Published:Updated:

இரண்டு கைகளாலும் பந்துவீசும் தமிழக ஸ்பின்னர்; ஆடுவது ஆஸ்திரேலிய அணிக்கு!பின்னணி என்ன?

Nivethan Radhakrishnan
News
Nivethan Radhakrishnan

சென்னையில் ஒரு நாலாவது டிவிஷன் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியபோது, நிவேதனின் வயது 6! எல்லோரும் அதிசயித்துபோயிருந்தார்கள். 'boy wonder' என்று ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின.

நிவேதன் ராதாகிருஷ்ணன் - வெஸ்ட் இண்டீஸில் நடக்கவிருக்கும் அண்டர் 19 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருக்கிறார். ஆஸ்திரேலிய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு வீரர் விளையாடப்போகிறார்!

இன்றெல்லாம், left handed batter வந்தால் ஆஃப் ஸ்பின்னரை அழைப்பதும், right handed batter வந்தால் லெக் ஸ்பின்னரை பந்துவீசச் செய்வதும் வாடிக்கையாக இருக்கிறது. இடது கை பேட்டர்களுக்கு லெக் ஸ்பின்னரை பந்துவீச வைக்க கேப்டன்கள் பயப்படுகிறார்கள்.

Nivethan with his family
Nivethan with his family

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆனால், ஆஸ்திரேலிய அண்டர் 19 அணியில் அந்த பிரச்னை இருக்கப்போவதில்லை. ஏனெனில், நிவேதன் இரண்டும் கலந்த பேக்கேஜ். இவரால் இரண்டு கைகளாலும் பந்துவீச முடியும். தன் right arm off spin மூலம் இடது கை பேட்டர்களைப் பந்தாடுவார். left arm finger spin மூலம் right hander-களை நிலைகுலையச் செய்வார். சுருங்கச் சொன்னால், இவர் அஷ்வினும் ஜடேஜாவும் சேர்ந்து செய்த ஒரு கலவை.

அவர்கள் பேட்டிங் செய்வார்களே என்று கேட்டால், அதற்கும் நிவேதனால் பதில் சொல்ல முடியும். அட, இவர் ஓப்பனிங் பேட்டர் வேறு! ஆக, 22 யார்டுக்குள் பல்வேறு ஜாலங்களை நிகழ்த்துக்கூடிய அசத்தல் ஆல்ரவுண்டர் இவர்!

நிவேதனை இரண்டு கைகளால் பந்துவீசச் செய்தது மட்டுமல்ல, அவரது திறமையைக் கண்டறிந்து, பயிற்சி கொடுத்து அவரை உருவாக்கியதுமே அவர் தந்தை அன்புச் செல்வன் தான். மகனை ஒரு கிரிக்கெட் வீரனாக்குவதற்கு இவர் மேற்கொண்ட பயணம் மிகப்பெரியது. கடல்களும் கண்டங்கள் தாண்டிய பயணம் அது!

அந்தப் பயணத்தைப் பற்றிய முழு விவரமும் மேலே இருக்கும் வீடியோவில்...