Published:Updated:

`0 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள்!’ - மாலத்தீவை காலி செய்த அஞ்சலி சந்த்

13-வது ஆசியா விளையாட்டுப் போட்டி, நேபாளத்தில் உள்ள போக்ரா நகரில் நடைபெற்றுவருகிறது.

அஞ்சலி சந்த்
அஞ்சலி சந்த்

மாலத்தீவுக்கு எதிரான பெண்கள் டி 20 கிரிக்கெட் போட்டியில், நேபாளத்தின் அஞ்சலி சந்த் 0 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். தனது அபாரமான பந்து வீச்சால், 13 பந்துகளில் 0-6 என்ற கணக்கில் அடுத்தடுத்து ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து, ஆறு வீராங்கனைகளை பெவிலியனுக்கு திருப்பி அதகளப்படுத்தினார்.

அஞ்சலி சந்த்
அஞ்சலி சந்த்

மலேசிய போட்டியாளர் மாஸ் எலிசாவின் ஆறு ரன்களுக்கு மூன்று விக்கெட்ட்கள் என்ற சாதனையை முறியடித்து, டி 20-யில் குறைந்த ரன்களில் அதிக விக்கெட் பெற்ற வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார், 24 வயதே ஆன அஞ்சலி. நேபாளத்துக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான போட்டியில், மாலத்தீவுக்கான தொடக்க ஆட்டக்காரர் ஹம்ஸா நியாஸ், 11 பந்துகளில் 9 ரன்கள் எடுக்க, அணியில் விக்கெட் கீப்பர் ஹப்சா அப்துல்லா மட்டுமே பவுண்டரி அடித்தார். அவர் 10 பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்தார். அதிக எண்ணிக்கையிலான பந்து வீச்சுகளை எதிர்கொண்ட அய்மா ஐஷ்நாத், ஒரு ரன் கூட எடுக்க முடியவில்லை.

மாலத்தீவைச் சேர்ந்த ஒருவர்கூட இரட்டை இலக்கதில் ரன்கள் எடுக்க முடியாமல், 10.1 ஓவர்களில் 16 ரன்களில் ஆட்டமிழந்தது. அடுத்து களமிறங்கிய நேபாளம், சுலபமாக 0.5 ஒவரில் 17 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஞ்சலியின் அபாரமான பந்து வீச்சாலும் தனது சொந்த மண்ணில் கிடைத்த வெற்றி என்பதும் நேபாளத்திற்கு மிகப் பெரிய தொடக்கமாக அமைந்துள்ளது.

அஞ்சலி சந்த்
அஞ்சலி சந்த்

தொடர்ந்து நேபாள், வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவு மோதும் போட்டிகளில், டாப் இரண்டு அணிகள் தங்கப் பதக்கத்திற்காகவும், மற்ற இரண்டு அணிகள் வெண்கலப் பதக்கத்திற்காகவும் பங்கேற்கும். ஆண்களுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய வீரர் தீபக் சஹார் 6 பந்துகளில் 7 விக்கெட்டை வீழ்த்தி, இலங்கை வீரர் அஜந்தா மென்டிஸின் சாதனையை முறியடித்தார் எ‌ன்பது‌ குறிப்பிடத்தக்கது.