Election bannerElection banner
Published:Updated:

சேப்பாக்கத்தில் ரசிகர்களுக்கு அனுமதியில்லை... லீலா பேலஸில் கடுமையான கட்டுப்பாடுகள்! #INDvENG

சேப்பாக்கம் மைதானம்
சேப்பாக்கம் மைதானம்

கொரோனாவால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவுமே நடக்கவில்லை. கிட்டத்தட்ட 10 மாத இடைவெளிக்குப்பிறகு சென்னையில் இருந்துதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கயிருக்கின்றன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி விரைவில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடயிருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில், ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்கிற கேள்விக்கு 'இல்லை' என முற்றுப்புள்ளிவைத்திருக்கிறது பிசிசிஐ. பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் மீடியா, தன்னார்வலர்கள் என யாருக்கும் அனுமதி இல்லை என சொல்லப்பட்டிருக்கிறது.

தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் விளையாடிவருகிறது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் நாளையோடு முடிவடைய இருக்கும் நிலையில், இலங்கையில் இருந்து நேரடியாக சென்னை வருகிறது இங்கிலாந்து அணி. டெஸ்ட் அணி முழுக்க இலங்கையில் இருந்தும், டி20, ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள் இங்கிலாந்தில் இருந்தும் வர இருக்கிறார்கள். புதன்கிழமைக்குள் இங்கிலாந்து அணி முழுமையாகச் சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி
இந்திய அணி

கொரோனாவால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவுமே நடக்கவில்லை. கிட்டத்தட்ட 10 மாத இடைவெளிக்குப்பிறகு சென்னையில் இருந்துதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்கயிருக்கின்றன.

சென்னையில் கிரிக்கெட் வீரர்கள் லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கவைக்கப்பட இருக்கிறார்கள். கொரோனா அச்சம் காரணமாக விதிமீறல்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதில் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் மிகவும் கவனமாக இருக்கின்றன. அதனால் லீலா பேலஸ் ஹோட்டலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையே பிப்ரவரி 5-ம் தேதி முதல் டெஸ்ட்டும், பிப்ரவரி 13-ம் தேதி இரண்டாவது டெஸ்ட்டும் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு டெஸ்ட்டுக்கும், பார்வையாளர்கள், செய்தியாளர்கள், தன்னார்வலர்கள் என யாருக்கும் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
#INDvENG
#INDvENG

இலங்கையில், இங்கிலாந்துக்கு எதிராக காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் மீடியா அனுமதிக்கப்படவில்லை. இது சர்ச்சையாக இரண்டாவது டெஸ்ட்டில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் சென்னை டெஸ்ட்டிலும் செய்தியாளர்கள், தன்னார்வலர்கள், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு டெஸ்ட் போட்டியை நேரில் காணும் வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், முடிவு பிசிசிஐ கையில் இல்லை. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுதான் இறுதி முடிவுகளை எடுப்பதாகச் சொல்கிறார்கள்.

சென்னையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்து, மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகள் அஹமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. அடுத்தபடியாக அங்கேயே 5 டி20 போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. இறுதியாக இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் புனேவில் நடைபெற இருக்கின்றன.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு