Published:Updated:

`நடவடிக்கை எடுக்குமளவுக்கு எந்த முறைகேடும் நடக்கவில்லை!' - தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் #TNPL

TNPL
TNPL

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைத்த குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியில் பங்கேற்ற வீரர்களை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக சமீபத்தில் புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரனை மேற்கொள்ள பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வீரர்களை வாட்ஸ் அப்பில் தொடர்புகொண்டு சூதாட்டத்தில் ஈடுபடக் கூறியதாகப் புகார் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பிசிசிஐ ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

TNPL
TNPL

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டவட்டமாக மறுத்தது. தமிழகத்தில் நடக்கும் டி.என்.பி.எல் போட்டிக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை எனக் கூறியது. அதன் பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்தது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் அமைக்கப்பட்ட குழு வீரர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாகத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,`டி.என்.பி.எல் போட்டிகளில் விசாரணை நடத்துமளவுக்கு எந்த முறைகேடும் நடக்கவில்லை.

Vikatan

அதுபோன்று, எந்தச் சம்பவங்களும் அறியப்படவில்லை. டி.என்.பி.எல் போட்டியின் நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவதற்காகச் சில ரகசிய பரிந்துரைகளை விசாரணைக் குழு வழங்கியுள்ளது. அதைப் பின்பற்றுவோம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு