Published:Updated:

`இந்தியாவின் மோஸ்ட் சக்ஸஸ்ஃபுல் கேப்டன் தோனிதான்!' -காரணம் பகிரும் ரோஹித் ஷர்மா

தோனி - ரோஹித் ஷர்மா
தோனி - ரோஹித் ஷர்மா

'இந்தியாவின் சிறந்த கேப்டன் மகேந்திரசிங் தோனி' என இந்திய அணியின் தற்போதைய துணை கேப்டன் ரோஹித் ஷர்மா புகழாரம் சூட்டியிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பின்னர், சர்வதேசப் போட்டிகளில் தோனி விளையாடவில்லை. இதனால், தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என்ற பேச்சு எழுந்தது. அதேபோல், பிசிசிஐ வெளியிட்ட வீரர்களுக்கான வருடாந்தர ஒப்பந்தப் பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

`தோனி பெயர் மிஸ்ஸிங்; டாப் கிரேடில் கோலி, ரோஹித் ஷர்மா!' - பிசிசிஐ-யின் வீரர்கள் ஒப்பந்தப் பட்டியல்
தோனி
தோனி
இந்தியா பார்த்ததிலேயே சிறந்த கேப்டன் தோனி. அதற்குக் காரணம், கடினமான சூழல்களிலும் நிதானமாக அவர் சிந்திப்பதே.
ரோஹித் ஷர்மா

இந்த நிலையில், 'இந்தியா பார்த்த கேப்டன்களிலேயே சிறந்த கேப்டன் தோனி' என ரோஹித் ஷர்மா புகழ்ந்திருக்கிறார். இந்திய அணி, தோனி தலைமையில் 2007-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு ஐசிசி -யின் சாம்பியன்ஸ் டிராபி என ஐசிசி நடத்தும் மூன்று தொடர்களிலும் வாகை சூடியிருக்கிறது. மேலும், ஐபிஎல் தொடரில் அவரது தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணி, 2010, 2011 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றது. அதேபோல், 2010 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் தொடரில் வென்றது.

தோனி குறித்துப் பேசிய ரோஹித் ஷர்மா, ``எம்.எஸ். தோனி, அப்படித்தான் இருப்பார் என்று இந்தியா முழுமைக்கும் தெரியும். கிரிக்கெட் போட்டிகளின் கடினமான சூழ்நிலைகளில் அமைதியாகவும் தெளிவாகவும் சிந்திக்கும் திறன் பெற்றவர் தோனி. அதுவே, கடினமான சூழல்களில் சிறப்பான முடிவுகளை எடுக்க அவருக்கு உதவியிருக்கிறது. இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனிதான். ஐசிசி நடத்தும் 3 தொடர்களிலும் சாம்பியன் மற்றும் ஐபிஎல் தொடரில் 3 முறை சாம்பியனானது அவரது தலைமையிலான அணி. இந்தியா பார்த்ததிலேயே சிறந்த கேப்டன் அவர்தான்.

‘அந்த 2 இன்ச் இடைவெளி.. தினமும் எனக்குள் எழும் கேள்வி!’- ரன் அவுட் குறித்து மனம் திறந்த தோனி
தோனி
தோனி

இளம் பந்துவீச்சாளர்கள் பலரையும் அவர் ஊக்கப்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். கடினமான சூழலில், அந்த பந்துவீச்சாளர்களின் அருகில் சென்று, அவர்களின் தோளில் கையைப்போட்டு, என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக் கூடாது என்பதைப் பொறுமையாக விளக்குவார். அணியின் சீனியர் வீரர் ஒருவரால் இளம் வீரர் ஒருவர் அப்படி நடத்தப்படும்போது, அணியின் வெற்றிக்குத் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யவே அந்த இளம் வீரர் முயல்வார்'' என்றார்.

பின் செல்ல