Published:Updated:

`பிசிசிஐ அணுகலாம்; தோனிதான் முடிவு எடுக்கணும்!’ - ராஜீவ் சுக்லா

தோனி
தோனி

'கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவது குறித்து தோனிதான் முடிவுசெய்ய வேண்டும்' என ராஜீவ் சுக்லா கருத்து தெரிவித்திருக்கிறார்.

தோனியின் ஓய்வுகுறித்து நிறைய சர்ச்சைகள் சுற்றிவருகின்றன. முன்னாள் வீரர்கள் சிலரோ, தோனி ஓய்வெடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என அவ்வப்போது கருத்து தெரிவிக்கின்றனர். அவ்வப்போது கோலி, ரவிசாஸ்திரி ஆகியோர் தோனியிடம் பேசியுள்ளனர் என்ற தகவல் மட்டும் வெளியே வருகிறது. என்ன உரையாடல் நடந்தது என்பது வெளிவரவில்லை. தோனி, ஓய்வு அறிவிப்பை வெளியிடப்போகிறார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்' என்கிறது பிசிசிஐ.

தோனி ரன் அவுட்
தோனி ரன் அவுட்

உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில், தோனி ரன் அவுட்டாகி மைதானத்தை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் களத்துக்குத் திரும்பவில்லை. எல்லோரும் தோனியைக் குறிவைத்தே பேசுகிறார்கள். ஆனால் அவரோ மவுனம் காத்துவருகிறார். பிசிசிஐ வெளியிட்ட வீரர்களின் ஒப்பந்தப் பட்டியலில் தோனி பெயர் இல்லை. இது, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. `ஒப்பந்தப் பட்டியலில் தோனி பெயர் இல்லை என்பதற்காக, அவர் இந்திய அணியில் விளையாட மாட்டார் எனப் பொருளில்லை' என்று நழுவலான பதிலை அளித்தது பிசிசிஐ.

இந்தநிலையில், ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா, தோனி ஓய்வு குறித்து பேசியுள்ளார்.``தோனி மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர். இன்னும் சில காலம் அவர் விளையாட வேண்டும். தோனி எப்போது ஓய்வு பெறவேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். ஒரு வீரர் எப்போது ஓய்வுபெறுகிறார் என்பதை அறிய பிசிசிஐ அவரை அணுகலாம். வீரர்கள் ஓய்வு தொடர்பாக பிசிசிஐ வரையறைகள் ஏற்கெனவே இருக்கின்றன” என்றார்.

தோனி
தோனி

தோனிக்காக ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தோனி ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். சிஎஸ்கே கேப்டனான தோனி, இந்த ஆண்டு ஐபிஎல்-லில் அவர் வெளிப்படுத்தும் ஆட்டத்தைப் பொறுத்தே அவரது கிரிக்கெட் எதிர்காலம் இருக்கும் என்றும் பேசப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு