Published:Updated:

’3 பிளைட்டில் பறந்து வந்து சர்ப்ரைஸ் கொடுத்த தோனி’ - மந்தீப் சிங் ஷேரிங்ஸ்

தோனி
தோனி

'அந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் கனவு நிறைவேறியதுபோல் இருந்தது' என மந்தீப் சிங் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

திருமணம் எல்லோருடைய வாழ்விலும் ஒரு அழகான தருணம். நம்ம வீட்டுலயே திருமண ஆல்பம் எடுத்தால் அப்பா-அம்மாவுக்கு ஒரு வெட்கம் வந்துவிடும். பசுமையான நினைவுகள் அதில் புதைந்திருக்கும். இந்தியக் கிரிக்கெட் வீரர் மந்தீப் சிங், தன்னுடைய கல்யாணத்தில் கலந்துகொண்ட ஒரு ஸ்பெஷல் செலிபிரிட்டி குறித்து இப்போது மனம் திறந்துள்ளார். மந்தீப் சிங்கின் திருமணம் 2016-ல் தான் நடந்தது. இந்த லாக்டெளன் நேரத்தில் கொஞ்சம் அவருடைய திருமணம் தொடர்பான பசுமையான நினைவுகளை அசைப்போட்டுள்ளார்.

மந்தீப் சிங்
மந்தீப் சிங்

அந்த செலிபிரிட்டி யாருங்கிற சீக்ரெட் இங்கயே சொல்லிடுறோம். மந்தீப் கல்யாணத்துக்கு வந்தது வேறுயாரும் இல்ல, நம்ம தல ’தோனி’ தான். மந்தீப் அழைப்பை ஏற்று தோனி பல சாகசங்களைச் செய்து திருமணத்துக்கு வந்துள்ளார். தோனி வருவாருன்னு கூட மந்தீப்புக்கு தெரியவில்லை. தோனி கொடுத்த சர்ப்பரைஸ்தான் மந்தீப் மனதில் இன்றளவும் நிலைத்திருக்கிறது.

`வடகொரியாவின் ஃபர்ஸ்ட் ஃபீமேல் டிக்டேட்டர்’ – உலகமே எதிர்நோக்கி இருக்கும் கிம் யோ ஜாங் யார்?

``என்னுடைய திருமணம் 2016 டிசம்பர் மாதம் நடந்தது. தோனிக்கு அழைப்பு விடுத்திருந்தேன். ஆனால், அவர் கண்டிப்பாக வருவேன் என எதுவும் கூறவில்லை. அவர் அப்ப ரொம்ப பிஸியாக இருந்தார். அந்தச் சமயத்தில் கண்டிப்பா நியூயார்க் போகனும் அப்படின்னு சொன்னார். ஆனால் என்னுடைய திருமணத்துக்கு வந்து எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அந்த பிஸியான நேரத்திலும் எனக்காக நேரம் ஒதுக்கியது மறக்க முடியாத தருணம்.

தோனி, மந்தீப் சிங்
தோனி, மந்தீப் சிங்
முச்சதம் சேவாக்;  இர்பான் அசத்தல்.. ஆனாலும் பாகிஸ்தானே உச்சரிச்ச பெயர்! - நெஹ்ராவின் `2004’ சீக்ரெட்

ராஞ்சியில இருந்து 3 விமானங்களில் பயணம்செய்து வந்துள்ளார். அது குளிர்காலம். அந்தக் கடுமையான நேரத்திலும் சாலையில் 2 மணிநேரம் பயணம்செய்து திருமணத்துக்கு வந்திருந்தார். இது அவரது எளிமையைக் காட்டுகிறது. நான் தோனியின் தலைமையில் சில போட்டிகளில்தான் விளையாடியுள்ளேன்.

அந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் கனவு நிறைவேறியதுபோல் இருந்தது. நாங்கள் ஒன்றாக அமர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடுவோம். தான் ஒரு பெரிய ஆள் என்பது போல் அவர் நடந்துகொண்டதே இல்லை. பிரியாணி ஆர்டர் செய்து, நாங்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம். தோனியோடு நேரம் செலவிடுவது மகிழ்ச்சியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு