளவு சீக்கிரம் போட்டியில் விட்டுக்கொடுக்ககூடாது, தோல்விக்கு அருகில் சென்றாலும் அந்த நிலையைத் தலைகீழாக மாற்றி வெற்றிப் பாதைக்குத் திருப்ப வேண்டும். இந்த முறையில் தயார் செய்த ஆஸி வீரர்கள்தான் 1999, 2003, 2007 என அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை தட்டிச் சென்றனர்.

நமக்கும் இப்படிபட்ட வீரர்கள் கிடைக்க மாட்டார்களா என நினைக்கும் போதுதான் தோனி வந்தார்.

அந்த killer instinct நம்பிக்கைக்குத் துளிர்விட்ட இன்னிங்ஸ் இலங்கைக்கு எதிராக அவர் அடித்த 183 ரன்கள்.

இயக்குநர்கள் முதல் படத்தை நன்றாக எடுத்துவிடுவார்கள். இரண்டாவது படம்தான் அவர்களுக்குக்கு பெரிய சவாலாக இருக்கும். பேட்ஸ்மேன்கள் முதல்சதம் அடித்துவிடுவார்கள். இரண்டாவது சதம்தான் அவர்களின் கன்சிஸ்டென்சியை நிரூபிக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக ஒன் டவுனில் இறங்கி சதம் அடித்திருந்தாலும் தோனி மேல் ஒரு சந்தேகம் இருந்தது. ஒரு பேட்ஸ்மேனாக கன்சிஸ்டென்ட்டாக ஆடுவாரா என்கிற அந்த சந்தேகத்தை அடித்து உடைத்த மேட்ச்தான் இது.

முதலில் ஆடிய இலங்கை,சங்ககாரா சதத்தால் 298 ரன் எடுத்தது. இந்தியா, சேஸிங்கைத் தொடங்கிய வேகத்திலேயே சச்சினின் விக்கெட்டை காலிசெய்தார் சமிந்தா வாஸ். அடுத்து, புது கேப்டன் டிராவிட் வர வேண்டும். ஆனால், டிராவிட்டும் பயிற்சியாளர் சேப்பலும் இணைந்து தோனியை ஒன்டவுண் இறங்கச் செய்தார்கள்.

தோனி
தோனி
Twitter

ஒன்டவுண் இறங்கி, வாஸ் பந்தில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை எக்ஸ்ட்ரா கவரில் தோனி அடிக்க, 'இன்னைக்கு ஒரு வெறித்தன இன்னிங்ஸ் இருக்கு' என நம்பிக்கையுடன் உட்கார்ந்தான் இந்திய ரசிகன். 18-வது ஓவரில் உபுல் சந்தனா பாலில் இறங்கி அடிக்க ட்ரை செய்ய, உபுல் கொஞ்சம் வைடாக பந்தை போட்டுவிடுவார். ஆனால் உடனே சுதாரித்து, பேட்டை வைத்து பந்தைத் தடுத்துடுவார் தோனி. ஆனால், காலில் தசைபிடிப்பு ஏற்பட்டது. அந்த வலியோடுதான் கடைசிவரை ஆடுவார் தோனி.

இலங்கை கேப்டன் அட்டப்பட்டு, தோனியை வீழ்த்த தொடர்ந்து பெளலர்களை மாற்றிக்கொண்டே இருப்பார். ஆனால், மற்ற பேட்ஸ்மேன்களுக்கு ப்ரஷர் கொடுக்க முடிந்ததே தவிர, தோனியை ஒன்றும் செய்ய முடியவில்லை. எந்த சந்தனா அவருக்கு தசைப்பிடிப்பை ஏற்படுத்தினாரோ, அவருடைய பந்தையே ரவுண்டுகட்டி வெளுத்தார் தோனி. சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறந்துகொண்டே இருந்தன. அன்று சந்தனா கொடுத்த ரன்கள் மட்டும் 83. மறுபக்கம், முரளியால் ரன்களை மட்டும்தான் கட்டுப்படுத்த முடிந்ததே தவிர, தோனி ஆட்டத்தை தோற்கடிக்க முடியவில்லை.

85 பந்துகளில் 100 ரன்கள் அடித்தவர், அடுத்த இன்னிங்ஸை டாப்கியருக்கு மாற்றினார். சிக்ஸர்கள் பறந்தபடியே இருந்தன. 19 ஓவர்களுக்கு 86 ரன்கள் அடித்தால்போதும் என்கிற நிலைமைக்குக் கொண்டுவந்த தோனிக்கு கால் வலி அதிகமாக, பை ரன்னராக வந்தார் ஷேவாக்.

வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என இருக்கும்போது சிக்ஸ் அடித்து மேட்சை முடித்துவைப்பார் தோனி.

300 ரன் சேஸிங்கை 46 ஓவர்களில் முடித்துவிட்டது இந்தியா. தோனி, 15 பவுண்டரி, 10 சிக்ஸர் என வாணவேடிக்கை காட்டி 183 ரன்களை 145 பந்துகளில் அடித்திருப்பார். இது தோனியின் கில்லர் இன்னிங்ஸ்களில் ஒன்று.

இந்த ரன்கள் அடித்த அடுத்த இரண்டு வருடங்களில் இந்திய அணிக்கு கேப்டன் ஆனார் தோனி.

கோலி
கோலி

விராட் கோலி:

சச்சின் எனும் மாபெரும் சகாப்தம் ஆடிய இறுதி ஒருநாள் போட்டியில், விராட் கோலி என்னும் விடிவெள்ளி பிறந்தார். எந்த நாட்டை தோற்கடிப்பதைக்காட்டிலும் பாகிஸ்தானைத் தோற்கடிப்பது என்பது இந்திய வீரர்களுக்கும் இந்திய ரசிகர்களுக்கும் எப்போதுமே ஸ்பெஷல்தான். அந்த வெற்றி கொடுக்கும் சந்தோஷம் மிகவும் உணர்வுபூர்வமானது மற்றும் ஈடு இணையில்லாதது.

முதலில் ஆடிய பாகிஸ்தான் 329 ரன்கள் எடுத்தது. 330 ரன்கள் என்கிற இலக்கை சேஸ் செய்து ஆடிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் ஸ்பின் ஆயுதத்தைக் கையில் எடுக்க, ஹஃபீஸ், கெளதம் கம்பீரை ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே காலிசெய்தார். பொதுவாக 300 ரன்களை சேஸ் செய்யும்போது, ஓப்பனர்கள் சிறப்பான தொடக்கத்தைக் கொடுக்கவேண்டும். அப்படி இல்லை என்றால் சேஸிங் செய்வது என்பது கடினமாகிவிடும். அன்றைக்கு சேஸிங் அப்படி கடினமாகிவிடுமோ, ஒருவேளை பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிடுமோ என்று ரசிகர்கள் அஞ்சியபோது விடிவெள்ளி விராட் கோலி களத்துக்குள் வந்தார்.

வழக்கமாக சச்சின் அடிப்பார், மற்ற பேட்ஸ்மேன்கள் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து ஆடுவார்கள். இதில் ஷேவாக் மட்டுமே விதி விலக்கு. ஆனால், அன்றைய நிலைமை வேறு மாதிரி இருந்தது. கோலி அடிக்க, சச்சின் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்துகொண்டிருந்தார் . ''நீ ஆடியது போதும் தலைவா... ஓய்வெடு... இனி இந்த கிரிக்கெட்டை நாங்கள் முன்னேடுத்துச் செல்கிறோம்'' என்பதுபோல் இருந்தது அன்றைய கோலியின் ஆட்டம்.

உமர் குல் நன்றாக ஃபார்மில் இருந்த நேரத்தில் ''நீ எல்லாம் ஒன்றுமே இல்லை'' என்பது போல் வெளுத்தெடுத்தார் கோலி. அஜ்மல், அஃப்ரிடி, வஹாப் ரியாஸ் என யாரையும் விட்டுவைக்கவில்லை. ஷார்ட் பால் போட்டால் புல் ஷாட் அடித்தார். காலில் போட்டால் ஃப்ளிக் ஷாட் ஆடினார். ஆஃப் சைடில் போட்டால் தனது மணிக்கட்டுகளை யூஸ் பண்ணி கவர் டிரைவ் அடித்தார். இவ்வாறு அன்று கோலியின் ஆட்டம் வேறு மாதிரி இருந்தது. மிஸ்ட்ரி பெளலர் என்றழைக்கப்படும் சஜித் அஜ்மலால்கூட கோலியை ஒன்றும் செய்யமுடியவில்லை.

தோனி - கோலி - கங்குலி
தோனி - கோலி - கங்குலி

148 பந்துகளைச் சந்தித்தவர் 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடித்து 183 ரன்கள் எடுத்தார் .

இந்த ரன்கள் அடித்த அடுத்த இரண்டு வருடங்களில் இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டன் ஆனார் விராட் கோலி.

யார் அடுத்து 183 ரன்கள் அடிக்கப்போகிறார், அடுத்த கேப்டன் ஆகப் போகிறார் என்பதை அறிய இந்திய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

உங்களின் கணிப்பில் அந்த மேஜிக்கல் 183 ரன்களை அடுத்து யார் அடிப்பார் என நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லவும்...