Published:Updated:

கோலியைக் காப்பாற்றிய நடராஜன்... ஆட்டத்திலேயே இல்லாமல் ஆட்டநாயகனான சஹால்?! #AUSvIND

#AUSvIND

இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா, சைனி, சஹால் ஆகியோர் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டு சஞ்சு சாம்சன், மனீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். தமிழக வீரர் நடராஜன் இந்த போட்டியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளுக்கு அறிமுகமானார்.

கோலியைக் காப்பாற்றிய நடராஜன்... ஆட்டத்திலேயே இல்லாமல் ஆட்டநாயகனான சஹால்?! #AUSvIND

இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா, சைனி, சஹால் ஆகியோர் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டு சஞ்சு சாம்சன், மனீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். தமிழக வீரர் நடராஜன் இந்த போட்டியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளுக்கு அறிமுகமானார்.

Published:Updated:
#AUSvIND

ஆட்டத்திலேயே இல்லாத சஹாலின் பெர்ஃபார்மென்ஸ் மூலமும், தமிழக வீரரான நடராஜனின் மிரட்டலான அறிமுக பெர்ஃபார்மென்ஸ் மூலமும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்ற அதே கான்பெரா மைதானத்தில் வைத்தே இந்த டி20 போட்டியும் நடைபெற்றது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருநாள் தொடர் முழுவதும் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பிய ஆஸ்திரேலிய அணி இன்றைய போட்டியில் டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் வார்னருக்கு பதில் ஆர்சி ஷார்ட் சேர்க்கப்பட்டிருந்தார். கீப்பராக மேத்யூ வேட் சேர்க்கப்பட்டிருந்தார். ஆடம் ஸாம்பாவுடன் சேர்த்து ஸ்வெப்சன் என்ற இன்னொரு லெக் ஸ்பின்னரும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். கடைசி ஒருநாள் போட்டியில் ஓய்வில் இருந்த ஸ்டார்க் மீண்டும் அணிக்குள் வந்திருந்தார்.

இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா, சைனி, சஹால் ஆகியோர் பென்ச்சில் உட்கார வைக்கப்பட்டு சஞ்சு சாம்சன், மனீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், தீபக் சஹார் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். தமிழக வீரர் நடராஜன் இந்த போட்டியின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளுக்கு அறிமுகமானார்.

#AUSvIND
#AUSvIND

இந்திய அணியின் சார்பில் ராகுலும் தவானும் ஓப்பனர்களாக இறங்கினர். ஸ்டார்க்கும் ஹேசல்வுட்டும் ஓப்பனிங் ஸ்பெல்லை வீசினர். இருவரும் கட்டுக்கோப்பாக முதல் இரண்டு ஓவர்களில் 6 ரன்களை மட்டுமே கொடுத்தனர். ஒரு பவுண்டரி கூட வரவில்லை. அடுத்து ஸ்டார்க் வீசிய மூன்றாவது ஓவரில் ராகுல் ஒரு பவுண்டரி அடித்து பிறகு ஸ்ட்ரைக்கை தவானுக்கு கொடுக்க, ஸ்டார்க் வீசி ஒரு சின்ன மூவ்மெண்ட்டுடன் வந்த ஃபுல் லென்த் டெலிவரியில் போல்டாகி வெளியேறினார் தவான். அடுத்ததாக கேப்டன் கோலி உள்ளே வந்தார். கோலி வந்தவுடனே லெக் ஸ்பின்னர்களை அறிமுகப்படுத்தினார் ஃபின்ச். ஆடம் ஸாம்பா வீசிய 5-வது ஓவரை ராகுல் சமாளித்து விட மீண்டும் 7-வது ஓவரை லெக்ஸ்பின்னர் ஸ்வெப்சனுக்கு கொடுத்தார். இந்த ஓவரில் ராகுல் ஒரு பவுண்டரி அடிக்க, பின் கோலிக்கு ஸட்ரைக் கிடைத்தது.

ராகுலுக்கு ஸ்வெப்சன் கூக்ளிக்களை வீசியதால் அதே மாதிரி கூக்ளியை கோலி எதிர்பார்க்க, ஸ்வெப்சன் திடீரென ஒரு லெக் ப்ரேக் வீச, குழம்பிப்போய் அவரிடமே கேட்ச் கொடுத்து 9 ரன்னில் வெளியேறினார் கோலி. அடுத்து சாம்சன் உள்ளே வர ஒரு எண்ட்டில் ராகுல் தனது வழக்கமான ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்தார். முதல் 10 ஓவர்களில் 75 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா. டீசன்ட்டான நிலையில் இருப்பதால் கடைசி 10 ஓவர்களில் அதிரடியாக ஆடி பெரிய டார்கெட்டை செட் செய்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12-14 என இந்த மூன்று ஓவர்களில் வெறும் 6 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹென்ரிக்ஸ், ராகுல் மற்றும் சாம்சனின் விக்கெட்டை வீழ்த்த ஸாம்பா மனீஷ் பாண்டேவின் விக்கெட்டை வீழ்த்தினார். 15 ஓவர்களில் 97 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது இந்தியா. ஃபார்மில் இருக்கும் ஹர்திக்கும் ஜடேஜாவும் க்ரீஸில் இருக்க, குறைந்த பட்சம் 150 ரன்களாவது வரும் என எதிர்பார்க்க, ஹென்ரிக்ஸ் வீசிய 17-வது ஓவரில் ஒரு சிக்சர் மட்டும் அடித்துவிட்டு ஹர்திக் அவுட் ஆகி ஏமாற்றினார். 150 வருவதே கடினம் என்ற சூழ்நிலையில், ஜடேஜா மொத்த பொறுப்பையும் எடுத்துக்கொண்டு வெறித்தனமாக ஆடத்தொடங்கினார். கடைசி 3 ஓவர்களில் மட்டும் 46 ரன்கள் வந்தது. ஹேசல்வுட் வீசிய 19 வது ஓவரில் மட்டும் 23 ரன்கள் வந்தது. ஜடேஜாவின் அதிரடியால் ஒருவழியாக 161 ரன்களை எடுத்தது இந்தியா. ஜடேஜா 23 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து இந்தியாவை கரையேற்றினார்.

#AUSvIND
#AUSvIND

ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா பேட்டிங் செய்யும் போது 20- வது ஓவரில் ஸ்டார்க் வீசிய ஒரு டெலிவரி ஜடேஜாவின் ஹெல்மெட்டை தாக்கியிருந்தது. மேலும், இன்னிங்ஸ் முடிவில் ஜடேஜா தசைப்பிடிப்பாலும் அவதிப்பட்டார். இதனால், போட்டி நடுவரிடம் பேசி ஜடேஜாவுக்கு பதிலாக சஹாலை பதில் வீரராக (கன்கஷன் ரீப்ளேஸ்மென்ட்) உள்ளே கொண்டு வர இந்தியா முடிவு செய்தது. நடுவரும் ஏற்றுக்கொள்ள, ப்ளேயிங் லெவனிலேயே இல்லாத சஹால் இந்தியாவுக்கு பந்து வீச அழைத்து வரப்பட்டார். இது ஐ.சி.சி விதிமுறைகளுக்கு உட்பட்டதே. ஆனால், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் இதற்கு கடுமையாக அதிருப்தி தெரிவித்தார். ஜடேஜாவுக்கு பதில் சஹால் உள்ளே இறங்கினார்.

ஆர்சி ஷார்ட் மற்றும் ஃபின்ச் ஓப்பனர்களாக இறங்க, தீபக் சஹார் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரிகள் வந்தது. வாஷிங்டன் வீசிய 2 -வது ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே வர 5 டாட்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை தீபக் சஹாருக்கு கொடுக்காமல் ஷமிக்கு கொடுத்தார் கோலி. ஆனாலும் இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை. முதல் ஆறு ஓவர்களில் விக்கெட்டே இழக்காமல் 53 ரன்களை எடுத்தது இந்த கூட்டணி. தீபக் சஹார் வீசிய 7-வது ஓவரில் இரண்டு கேட்ச்கள் டிராப் ஆனது. இதில் ஆர்ஷி ஷார்ட்டின் கேட்சை கோலியே தவறவிட்டார்.

அடுத்த ஓவரை வீசுவதற்கு சஹால் வந்தார். ப்ளேயிங் லெவனிலேயே இல்லாத சஹால் மூலமே இந்தியாவுக்கு முதல் விக்கெட் கிடைத்தது. இந்த ஓவரில் ஃபின்ச் பெரிய ஷாட்டுக்கு முயன்று ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஜஸ்டின் லேங்கர் நடுவரிடம் ஏன் அவ்வளவு வாக்குவாதம் செய்தார் என்பதற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும். சஹால் வீசிய அடுத்த ஓவரில் ஸ்மித் காலியானார். முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்த ஸ்மித் சஹாலின் பந்துவீச்சில் வெறும் 12 ரன்களுக்கு சாம்சனிடம் கேட்ச் ஆனார். ஸ்மித்துக்கு பிறகு நம்பர் 4- ல் மேக்ஸ்வெல் உள்ளே வர நடராஜன் வீசிய அடுத்த ஓவரிலேயே lbw ஆகி வெளியேறினார் மேக்ஸ்வெல்.

#AUSvIND
#AUSvIND

ஓரு நாள் போட்டிகளில் லாபுசேனின் விக்கெட்டை முதல் விக்கெட்டாக எடுத்திருந்த நடராஜன் டி20 யில் மேக்ஸ்வெல்லை வீழ்த்தி தனது விக்கெட் கணக்கை தொடங்கினார். இந்த விக்கெட் ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பிவிட்டது. கோலியைக் காப்பாற்றியது. ஹென்ரிக்ஸும் ஆர்சி ஷார்ட்டும் கூட்டணி போட்டனர். ஷார்ட் முதலிலிருந்தே ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து விக்கெட்டை பாதுகாத்து ஆடிக்கொண்டிருந்தார். இவர் கடைசி வரை நின்றால் பெரிய பிரச்னையாக இருக்கும் என நினைக்கையிலேயே நடராஜன் மீண்டும் வந்து திருப்புமுனையை ஏற்படுத்திவிட்டார். நடராஜன் வீசிய 15 வது ஓவரின் கடைசி பந்தில் பெரிய ஷாட்டுக்கு முயன்று லாங் ஆனில் ஹர்திக்கிடம் கேட்ச் ஆனார்.

கடைசி 5 ஓவர்களில் 49 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஹென்ரிக்ஸும் மேத்யூ வேடும் கூட்டணி போட்டனர். 16 வது ஓவரை வாஷிங்டன் சிறப்பாக வீசி 3 ரன்கள் மட்டுமே கொடுத்து இன்னும் ப்ரஷரை கூட்டினார். சஹால் வீசிய 17 வது ஓவரில் முதல் 5 பந்துகளில் 6 ரன்கள் வர கடைசி பந்தில் மேத்யூ வேட் ஸ்லாக் ஸ்வீப் ஆடி கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சஹால் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து ஃபின்ச், ஸ்மித், வேட் என மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். இன்றைக்கு மேட்ச் தொடங்கும் போது அவர் ஆட்டத்திலேயே இல்லை. ஆனால் மேட்ச் முடியும் போது அவர்தான் ஆட்டநாயகன். அடுத்த ஓவரிலேயே ஹென்ரிக்ஸ் தீபக் சஹாரின் பந்தில் அவுட் ஆகி விட ஆட்டம் மொத்தமாக இந்தியா பக்கம் திரும்பியது. நடராஜன் வீசிய 19 வது ஓவரில் அவரின் ட்ரேட்மார்க் யார்க்கரில் ஸ்டார்க் போல்டானார். இந்த விக்கெட் மூலம் தன் அறிமுகப்போட்டியில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார் நடராஜன். இறுதியில் அட்டகாசமான பௌலிங் பெர்ஃபார்மன்ஸ் மூலம் இந்திய அணி ஆஸியை 150 ரன்னுக்கு கட்டுப்படுத்தி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி தொடர்ச்சியாக 9 வது டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ஜடேஜாவின் அந்த இறுதிகட்ட அதிரடி, சஹாலின் மேஜிக்கல் ஸ்பெல், அறிமுகப்போட்டியிலேயே கலக்கிய நடராஜன் ஆகியோர்தான் இந்த வெற்றிக்கு முழுமையான காரணம்.

இந்த பர்ஃபார்மென்ஸ மூலம் இனி இந்திய அணிக்குள் நடராஜனுக்கு நிலையான இடம் கிடைத்துவிட்டது என்பதை உறுதியாக கூறலாம். மேலும் கேப்டன்சி சிக்கலில் இருக்கும் கோலியை இன்று காப்பாற்றியதும் நடராஜன்தான். மேக்ஸ்வெல் இருந்திருந்தால் இன்று ஆட்டமே வேறு மாதிரி மாறியிருக்கும். அடுத்தடுத்து வரவிருக்கும் உலகக்கோப்பைகளில் கோலியின் முக்கிய துருப்புச்சீட்டாக நடராஜன்தான் இருக்கப்போகிறார்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியை இந்தியா வென்றிருப்பதன் மூலம் 1-0 என இந்த தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகளும் சிட்னியில் வைத்து நடைபெற இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism