Published:Updated:

நாலு யார்க்கர்... நாலு விக்கெட்... மலிங்கா மேஜிக் நடந்தது எப்படி?! #Slinga #SLvNZ

Malinga ( AP )

பொதுவாகவே ஹாட்ரிக் பந்தில் பௌலர்கள் விக்கெட் வீழ்த்தியே ஆக வேண்டும் என்று போடுவதால் அவர்களின் ஃபோகஸ் கொஞ்சம் சிதறும். ஆனால், இந்தப் போட்டியில் மலிங்கா வீசிய மூன்றாவது பந்தில் தெரிந்தது அவரின் அனுபவம்.

நாலு யார்க்கர்... நாலு விக்கெட்... மலிங்கா மேஜிக் நடந்தது எப்படி?! #Slinga #SLvNZ

பொதுவாகவே ஹாட்ரிக் பந்தில் பௌலர்கள் விக்கெட் வீழ்த்தியே ஆக வேண்டும் என்று போடுவதால் அவர்களின் ஃபோகஸ் கொஞ்சம் சிதறும். ஆனால், இந்தப் போட்டியில் மலிங்கா வீசிய மூன்றாவது பந்தில் தெரிந்தது அவரின் அனுபவம்.

Published:Updated:
Malinga ( AP )

2007 உலகக் கோப்பை. தென்னாப்பிரிக்கா vs இலங்கை. போட்டி தென்னாப்பிரிக்கா வெற்றி பெற 32 பந்துகளில் வெறும் 4 ரன்கள் தேவை. கையில் 5 விக்கெட்கள். ஏறக்குறைய போட்டியே முடிந்துவிட்டது என இலங்கை வீரர்களே நினைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் வரிசையாக நாலு பந்தில் நாலு விக்கெட்கள் வீழ்த்தி தென்னாப்பிரிக்காவுக்கு மரண பீதியைக் கண்ணில் காட்டிய அதே லசித் மலிங்கா, இன்று 12 ஆண்டுகளுக்கு பின்னர் அதேபோல் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி தன்னை 'யார்க்கர் மன்னன்' என்று இந்த உலகுக்கு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஏற்கெனவே தொடரை இழந்தாகிவிட்டது, இந்த மேட்சிலும் ஸ்கோர் போர்டில் வெறும் 125 ரன்கள்தான். பிட்சை பொறுத்தவரை ஸ்லோ விக்கெட்தான் என்றாலும், நியூசிலாந்து எளிதாகவே இலக்கை எட்டிவிடும் என்று அனைவரும் நினைத்துக்கொண்டிருக்கையில்தான் நாலே பந்தில் தனி ஆளாக ஆட்டத்தைப் புரட்டிப்போட்டார் மலிங்கா.

Lasith Malinga
Lasith Malinga
AP

பொதுவாகவே ஹாட்ரிக் பந்தில் பௌலர்கள் விக்கெட் வீழ்த்தியே ஆக வேண்டும் என்று போடுவதால் அவர்களின் ஃபோகஸ் கொஞ்சம் சிதறும். ஆனால், இந்தப் போட்டியில் மலிங்கா வீசிய அந்த மூன்றாவது பந்தில் (ஓவரின் 5-வது பந்து) தெரிந்தது அவரின் அனுபவம். அந்தப் பந்தில் மலிங்கா தனக்கேயான ஆயுதமான யார்க்கர் பந்தை தெளிவாக வீசினார். யார்க்கர் கூடவே லேட் ஸ்விங்கும் ஆக, பந்து கிராந்தோமின் பேட்டைக் கடந்து நேராகச் சென்று ஸ்டம்பைத் தகர்த்தது. டி20 போட்டிகளில் மலிங்காவுக்கு இது 2-வது ஹாட்ரிக். ஏற்கெனவே 2017-ல் வங்கதேசத்துக்கு எதிராக ஒரு ஹாட்ரிக் வீழ்த்தியுள்ளார். இந்த ஹாட்ரிக் மூலம் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஹாட்ரிக் எடுத்திருந்த வாசிம் அக்ரமை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் மலிங்கா.

ஹாட்ரிக் எடுத்த பந்தை லெக் ஸ்டம்ப் நோக்கி ஃபுல்லர் லென்த்தில் வீச தன் முதல் பந்தை சந்தித்த ராஸ் டெய்லர் பந்தை சரியாகக் கவனிக்காமல் எல்பிடபிள்யூ ஆக, 12 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததை ரிப்பீட் செய்தார் மலிங்கா. 15 - 0 என்று தொடங்கிய அந்த ஓவரை 15 - 4 என்றாக்கி மொத்த மேட்சையும் தன் அணி பக்கம் திருப்பி முடித்தார் மலிங்கா.

Malinga
Malinga
AP

அந்த ஓவரின் மூன்றாவது பந்திலேயே (முதல் விக்கெட்) மற்றொரு சாதனையையும் தன் பைக்குள் போட்டிருப்பார் மலிங்கா. முந்தைய ஓவரில் ஃபோர், சிக்ஸ் என வேகம் காட்ட முற்பட்ட மன்றோவுக்கு வீசிய 140 kmph ஸ்பீட் பந்து 'இன் ஸ்விங்' ஆகி அவரின் லெக் ஸ்டம்ப்பை தெறிக்கவிட்டது.

தனது முதல் டி-20 போட்டியில் இதேபோல் நான்காவது பந்தைச் சந்திக்கிறார் மன்றோ. மலிங்காவின் டிரேட் மார்க் யார்க்கர். ஸ்டம்புகள் பறக்க டக் அவுட் ஆகி வெளியேறினார். அதேபோல் நேற்று முதல் ஓவரில் தாக்குப்பிடித்துவிட்டாலும், மலிங்கா ரூபத்தில் வந்த சிக்கல் அவரை விடவில்லை. மீண்டும் யார்க்கர். மீண்டும் ஸ்டம்புகள் பறந்தன.

Colin Munro
Colin Munro
AP

அந்த விக்கெட் மூலம் டி20 போட்டிகளில் 100 விக்கெட்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதே தொடரில்தான் ஷாஹித் அஃப்ரிடியை பின்னுக்கு தள்ளி டி20 போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய பௌலர் ஆனார்.