Published:Updated:

`இலக்கு 762... அடித்ததோ 7; 11 பேரும் டக் அவுட்!' - மும்பை பள்ளி கிரிக்கெட்டில் சோகம்

மும்பையில் பள்ளிக் குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியைச் சேர்ந்த அனைத்து வீரர்களும் டக்- அவுட் ஆகி அதிர்ச்சியளித்துள்ளனர்.

கிரிக்கெட்
கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெறும் சில உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்கள் திடீரென கவனம் பெறுவார்கள். 2016-ம் ஆண்டு மும்பையில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் பிரணவ் என்ற வீரர் 1,099 ரன்கள் எடுத்து கவனம் பெற்றார். இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மோசமான சாதனைக்குச் சொந்தமாகியுள்ளனர். ஓர் அணிக்குச் சோதனை வரலாம் ஆனால், இப்படியெல்லாம் சோதனை வரக்கூடாது என்ற ரீதியில் இந்தப்போட்டி அமைந்துள்ளது.

கிரிக்கெட் பந்து
கிரிக்கெட் பந்து

மும்பையில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான ஹாரிஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டி நடந்துவருகிறது. இதில் சுவாமி விவேகானந்தர் அணியும் சில்ரன் வெல்ஃபேர் ஸ்கூல் அணியும் மோதின. முதலில் பேட் செய்த சுவாமி விவேகானந்தர் அணி எதோ நெட் பிராக்டீஸ் செய்வதுபோல் வெளுத்து வாங்கியது. அந்த அணியின் பேட்ஸ்மேன் மாயேகர் சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசினார். பவுண்டரி லைன் சிறியதாக இருந்ததால் பவுண்டரிகள் பறந்தன. 39 ஓவர்கள் விளையாடிய சுவாமி விவேகானந்தர் பள்ளி அணி 4 விக்கெட் இழப்புக்கு 605 ரன்கள் எடுத்தது. 134 பந்துகளை எதிர்கொண்ட மாயேகர் 338 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்ஸர்கள், 56 பவுண்டரிகள் அடக்கம்.

`டி20 போன்றதொரு புரட்சி நடக்கும்!’ - யுவராஜ் நம்பும்`The Hundred' கிரிக்கெட் தெரியுமா?

இவ்ளோ ரன்களை வாரி வழங்கிட்டோமே என வீரர்கள் புலம்பிக்கொண்டிருக்க, நடுவர்கள் இன்னொரு குண்டை தூக்கிப்போட்டனர். 3 மணி நேரத்தில் 45 ஓவர்களை வீசத் தவறிவிட்டீர்கள். 6 ஓவர்கள் பந்துவீச வேண்டியுள்ளது அதற்குப் பதிலாக 156 ரன்கள் அபராதமாக விதிக்கிறோம் என நடுவர்கள் தங்கள் பங்குக்கு சோதித்தனர். இந்த போனஸை சேர்த்து விவேகானந்தர் ஸ்கூல் அணியின் ரன் கணக்கு 761 ஆக உயர்ந்தது.

`இலக்கு 762... அடித்ததோ 7; 11 பேரும் டக் அவுட்!' - மும்பை பள்ளி கிரிக்கெட்டில் சோகம்

இது சில்ரன் வெல்ஃபேர் ஸ்கூல் அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. சரி ஒரு கை பார்த்துவிடுவோம் என இறங்கிய சில்ரன் வெல்ஃபேர் ஸ்கூல் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பெரிய ஸ்கோர் சிக்ஸர், பவுண்டரியா அடிச்சு ஜெயிச்சுடலாமா என களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாம் டக் அவுட் ஆனார்கள். ஒரு பேட்ஸ்மேன் கூட ரன் கணக்கை தொடங்கவில்லை. 6 ஓவர்கள் தாக்குப்பிடித்த அந்த அணி 7 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த 7 ரன்னும் விவேகானந்தர் அணி பவுலர்கள் வீசிய வைடுகளால் கிடைத்தது. 7 பேட்ஸ்மேன்கள் க்ளீன் போல்ட், 2 பேர் ரன் அவுட், ஒருவர் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார்.