Published:Updated:

`இட்ஸ் கால்டு ரூமர்ஸ்'- தோனி குறித்த வதந்திக்கு `கூல்' பதில் கொடுத்த சாக்‌ஷி!

MS Dhoni

தோனி ஓய்வு தொடர்பாக வரும் தகவல்கள் உண்மையில்லை எனத் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.

Published:Updated:

`இட்ஸ் கால்டு ரூமர்ஸ்'- தோனி குறித்த வதந்திக்கு `கூல்' பதில் கொடுத்த சாக்‌ஷி!

தோனி ஓய்வு தொடர்பாக வரும் தகவல்கள் உண்மையில்லை எனத் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.

MS Dhoni

‘தோனி’ இந்தப் பெயர் காலையிலிருந்தே ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இது ஜூலை மாதம் இல்லை; அதனால் தோனி பிறந்தநாளும் இல்லை; திருமண நாளும் இல்லை; டிசம்பர் மாதமும் இல்லை ஏனெனில் 2004 டிசம்பர் மாதம் தான் ஒருநாள் அணிக்குத் தேர்வானார். இந்தியா உலகக் கோப்பை வென்ற நாளும் இல்லை; ஐபிஎல் கோப்பையை வென்ற நாளும் இல்லை; அட ஏன் தோனி மகளின் பிறந்தநாள் கூட இல்லை. ஆனாலும் தோனி ட்ரெண்டானார். கோலியின் ட்விட்டர் பதிவுதான் தோனி பெயர் ட்ரெண்டானதற்குக் காரணமானது.

Dhoni - Kohli
Dhoni - Kohli

2016 -ம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் புகைப்படத்தை ட்விட்டரில் கோலி பதிவிட்டார். அதில், ``என்னால் மறக்க முடியாத ஆட்டம் இந்த ஆட்டம். சிறப்பான இரவு. தோனி, என்னை ஒரு ஃபிட்னெஸ் சோதனையில் ஓடவைப்பதைப் போன்று ஓட வைத்தார்” எனப் பதிவிட்டார். இந்த மேட்ச் நடந்தது மார்ச் மாதம். இதை ஏன் கோலி இப்போ ஷேர் பண்ணியிருக்கார். கோலி எதையும் காரணம் இல்லாமல் பண்ணமாட்டாரே. புரிஞ்சுடுச்சு.., அப்போ சரி ‘தோனி ரிட்டயர்டு’ போடுறா ட்வீட்ட தட்றா ஹேஷ்டேக்கேன்னு ஒரு குரூப் கிளம்பியது.

தோனி இன்று இரவு 7 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திக்கிறார் எனத் தகவல் ஊடகங்களில் செய்திகளானது. அவ்வளவுதான் ட்விட்டர் பத்திக்கொண்டது ‘நேவர் ரிட்டயர்டு தோனி’ என ரசிகர்கள் உருக ஆரம்பித்தனர். இதுதொடர்பாக அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் தோனி, பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. உறுதிப்படுத்தாத ஒரு தகவல் உலாவந்துகொண்டு இருந்தது. பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே ஒரு ட்வீட்டைத் தட்டிவிட மேலும் பரபரப்பானது “ நான் சுத்தப்படுத்திக்கொண்டிருந்த போது, முன்பு புதிதாக இருந்த புத்தகம் ஒன்று அழுக்குப்படிந்த அட்டையுடன் என்னைப் பார்த்து அங்கே வைக்கும் படி கூறியது. எல்லோருக்கும் இறுதி நேரம் வரும்” என ட்வீட் செய்தார்.

Dhoni
Dhoni

இந்நிலையில்தான் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணியை பிசிசிஐ இன்று மாலை அறிவித்தது. இந்நிலையில் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்திடம் தோனி ஓய்வு முடிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. தோனி ஓய்வு பெறப்போவதாகவும் செய்தியாளர்களைச் சந்திப்பதாகவும் உலா வரும் தகவலில் உண்மையில்லை எனத் தெரிவித்துள்ளார். “இட்ஸ் கால் ரூமர்ஸ்” என்ற தோனி மனைவி சாக்‌ஷியின் ட்வீட் வைரலாகி வருகிறது.