Published:Updated:

மெல்போர்னில் விட்டதை லார்ட்ஸில் பிடிக்குமா கிவி... மோஸ்ட் வான்டட் மேட்ச்சில் வெல்வது யார்?! #AUSvsNZ

#NZvAUS

இன்னும் ஒரு போட்டியில் வென்றாலே, நியூஸிலாந்து அரை இறுதிக்குள் நுழைந்துவிடும். ஆனால், ஆஸ்திரேலியாவை வென்று அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்பதே நியூசிலாந்து ரசிகர்கள் விருப்பம்.

Published:Updated:

மெல்போர்னில் விட்டதை லார்ட்ஸில் பிடிக்குமா கிவி... மோஸ்ட் வான்டட் மேட்ச்சில் வெல்வது யார்?! #AUSvsNZ

இன்னும் ஒரு போட்டியில் வென்றாலே, நியூஸிலாந்து அரை இறுதிக்குள் நுழைந்துவிடும். ஆனால், ஆஸ்திரேலியாவை வென்று அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்பதே நியூசிலாந்து ரசிகர்கள் விருப்பம்.

#NZvAUS

`நடப்பு சாம்பியன்னா, சும்மாவா' என உரக்கச் சொன்னபடி 2019 உலகக் கோப்பையில் முதல் அணியாக அரை இறுதிக்கு முன்னேறிவிட்டது ஆஸ்திரேலியா. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்துக்கு எதிரான மோதலில் அசால்ட்டு காட்டிய `யெல்லோ ஆர்மி', 64 வித்தியாசத்தில் போட்டியை வென்று பழைய ஆஸ்திரேலியாவை நினைவூட்டியது.

#NZvAUS
#NZvAUS

மறுபுறம், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் போட்டிகளை வென்று வந்த ப்ளாக் கேப்ஸ், பாகிஸ்தானிடம் வீழ்ந்தது. ஒரு தோல்வியினால் அரை இறுதிக்கு தகுதி பெறுவதில் பெரிய பாதிப்பு இல்லை. இன்னும் ஒரே ஒரு போட்டியை வென்றால், நியூசிலாந்து அரை இறுதிக்குள் நுழைந்துவிடும். ஆனால், ஆஸ்திரேலியாவை வென்று அரை இறுதிக்கு தகுதி பெறுவதைத்தான் நியூசிலாந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். #NZvAUS

நியூசிலாந்தின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் காலின் மன்றோ, மார்டின் கப்டில் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லரை பெரிதும் நம்பியிருந்தது அந்த அணி. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக கிரந்தோம், ஜிம்மி நீஷம் ஜோடி அபாரமாக ஆடி மிடில் ஆர்டருக்கு பலம் சேர்த்தது.

#NZvAUS
#NZvAUS

பெளலிங்கைப் பொறுத்தவரை டிரென்ட் போல்ட், ஒவ்வொரு போட்டியிலும் அநாயாசமாக 145 கி.மீ வேகத்தில் மிரட்டும் ஃபெர்குசன், ஹென்றி என நியூஸிலாந்தின் பெளலிங் அட்டாக் வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் பிட்ச்சை சரியாக கணிக்கத் தவறிய வில்லியம்சன் வேறு வழியின்றி, தானே 8 ஓவர்களை வீசினார். அதில் ஒரு ப்ரேக்த்ரூ கிடைத்தது. ஆனால், அவரது 6–வது ஓவருக்குப் பின் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அவரது பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டனர். எனவே, பிட்ச் சுழலுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில், இஷ் சோதியை அணியில் சேர்க்கலாம். நியூஸிலாந்து முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரியின் கருத்தும் இதுவே.

இந்த உலகக் கோப்பையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் போட்டி இது. 2015 உலகக் கோப்பை ஃபைனில் இரு அணிகளும் மோதின. இதில் ஆஸ்திரேலியா வென்று ஐந்தாவது முறையாக உலக சாம்பியனானது. நியூஸிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் முதல் ஓவரிலேயே அவசரப்பட்டு மிட்சல் ஸ்டார்க் பந்தில் அவுட்டானதுமே, நியூஸிலாந்தின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. இந்தமுறை அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் நியூஸிலாந்து கவனமாக இருக்கிறது. ஆனால், அரையிறுதிக்கு முன்னேறிய போதும் நியூஸிலாந்தை வெல்லாமல் உலகக் கோப்பை வென்றால் அதில் திருப்தி இருக்காது என்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக இருக்கிறது.

இந்த உலகக் கோப்பையில் 500 ரன்கள் கடந்த வார்னர், 496 ரன்கள் அடித்திருக்கும் கேப்டன் ஆரோன் ஃபின்ச் அதிரடி ஃபார்மில் இருப்பதால், இன்றைய போட்டியிலும் இவர்களது பார்ட்னர்ஷிப் அதிரடியை எதிர்பார்க்கலாம்.

மிட்சல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் இருக்கும் பெளலிங் யூனிட்டில், ஜேசன் பெஹரன்டார்ஃப் இணைந்திருப்பது ஆஸ்திரேலியாவுக்கு மேலும் பலம்.

நேருக்கு நேர்:

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இரு அணிகளும் மோதியுள்ள 136 போட்டிகளில், ஆஸ்திரேலியா 90 போட்டிகளை வென்று முன்னிலை வகிக்கிறது. நியூசிலாந்து 39 போட்டிகளில் வென்றுள்ளது. 7 போட்டிகளில் முடிவுஇல்லை. கிவியுடன் ஒப்பிடும்போது, கங்காருதான் உலகக் கோப்பையிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. 10 உலகக் கோப்பை மோதல்களில், ஆஸ்திரேலியா 7 முறையும், நியூசிலாந்து 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

#NZvAUS
#NZvAUS

2015 உலகக் கோப்பை ரீவைண்டு

2015 உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய நியூசிலாந்து, இறுதிப்போட்டியில் சரண்டரானது. கடந்த உலகக் கோப்பையில் நடந்ததை இந்த உலகக் கோப்பையில் மாற்றி எழுத நியூசிலாந்துக்கு ஒரு வாய்ப்பு.

ஆக்லாந்தில் நடந்த லீக் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய டிரென்ட் போல்ட், இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். நியூசிலாந்துக்கு போல்ட் எனில், ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டார்க். இதே 2015 லீக் போட்டியில் நியூசிலாந்தின் 6 விக்கெட்டுகளை பதம்பார்த்த ஸ்டார்க்கின் வேகம் இன்னமும் குறையவில்லை.

4 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கியமான கட்டத்தில் மோதும் இரு அணிகளின் பேட்ஸ்மேன்களும், ஸ்டார்க் மற்றும் போல்டின் வேகத்தைச் சமாளித்து விளையாட வேண்டும்.

#NZvAUS
#NZvAUS

நடப்பு உலகக் கோப்பையில், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட் செய்த அணி வென்றுள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயிக்கும் அணி, முதலில் பேட்டிங்கையே தேர்ந்தெடுக்க வாய்ப்பு அதிகம்.

ப்ளேயிங் லெவன்

ஆஸ்திரேலியா (உத்தேசம்)

ஆரன் ஃபின்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், நாதன் லயன், ஜேசன் பெஹண்டராப்.

நியூசிலாந்து (உத்தேசம்)

கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்டில், காலின் மன்றோ/ ஹென்ரி நிகோல்ஸ், ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீஷம், காலின் டி கிரந்தோம், மிட்சல் சான்ட்னர், மேட் ஹென்றி/இஷ் சோதி, லாக்கி ஃபெர்குசன், டிரென்ட் போல்ட்.

இதுவரை

ஆஸ்திரேலியா

vs ஆப்கானிஸ்தான் - 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs வெஸ்ட் இண்டீஸ் - 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இந்தியா - 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

vs பாகிஸ்தான் - 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இலங்கை - 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs வங்கதேசம் - 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs இங்கிலாந்து - 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

நியூசிலாந்து

vs இலங்கை- 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs வங்கதேசம் - 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs ஆப்கானிஸ்தான் - 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs இந்தியா - மழையால் போட்டி ரத்து

vs தென்னாப்பிரிக்கா - 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

vs வெஸ்ட் இண்டீஸ் - 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

vs பாகிஸ்தான் - 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி