Published:Updated:

அணியின் உட்தகவல்களைப் பகிர்ந்தால் பணம் தருவதாக மிரட்டிய நபர் - புகார் அளித்த முகமது சிராஜ்!

முகமது சிராஜ்

முகமது சிராஜ், சூதாட்டம் தொடர்பாகத் தன்னை ஒருவர் அணுகியதாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்திருக்கிறார்.

Published:Updated:

அணியின் உட்தகவல்களைப் பகிர்ந்தால் பணம் தருவதாக மிரட்டிய நபர் - புகார் அளித்த முகமது சிராஜ்!

முகமது சிராஜ், சூதாட்டம் தொடர்பாகத் தன்னை ஒருவர் அணுகியதாக பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்திருக்கிறார்.

முகமது சிராஜ்

வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார்.

சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது கிரிக்கெட் சூதாட்டத்தால் பணத்தை இழந்த நபர் ஒருவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடக்கும் உட்தகவல்களை தன்னிடம் பகிர்ந்து கொண்டால் பெரிய தொகை தருவதாக முகமது சிராஜிடம் கூறியிருக்கிறார்.

முகமது சிராஜ்
முகமது சிராஜ்

இது தொடர்பாக உடனடியாக முகமது சிராஜ், பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவிற்குப் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் அந்த நபரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அந்த நபர் ஹைதராபாத்தைச் சேர்ந்த டிரைவர் என்று தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் பந்தயம் கட்டி கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் எல்லா பணத்தையும் இழந்த நிலையில், முகமது சிராஜை அணுகியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து சிராஜ் அளித்த புகாரின் பேரில் அவர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த டிரைவரைக் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.