Published:Updated:

`இதுலயும் தோனி தான் டாப்.. ஆனால்?!'- அதிர்ச்சி கொடுத்த சைபர் பாதுகாப்பு அறிக்கை

தோனி

ஆன்லைனில் பிரபலங்களை தேடும் போது தவறான இணையதளத்துக்கு மறைமுகமாக இழத்துச் செல்லப்படுவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

`இதுலயும் தோனி தான் டாப்.. ஆனால்?!'- அதிர்ச்சி கொடுத்த சைபர் பாதுகாப்பு அறிக்கை

ஆன்லைனில் பிரபலங்களை தேடும் போது தவறான இணையதளத்துக்கு மறைமுகமாக இழத்துச் செல்லப்படுவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Published:Updated:
தோனி

கிரிக்கெட் வீரர்கள் மீது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மோகம் இருக்கிறது. இந்தியக் கிரிக்கெட்டின் கடவுள் என போற்றப்படும் சச்சின் ஓய்வு பெற்று விட்டாலும் அவரை பற்றி ரசிர்கள் இணையத்தில் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சச்சின் சாலையில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடியது முதல் சுந்தர் பிச்சையுடனான சந்திப்பு வரை எல்லாமே ஹிட் ரகங்கள் தான். தோனி குறித்து கேட்கவே வேண்டாம். அதுவும் கடந்த சில ஆண்டுகளாக தோனி ஹாட் டாப்பிக்காக இருக்கிறார்.

தோனி
தோனி

தோனிக்கு இருப்பது போலவே அவரது மகள் ஸிவாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றன. சினிமா, அரசியல், விளையாட்டு போன்ற துறைகளை சேர்ந்த பிரபலங்களை இணையத்தில் தேடும் போது தவறான இணையதளத்துக்கு மறைமுகமாக இழத்துச் செல்லப்படுவதாக சைபர் பாதுகாப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மெக்கபீ (McAfee) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் மகேந்திர சிங் தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர் பெயர்களை தேடும்போது அதிகமான நபர்கள் தவறான இணையத்தளங்களுக்கு இழுத்துச்செல்லப்படுவது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் தோனி, சச்சின் டெண்டுல்கரின் பெயர்கள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக நடிகை ராதிகா ஆப்தே, ஷர்தா கபூர் விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து, ஹர்மன் ப்ரீத் கவுர் கிறிஸ்டியானோ ரோனால்டோ ஆகியோரின் பெயர்களும் இந்தப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ரியால்டி ஷோக்களை தொகுத்து வழங்கும் சில தொகுப்பாளர்களின் பெயர்களும் இதில் இடம்பிடித்துள்ளன.

ஹேக்கர்ஸ்
ஹேக்கர்ஸ்

இன்றைய டிஜிட்டல் உலகில் இளம் தலைமுறையினர் பெரும்பாலானவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் உள்ளது. குறைந்த விலையில் இண்டர்நெட் வசதிகளும் கிடைக்கிறது. ஆன்லைனில் நீண்ட நேரம் செலவழிக்கும் இந்த இளைஞர்கள் தான் சைபர் குற்றவாளிகளின் டார்கெட்டாக இருக்கிறது. வெறொரு தளத்துக்கு செல்வதற்காக க்ளிக் செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும். பாதுகாப்பற்ற இணையத்தளங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். சட்டவிரோத ஸ்ட்ரீமிங் தளங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பரவலாக கிடைக்கக்கூடிய பாதுகாப்பு தயாரிப்புகளைப் பயன்படுத்தவும் என மெக்கபீ எச்சரித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism